சார், மேடம் வேண்டாம்; `டீச்சர்' போதும் கேரள பள்ளியின் அசத்தும் முயற்சி!

0

மாணவர்கள் ஆசிரியர்களை இனி சார் மேடம் என்று அழைக்கக்கூடாது! - கேரள பள்ளியின் அறிவிப்பு. கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள அரசு உதவி பெறும்‌ பள்ளி ஒன்றில், மாணவர்களிடம் ஆசிரியர்களை இனி சார் மேடம் என்று அழைக்கக்கூடாது! இரு பாலின ஆசிரியர்களையும் `டீச்சர்' என்றே அழைக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் வேணுகோபாலன், தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் சஞ்சீவ்குமார் இந்த கருத்தை முதன்முதலில் தெரிவித்ததாகவும்; சமூக ஆர்வலர் பூபன் மட்டுமன்தாவின் பிரசாரத்தைப் பார்த்து சஞ்ஜீவ் குமாருக்கு இந்த எண்ணம் தோன்றியதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் பள்ளியில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மாத்தூர் பஞ்சாயத்து. பஞ்சாயத்து அலுவலக அதிகாரிகளை மக்கள் சார் மேடம் என்று அழைக்க வேண்டிய அவசியமில்லை; அவர்களின் பதவியை சொல்லி அழைத்தால் போதும் என்று கூறியுள்ளது மாத்தூர் பஞ்சாயத்து நிர்வாகம். கடந்த ஜூலை மாதம் முதல் பின்பற்றி வருகிறது.

சமூக ஆர்வலர் பூபன்‌ மட்டுமந்தா

இந்த சம்பவத்தின் தாக்கமும்கூட எங்கள் பள்ளியின் இந்த முடிவுக்கு காரணம் என்று வேணுகோபாலன் கூறியுள்ளார். இந்த உத்தரவிற்கு பெற்றோர்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைக்கப் பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த டிசம்பர் 1 முதல் இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப் பட்டதாகவும் தற்போது மாணவர்கள் சார், மேடம் என்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை அறவே நிறுத்தி விட்டதாகவும் தலைமையாசிரியர் வேணுகோபாலன் பெருமிதத்துடன் கூறியுள்ளார். பாலக்காட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பூபன்‌ மட்டுமந்தா அனைத்து பள்ளிகளிலும், மாணவர்கள் ஆசிரியர்களை சார் மேடம் என்று அழைக்காமல் `டீச்சர்' என்ற பாலின நடுநிலையைக் குறிக்கும் வார்த்தையைக் கொண்டு அழைக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது ,பள்ளிகளில் மாணவர்கள் சார் மேடம் என்று அழைப்பது பாலின வேறுபாடு உணர்வை நியாயப்படுத்தும் விதமாக இருப்பதாகவும், இது குடியுரிமை உணர்வை தடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சார், மேடம் என்று அழைப்பதற்கு பதில் `டீச்சர்' என்று அழைப்பது பாலின சமநிலைக்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கைத் தொடர்ந்து கேரள பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறை பொதுமக்களிடம் இதுகுறித்து கருத்து கேட்க முடிவு செய்தது. கல்வித்துறை அமைச்சர் வி.சிவன் குட்டி தலைமையில் ஒரு குழுவை நியமித்து செயல்பட்டு வருகிறது. இது குறித்து பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கருத்துக்கள் கேட்ட பின்னர் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கல்வி துறை கூறியுள்ளது.

இந்நிலையில் ஒலசேரி (கொடும்பா) கிராமத்தில் உள்ள இந்த அரசு உதவி பெறும் பள்ளி தான் கேரள மாநிலத்திலேயே முதன்முதலில் ஆசிரியர்களை டீச்சர் என்று அழைக்கக்கூறி பாலின சமநிலையை ஊக்குவித்த முதல் பள்ளியாகும். பள்ளியின் இந்த செயல் வரவேற்கத்தக்கதாகும் பிற பள்ளிகளுக்கு முன்னுதாரணமாகவும் திகழ்கிறது. எந்த ஒரு பெரிய மாற்றத்தை சமூகத்தில் ஏற்படுத்த வேண்டுமெனில், அதை குழந்தை பருவத்திலேயே மனிதர்களிடம் புகட்ட வேண்டும் என்பதை நன்கு அறிந்து பாலின சமநிலையை ஊக்குவித்து வருகிறது கேரள மாநிலம்.
சமீபத்தில் கேரள அரசு, பள்ளிகளில் சென்டர் நியூட்ரல் யூனிஃபார்ம்களை அறிமுகப்படுத்தி பாலின சமத்துவத்தை ஊக்குவித்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க சார், மேடம் வேண்டாம்; `டீச்சர்' போதும் கேரள பள்ளியின் அசத்தும் முயற்சி!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top