தனுஷின் ‘வாத்தி’ படப்பிடிப்பு துவங்கியது : படக்குழு வெளியிட்ட அப்டேட்

0

நடிகர் தனுஷின் ‘வாத்தி’ படப்பிடிப்பு துவங்கியதாக படக்குழு, தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளதால், அவரின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

‘துருவங்கள் பதினாறு’, ‘நரகாசூரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் நரேன், தற்போது தனுஷை வைத்து 'மாறன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

அடுத்ததாக கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், ‘நானே வருவேன்’ படத்தில் நடித்து வரும் நடிகர் தனுஷ், முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து தமிழ் - தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும், ஒரே நேரத்தில் தயாராகும் ஒரு படத்தில் தனுஷ் ஒப்பந்தமானார். இப்படத்தை ‘தோழி ப்ரேமா’, ‘ரங் தே’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கட் அட்லுரி இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்துக்கு தமிழில் ‘வாத்தி’ என்றும்,  தெலுங்கில் ‘சார்’ என்றும் தலைப்பிடப்பட்டுள்ளது.

image

இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். ‘வாத்தி’ படத்தின் பூஜை கடந்த 3-ம் தேதி நடந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதனை படக்குழு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், படத்தின் ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் தனுஷ் கல்லூரி மாணவர் போன்ற கெட்டப்பில் தோன்றியுள்ளார்.

இப்படத்தில் நடிகர் தனுஷ் கல்லூரி பேராசிரியராக நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது கல்லூரி மாணவர் கெட்டப்பில் தோன்றியுள்ள இந்தப் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும், தனுஷின் ஹாலிவுட் திரைப்படமான ‘தி கிரே மேன்’ வரும் ஜூலை மாதம் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வந்தநிலையில், அடுத்ததாக ‘வாத்தி’ படப்பிடிப்பும் துவங்கியுள்ளதால், அவரின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

image

தொடர்புடைய செய்தி : தனுஷின் ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் திரைப்படம் : ஜூலையில் வெளியிட நெட்பிளிக்ஸ் திட்டம்?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top