Movie Name
Kaathuvaakula Rendu Kadhal
Music Director
Anirudh Ravichander
Release Year
2022
Singer Names
Ravi G & Shashaa Tirupati
Lyrics
Vignesh Shivan
நான் பிழை நீ மழலை
எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை
நீ இழை நான் பருவமழை
சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை
ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே
அடைக்கலம் அமைக்க தகுந்தவன்தானே
அடி அழகா சிரிச்ச முகமே
நா நெனச்சா தோணும் இடமே
அடி அழகா சிரிச்ச முகமே
நெனச்சா தோணும் இடமே
நான் பிறந்த தினமே
கெடச்சா வரமே
ஓ ஓ ஓ…
நான் பிழை நீ மழலை
எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை
நீ இழை நான் பருவமழை
சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை
ஓ…… ஓ……..
அவள் விழி மொழியை
படிக்கும் மாணவன் ஆனேன்
அவள் நடை முறையை
ரசிக்கும் ரசிகனும் ஆனேன்
ஓ ஓ ஓ ஓ ஓஹோ
அவன் அருகினிலே
கனல் மேல் பனித்துளி ஆனேன்
அவன் அருகையிலே
நீர் தொடும் தாமரை ஆனேன்
அவளோடிருக்கும் ஒருவித ஸ்நேகிதன் ஆனேன்
அவளுக்கு பிடித்த ஒரு வகை சேவகன் ஆனேன்
ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே
அடைக்கலம் அமைக்க தகுந்தவன்தானே
அடி அழகா சிரிச்ச முகமே
நா நெனச்சா தோணும் இடமே
அடி அழகா சிரிச்ச முகமே
நெனச்சா தோணும் இடமே
நான் பிறந்த தினமே
கெடச்சா வரமே
ஓ ஓ ஓ…
நான் பிழை நீ மழலை
எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை
நீ இழை நான் பருவமழை
சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை
ம்ம்ம்ம் ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம்ம்ம்