`30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் டார்கெட்!’ - நாசா விஞ்ஞானி என 14 பெண்களிடம் திருமணம் செய்வதாக பண மோசடி

0

திருமண தகவல் இணைய தளங்களில் கிடைக்கும் தகவல்களை எடுத்து பெண்களிடம் மோசடி செய்யும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மும்பை அருகில் உள்ள கல்யாண் என்ற இடத்தை சேர்ந்த 35 வயது பெண் திருமணத்திற்காக தனது தகவல்களை திருமண தகவல் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். அதனை பார்த்த ஆதித்யா மாத்ரே என்பவர் 35 வயது பெண்ணுடன் தொடர்பு கொண்டு பேசினார். தான் இஸ்ரோவில் விஞ்ஞானியாக இருப்பதாக தெரிவித்தார். அதோடு தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்றும் உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் ஆசை வார்த்தை கூறினார். அப்பெண்ணும் அவரை நம்பினார். அடிக்கடி அவர்கள் போனில் பேசிக்கொண்டனர். ஒரு கட்டத்தில் தனக்கு சிறிய பணப்பிரச்னை ஏற்பட்டுள்ளது. பணம் கொடுத்து உதவினால் திரும்ப கொடுத்துவிடுவதாக ஆதித்யா அப்பெண்ணிடம் தெரிவித்தார். அப்பெண்ணும் தனது திருமணம் மற்றும் எதிர்காலத்திற்காக சேமித்து வைத்திருந்த 14.36 லட்சத்தை மாத்ரேயிடம் கொடுத்தார்.

மோசடி

ஆனால் மாத்ரே அதோடு நிறுத்தாமல் மேலும் 25 லட்சம் கேட்டார். இதனால் சந்தேகம் அடைந்த அப்பெண் தனது பணத்தை திரும்ப கொடுக்கும்படி கேட்டார். ஆனால் அதன் பிறகு அந்த நபர் தலைமறைவாகிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து மாத்ரேயை தேடி வந்தனர். மாத்ரே அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருந்தார். இதனால் போலீஸாரால் அவரை கைது செய்வது சிரமமாக இருந்தது. எனினும் அவரின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். கடைசியாக திருமண தகவல் இணைய தளத்தில் கிடைத்த ஒரு பெண்ணிடம் திருமணம் குறித்து பேசுவதற்காக நவிமும்பை செல்ல இருப்பது தெரிய வந்தது.

உடனே போலீஸார் மாத்ரேயை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் நவுஸ் மாத்ரே, தன்மே மாத்ரே, ஆதித்ய மாத்ரே என வேறு வேறு பெயர்களில் பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி பண மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது இவ்வழக்கை விசாரித்து வரும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``திருமண தகவல் இணைய தளத்தில் பதிவு செய்திருக்கும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களை மட்டுமே குறி வைத்து ஆதித்யா மாத்ரே செயல்பட்டுள்ளார். அப்பெண்களிடம் தான் இஸ்ரோ மற்றும் அமெரிக்காவின் நாசாவில் விஞ்ஞானி என்று கூறி வேறு வேறு பெயர்களில் அறிமுகம் செய்து கொள்வார்.

கைது

அப்பெண்ணின் நம்பிக்கையை பெற்ற பிறகு அப்பெண்ணிடம் தனக்கு தொழில் பிரச்னை அல்லது வேறு எதாவது பிரச்னை என்று கூறி பணம் கேட்பது வழக்கம். அப்படி பணம் கையிக்கு வந்தவுடன் வேறு பெண்களை தேடி சென்றுவிடுவார். வேலையில்லாமல் இருக்கும் ஆதித்யாவிற்கு இதுவே முழு நேர வேலையாகும். ஆதித்யா எல்லோரிடமும் தனக்கு திருமணமாகவில்லை என்று தெரிவித்து வந்தார். ஆனால் அவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறான். மும்பை, கல்யான், ராய்கட், தானே போன்ற பகுதியில் இது வரை 15 பெண்களிடம் இது போன்று ரூ.1 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலத்திலும் தனது கைவரிசையை காட்டியிருக்கிறார்” என்று தெரிவித்தார்.


மேலும் படிக்க `30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் டார்கெட்!’ - நாசா விஞ்ஞானி என 14 பெண்களிடம் திருமணம் செய்வதாக பண மோசடி
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top