நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாக்கி உள்ள ‘ஹே சினாமிகா’ திரைப்படத்தின் அச்சமில்லை பாடல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை நடன இயக்குனர் பிருந்தா இயக்கி உள்ளார். ‘96’ புகழ் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் கதையை மதன் கார்க்கி எழுதி உள்ளார்.
3 நிமிடம் 45 நொடிகள் ஓடும் இந்த பாடலை நடிகர் துல்கர் சல்மான் பாடி உள்ளார். இந்த படத்தில் நடிகைகள் காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் நடித்துள்ளனர். பிப்ரவரி மாதத்தில் படத்தை வெளியட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ஜியோ ஸ்டூடியோஸ், குளோபல் ஒன் ஸ்டூடியோஸ், Viacom 18 ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM