உத்தர் அரசியல்: வெல்லப்போவது யோகியா... அகிலேஷா?! - மினி தொடர் | பகுதி 1

0

உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, பரபரப்புகளைப் பார்த்துவந்த உத்தரப் பிரதேசம், தற்போது அதிரடிக் காட்சிகளைத் தினந்தோறும் கண்டுவருகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்தப் பார்வையும் வடக்கு நோக்கித் திரும்பியிருக்கிறது. ‘உத்தர்’ என்றால் இந்தியில் ‘வடக்கு’. வட திசையில் அமைந்துள்ள மாநிலம் என்பதால் அது, ‘உத்தரப் பிரதேசம்’.

வரைப்படம்

பரப்பளவில் பெரிய மாநிலம். இந்தியாவிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமும்கூட. அதாவது, பாகிஸ்தான் மக்கள்தொகைக்கு இணையானது. உ.பி வாசிகளின் எண்ணிக்கை 20 கோடியைத் தாண்டுகிறது. அதனால், தேசிய அரசியலில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. இன்னொரு முக்கியத்துவமும் உண்டு. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹ்ர்லால் நேரு தொடங்கி, தற்போதைய மோடி வரை, 9 பிரதமர்களைத் தந்த மாநிலம் இது. அதாவது, அந்த 9 பேரும் இங்கிருந்து எம்.பி-யாகி பிரதமர் ஆனவர்கள்.

மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கை முடிவுசெய்யப்படுவதால், உத்தரப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகளும் நாடாளுமன்றத் தொகுதிகளும் பிற மாநிலங்களைக் காட்டிலும் அதிகம். தமிழ்நாட்டுக்கும் உ.பி-க்குமான வித்தியாசத்தைப் பார்ப்போம். இந்தியாவில் பெரிய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு, 234 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது. உ.பி-யோ, 403 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது.

மோடி

தமிழ்நாடு 39 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளைக் கொண்டது என்றால், உ.பி-யின் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை, அதில் இரண்டு மடங்கு. உ.பி, 80 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டிருக்கிறது. எனவேதான், தேசிய அரசியலில் உத்தரப் பிரதேசம் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. உ.பி சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி ஜெயிக்கிறதோ, அந்தக் கட்சிதான், அடுத்ததாக நடைபெறக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் என்ற நிலையும், உ.பி-யின் அரசியல் முக்கியத்துவத்தை அதிகரிக்கச் செய்கிறது.

அந்த வகையில், 2017 உ.பி சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற பா.ஜ.க., அதையடுத்து 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியமைத்தது. அது, சாதாரண வெற்றி அல்ல. 303 இடங்களைப் பிடித்து, அறுதிப் பெரும்பான்மையுடன் மத்தியில் பா.ஜ.க அமர்ந்தது.

உ.பி-யில் 62 நாடாளுமன்றத் தொகுதிகளைப் பிடித்ததால்தான், அகில இந்திய அளவில் அவ்வளவு பெரிய வெற்றி பா.ஜ.க-வுக்கு கிடைத்தது. 2014, 2019 ஆகிய நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்களில் தொடர்ச்சியாகப் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, 2024-ல் நடக்கப்போகும் நாடாளுமன்றத் தேர்தலிலும் வென்றுவிட வேண்டும் என்பது பா.ஜ.க-வின் கணக்கு.

அமித் ஷா

மத்தியில் ஹாட்ரிக் வெற்றியைப் பெற வேண்டும் என்று துடிக்கும் பா.ஜ.க., அதற்காக உ.பி சட்டமன்றத் தேர்தலில் படு தீவிரமாக இயங்குகிறது. தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு பல வாரங்களுக்கு முன்பாகவே, பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உ.பி-யில் சூறாவளியாக சுழல ஆரம்பித்துவிட்டனர். அவர்கள் இருவரும் கடந்த மூன்று மாதங்களில் டெல்லிக்கும் உ.பி-க்கும் மாறி மாறிப் பறந்து, பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தார்கள்.

பொதுவாகவே, சட்டமன்றத் தேர்தல் நடைபெறப்போகிற மாநிலங்களுக்கு அடிக்கடி விசிட் அடித்து வளர்ச்சித் திட்டங்களை அறிவிப்பதும், தொடங்கிவைப்பதும் பிரதமர் மோடியின் வழக்கம். அந்த வகையில், மேம்பாலம், நெடுஞ்சாலை, மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களை உ.பி-யில் திறந்தும், தொடங்கியும் வைத்திருக்கிறார். வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தை பல கோடி செலவில் புதுப்பித்ததுடன், கோலாகலமான விழாவை எடுத்து அதை அவர் திறந்துவைத்தார்

‘பூர்வாஞ்சல்’ என்று அழைக்கப்படும் கிழக்கு உத்தரப்பிரதேசத்தில்தான், தற்போது பா.ஜ.க-வின் முழு கவனமும் இருக்கிறது. ஓ.பி.சி., தலித், முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியான மேற்கு உத்தரப் பிரதேசத்தை, இம்முறை பா.ஜ.க அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. அங்குதான், விவசாயிகள் போராட்டம் தீவிரமாக நடைபெற்றது என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.

முதல்வர் யோகி ஆதித்யநாத், கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள கொரக்பூரைச் சேர்ந்தவர். அங்குதான், மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் தொடங்கிவைத்தார். ரூ.4,672 கோடி செலவில் 27.84 கி.மீ தொலைவுக்கான மெட்ரோ ரயில் திட்டப் பணிக்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. திட்டப்பணி 2024-ல் நிறைவடையுமாம். 2024-ல்தான் நாடாளுமன்றத் தேர்தலும் வரப்போகிறது.

யோகி ஆதித்யநாத்

பல முறை கொரக்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற யோகி, முதன் முறையாக கொரக்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். கொரக்பூரில் உரத்தொழிற்சாலை அமைப்பதற்கு பிரதமர் அடிக்கல் நாட்டியிருக்கிறார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் மட்டுமே நாட்டிவிட்டுச் சென்ற பிரதமர் மோடி, கொரக்பூரில் 750 படுக்கைகள் கொண்ட ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையைத் திறந்துள்ளார். கொரக்பூரில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த மோடிக்கு நன்றி நவிழ்ந்தார் யோகி. எதிர்க்கட்சியினரோ , வருகிற சட்டமன்றத் தேர்தலுக்குத்தான் நன்றி தெரிவிக்க வேண்டும். வளர்ச்சித் திட்ட அறிவிப்புகளும் தொடக்க விழாக்களும் கடைசி நேரத்தில் விறுவிறுப்படைந்ததற்கு, தேர்தல் தானே காரணம்.

ஓர் உரத்தொழிற்சாலை வருவதாலும், ஒரு எய்ம்ஸ் வருவதாலும் ஓரிடத்தில் மெட்ரோ ரயில் திட்டம் வருவதாலும், சில நெடுஞ்சாலைத் திட்டங்கள் வருவதாலும் உ.பி சொர்க்கபுரியாகிறது என்று சொல்வதற்கில்லை. ஒன்பது பிரதமர்களைத் தந்த உத்தரப் பிரதேசம், இன்றைக்கும்கூட ஏழ்மையிலும் எழுத்தறிவின்மையிலும் இந்தியாவிலேயே ‘முதன்மை’ மாநிலமாகத்தான் இருக்கிறது.

மோடி அரசு உருவாக்கிய நிதி ஆயோக் சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில், தமிழ்நாட்டில் மிகவும் பின்தங்கிய புதுக்கோட்டை மாவட்டத்தைக் காட்டிலும் ஏழைகள் அதிகம் நிறைந்த மாவட்டமாக பிரதமர் மோடியின் வாரணாசி இருப்பதாகப் புள்ளிவிவரங்களுடன் சொல்லப்பட்டுள்ளது.

அகிலேஷ் யாதவ்

ஆனால், உத்தரப் பிரதேசம் பின்தங்கிக் கிடப்பதற்கான உண்மைக் காரணங்களை ஆராய்ந்து, வளர்ச்சிக்கான பாதையை வகுப்பதில் இருக்கும் ஆர்வத்தைக் காட்டிலும், சமூகப் பதற்றத்தை ஏற்படுத்துவதில்தான் தலைவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கிறது. பாபர் மசூதி - ராம ஜென்மபூமி வழக்கு உச்ச நீதிமன்றத்தால் முடித்துவைக்கப்பட்டு, அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுவரும் சூழலில், ‘கரசேவகர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்?’ என்றெல்லாம் உரையாற்றுவது, அமைதியைச் சீர்குலைத்துவிடாதா?

உத்தரப் பிரதேசத்தின் இன்றைய நிலைக்கான காரணங்களை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அந்த மாநிலம் கடந்துவந்த 70 ஆண்டுகால அரசியலையும் அதில் கோலோச்சிய பெருந்தலைகளையும் திரும்பிப் பார்ப்பது முக்கியம்... அவர்களின் அரசியலை அலசுவதும் அவசியம்!

(உத்தர் அரசியல்.... அலசுவோம்)


மேலும் படிக்க உத்தர் அரசியல்: வெல்லப்போவது யோகியா... அகிலேஷா?! - மினி தொடர் | பகுதி 1
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top