தமிழகத்துக்கே பெருமை சேர்க்கும் பவானி ஜமுக்காளம்..!

0

'தென்னகத்தின் காசி’ என்றழைக்கப்படும் காவிரி - பவானி மற்றும் கண்ணுக்குத் தெரியாத ஓர் அமிர்த நதி என மூன்று நதிகளும் சங்கமிக்கிற இடம்; ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த புகழ்பெற்ற சங்கமேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள ஊர் என ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி நகரம் பல்வேறு சிறப்புகளைத் தாங்கி நிற்கிறது. இத்துடன், பவானி நகரத்தையே ‘ஜமுக்காள நகரம்’ என்று அழைக்கும் அளவுக்கு, இங்கு உற்பத்தி செய்யப்படும் கைத்தறி ஜமுக் காளங்கள் உலக அளவில் புகழ் பெற்றவையாக இருக்கின்றன.

மஞ்சள் மாநகரமான ஈரோட்டில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் இருக்கிறது பவானி நகரம். கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்னர் பவானி சுற்றுவட்டாரத்தில் திரும்பும் இடங்களிலெல்லாம் தறிச்சத்தங்களே தாலாட்டாக ஒலித்திருக்கின்றன. பவானி, குருப்பநாயக்கன்பாளையம், பெரிய மோலப் பாளையம், தளவாய்பேட்டை, ஓரிச்சேரி, ஆப்பக்கூடல், சேத்துனாம்பாளையம், பிரம்ம தேசம், தவிட்டுப்பாளையம், அந்தியூர், ஆலாம் பாளையம், வெள்ளித்திருப்பூர் போன்ற கிராமங்களில் 10,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்தக் கைத்தறி ஜமுக்காளத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

பவானியில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக நெசவுத் தொழிலே பிரதானமாக இருந்துள்ளது. பருத்தி, கம்பளி, செயற்கைப் பட்டு போன்ற வற்றைப் பயன்படுத்தி பவானியில் ஜமுக்காளம் செய்யப்படுகிறது. இயந்திரங்களின் உதவியின்றி முழுக்க முழுக்க கையாலேயே உற்பத்தி செய்யப்படுவதுடன், நீடித்து உழைக்கக் கூடியது, கண்களைக் கவரும் வண்ணம் போன்றவையே பவானி ஜமுக்காளத்தின் இந்த பெரும் புகழுக்குக் காரணம்.

இன்றைக்கும் தாம்பூலம் மாற்றிக்கொண்டு நிச்சயம் செய்வதில் ஆரம்பித்து திருமணம், வளைகாப்பு, காதுகுத்து, ஊர் கிராம பஞ்சாயத்து, கோயில் திருவிழாக்கள், கிராம சபை எனத் தமிழகர் களின் சுப காரியங்கள் அனைத்திலும் இந்த ஜமக்காளமானது தவிர்க்க முடியாத ஒரு பண்பாட்டு அம்சமாக இருக்கிறது. இப்படிப் புகழ்பெற்ற பவானி ஜமுக்காளத்துக்கு 2006-ம் ஆண்டு புவிசார் குறியீடு கிடைத்தது.

சேலை, போர்வை, துண்டு போன்றவை எல்லாம் ஒரு ஆள் மட்டுமே நெசவு செய்வார்கள். ஆனால், இந்த பவானி ஜமுக்காளங்கள் குழித்தறி முறையில் ஜமுக்காளங்களின் சைஸுக்கு ஏற்ப 2 - 3 பேர் வரை ஒரு ஜமுக்காளத்தை நெசவு செய்கிறார்கள். ஜமுக்காளத்தின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு நூலை வீசி வீசி கையாலேயே நெய்வதைப் பார்க்கையில் நமக்கே மூச்சிரைத்துப்போகும்.

செல்வராஜ்

28 X 72, 34 X 72, 40 X 78, 46 X 84, 52 X 90, 60 X 90 என பல இன்ச் அளவுகளில் ஜமுக்காளங்கள் பவானியில் தயாரிக்கப்படுகின்றன. 300 ரூபாயில் இருந்து ஒவ்வொரு அளவிலான ஜமுக்காளத்துக்கும் இன்ன ரேட் என நிர்ணயித்துள்ளனர். இதற்கு மேல் ‘ஹால் கார்பெட்’ எனப்படும் பெரிய அலவிலான ஜமுக்காளங்கள் என்ன அளவுக்கு வேண்டுமோ, அந்த அளவுக்கு ஆர்டரின் பேரில் நெசவு செய்து தருகின்றனர். அதிகபட்சமாக 25 அடி நீளம், 16 அடி அகலம் வரையிலும் ஜமுக்காளத்தை நெசவு செய்து தருகின்றனர். இவற்றுக்குத் தோராயமாக ஒரு சதுர அடிக்கு 20 ரூபாய் ஆகும். தரை விரிப்புக்கான ஜமுக்காளங்கள் மட்டுமல்லாமல், பந்திப் பாய், ஈ.சி.சேர், சிட்டிங் மேட் போன்றவையும் பவானியில் தயாரிக்கப்படுகின்றன.

இதுபோக, பவானியில் தயாரிக்கப்படும் பட்டு பார்டர் ஜமுக்காளங்கள் மிகவும் புகழ்பெற்றவை. இந்தப் பட்டு ஜமுக் காளங்களில் பெயர், கடவுளின் உருவங்கள், பிரமுகர்களின் உருவங்கள், இயற்கைக் காட்சிகள் போன்றவை கையாலேயே நெய்து தரப்படுகின்றன. பவானி சங்கமேஸ்வரர் கோயிலுக்கு ஆடிப்பெருக்கு, தை அமாவாசை, ஐயப்ப சீஸன் எனத் தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களில் இருந்துவரும் பக்தர்களில் பலரும் இந்தப் பவானி ஜமுக்காளங்களை வாங்கிச் செல்கின்றனர்.

அங்கமுத்து, நாகராஜன்

பவானியைச் சுற்றி சுமார் 30 கூட்டுறவு நெசவாளர் சங்கங்கள் இருக்கின்றன. இவற்றிலோ, ஜமுக்காளம் தயாரிக்கும் தறிப்பட்டறைகளிலோ நேரடி யாக பொதுமக்கள் வாங்கலாம். கைத்தறித் தொழிலை ஊக்கு விக்கும் வகையில் தமிழக அரசாங்கம் ஒவ்வோர் ஆண்டும் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதியிலிருந்து ஜனவரி 31-ம் தேதி வரை, நெசவாளர் கூட்டுறவு சங்கங் களில் இந்தக் கைத்தறி ஜமுக் காளத்தை வாங்கும் வாடிக்கை யாளர்களுக்கு 30% தள்ளுபடி கொடுக்கிறது.

பவானியில் 45 வருடங்களாகக் கைத்தறி ஜமுக்காள நெசவு செய்துவரும் செல்வராஜிடம் பேசினோம். “ஒரு பவானி ஜமுக் காளம் வாங்குனா குறைஞ்சது 20 வருஷம் உழைக்கும். பச்சை, மஞ்சள், வெள்ளை, ஆரஞ்ச், சிகப்பு, பிரவுன், ஊதா என ஜமுக்காளங்கள் இந்த ஏழு கலர்லதான் பாரம்பர்யமா செய்றாங்க. இன்னைக்கு நிறைய டிசைன்ல, நிறைய கலர்ல வர ஆரம்பிச்சிடுச்சு. தவிர, பட்டு ஜமுக்காளத்துல படங்கள், எழுத்துகள், ஓவியங்கள் வரையுறது பவானியோட தனிச் சிறப்பு.

ஒருநாளைக்கு ஒரு ரூபாய்ங்கிற தினக்கூலி கொடுத்ததுல இருந்து நான் இந்த ஜமுக்காளத்தை நெஞ்சுக்கிட்டு இருக்கேன். ஒரு நாள்பூரா கைவலிக்க நெசவு செஞ்சாலும் ஏழரை அடிதான் நெய்ய முடியும். ஒரு ஜமுக்காளத் துக்கு 270 ரூபாதான் கூலி கிடைக் கும். வேற வேலைக்குப் போனா குறைஞ்சது தினமும் 500 ரூபாயா வது சம்பாதிக்கலாம். அரசாங்கம் கொஞ்சம் கூலியை ஏத்தித் தந்தா பரவாயில்லை” என்றார்.

பவானியில் பட்டு பார்டர் ஜமுக்காளத்தை மிகச் சிலரே செய்து வருகின்றனர். அதில் ஒருவரான அங்கமுத்துவை சந்தித்துப் பேசினோம். “12 வயசுல இந்த நெசவுத் தொழிலுக்கு வந்தேன். இப்போ எனக்கு 81 வயசு. ஆரம்பத்துல சாதாரண ஜமுக்காளம்தான் செஞ்சுகிட்டு இருந்தேன். ஒருநாள் அதுலயே படம் போட்டா என்னன்னு செஞ்சு பார்த்தேன். அப்படித்தான் பட்டு பார்டர் ஜமுக்காளத்துல படங்கள் வரைய ஆரம்பிச்சேன். நீங்க என்ன படத்தைக் கொடுத்து கேட்டாலும், ஜமுக்காளத்துல அதைப் போட்டுத் தருவேன்.

அரசியல் தலைவர் படங்கள், கடவுள் உருவங்கள், இயற்கைக் காட்சிகள், திருமண வாழ்த்து மடல்கள், ஓவியங்கள் போன்றவற்றை நெசவு செஞ்சிருக்கேன். ஆரம்பத்துல ஆவாரம்பட்டை, கடுக்காயைப் போட்டு தான் ஜமுக்காளம் செய்ற நூலுக்கு சாயமேத்துனாங்க. அது கொஞ்ச நாள்லயே லேசா போக ஆரம்பிக்கும். அதுக்குப் பின்னாடிதான் விதவிதமான கலர் போகாத சாயங்கள் வந்துடுச்சு” என்றார்.

பவானியில் ஜமுக்காள தயாரிப்பில் அசத்திவரும் நாகராஜனுடன் பேசினோம். “தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் கைத்தறி நெசவாளர்களுக்கு 10% அடிப்படை ஊதிய உயர்வும், 10% அகவிலைப்படி உயர்வும் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கையில் கைத்தறி அமைச்சர் நெசவாளர்களுக்கு கடந்த ஆறு ஆண்டு காலமாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டு நெசவாளர்களுக்கு உதவுகிற வகையில் இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். இதை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்’’ என்றார்.

தமிழகத்துக்கே பெருமை சேர்க்கும் பவானி ஜமுக்காளம் நெய்யும் நெசவாளிகளின் துயரைத் தமிழக அரசு துடைக்குமா?

சித்தையன்

கைத்தறி நெசவாளர்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுகின்றனர்!

பவானி வட்டார கைத்தறி ஜமுக்காளம், பெட்ஷீட் நெசவாளர் மற்றும் சாயத் தொழிலாளர் சங்கச் (ஏ.ஐ.டி.யு.சி) செயலாளர் சித்தையனிடம் பேசினோம். “கைத்தறி நெசவாளர்களைக் காக்க வேண்டும் என்கின்ற நோக்கில் 11 ஜவுளி ரகங்களை கைத்தறி மூலம் மட்டுமே நெசவு செய்ய வேண்டும் எனக் கைத்தறி ரக ஒதுக்கீட்டுச் சட்டம் வரையறுத்துள்ளது. இதில் ஜமுக்காளமும் அடக்கம். இதை விசைத்தறி மற்றும் மில்களில் உற்பத்தி செய்தால் அது சட்டவிரோதமான செயல் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், ஏழு எட்டு ஆண்டுகளாகக் கைத்தறி ஜமுக்காளத் தொழிலில் விசைத்தறி நுழைந்து தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் தயாராகும் விசைத்தறி ஹால் கார்பெட்டுகள், ஜமுக்காளங்கள் ஏராளமாகப் பவானிக்கு இறக்குமதி செய்யப்பட்டு, இவை அனைத்தும் பவானி கைத்தறி ஜமக்காளம் என நாடு முழுவதும் அனுப்பப்படுகின்றன. விசைத்தறி ஜமுக்காளங்கள் தரம் குறைந்தவை. இரண்டு, மூன்று ஆண்டுகளில் கிழிந்துவிடும். இவை பாதி விலையில் விற்கப்படுவதால், மக்கள் வாங்குகின்றனர். இதனால் ஜமுக்காள நெசவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் நூல் கொடுக்காமல் ஜமுக்காள உற்பத்தியை நிறுத்திவிடுகின்றனர். இதனால் கைத்தறி ஜமுக்காள நெசவாளர்கள் வேலையில்லாமல் கடந்த பல ஆண்டுக் காலமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.


மேலும் படிக்க தமிழகத்துக்கே பெருமை சேர்க்கும் பவானி ஜமுக்காளம்..!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top