`என் மீது கைவைத்த எஸ்.பி-யின் கையை வெட்ட வேண்டும்’ - திலீப்... எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?

0

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகையை 2017-ம் ஆண்டு காரில் கடத்தில் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு இப்போது மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இந்த வழக்கில் நடிகர் திலீப், பல்சர் சுனி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். 74 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த நடிகர் திலீப், பின்னர் ஜாமினில் வெளியே வந்தார். இந்த நிலையில் நடிகர் திலீப்பின் நண்பராக இருந்த இயக்குநருமான பாலசந்திரகுமார் கடந்த மாதம் இறுதியில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது திலீப் குறித்த சில தகவல்களை வெளியிட்டார்.

அதில், ``நடிகையை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இப்போது சிறையில் இருக்கும் பல்சர் சுனிக்கும், நடிகர் திலீபிற்கு ஏற்கனவே நட்பு இருந்தது. நடிகர் திலீபுடன் பல்சர் சுனியை நான் பார்த்திருக்கிறேன். அந்த நட்பு குறித்து வெளியே கூறினால் ஜாமீன் கிடைக்காது என்பதால், அதுபற்றி வெளியே கூறக்கூடாது என திலீப் என்னிடம் கேட்டுக்கொண்டார். நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வீடியோவை திலீப் பார்த்தார்" என வெளிப்படுத்தினார் இயக்குநர் பாலச்சந்திரகுமார்.

சினிமா இயக்குநர் பாலசந்திரகுமார்

மேலும், நடிகர் திலீப் தன்னை கைது செய்த போலீஸ் அதிகாரிகளை பழிவாங்குவது பற்றி ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியானது. அதுமட்டுமல்லாது நடிகர் திலீப் குறித்த விபரங்களை எங்கு வேண்டுமானாலும் சொல்லுவேன் எனவும், திலீப் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியதாகவும் பாலச்சந்திரகுமார் கூறியிருந்தார். இந்த நிலையில் நடிகர் திலீப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட நடிகை முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து நடிகர் திலீபிடம் மீண்டும் விசாரணை நடத்தி அதுகுறித்த அறிக்கையை வரும் 20-ம் தேதிக்கு முன் கோர்ட்டில் ஒப்படைக்க கிரைம் பிராஞ்ச் போலீஸார் முடிவு செய்துள்ளனர். வரும் புதன்கிழமை இயக்குநர் பாலசந்திரகுமாரின் வாக்குமூலத்தை கோர்ட்டில் பதிவு செய்ய கிரைம் பிராஞ்ச் முடிவு செய்துள்ளது. இதற்கிடையே நடிகர் திலீப் மீது கிரைம் பிராஞ்ச் போலீஸார் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். தான் கைது செய்யப்பட்ட கோபத்தில் விசாரணை செய்த போலீஸ் அதிகாரிக்கு ஆபத்தை ஏற்படுத்த திலீப் உள்ளிட்டவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டதாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் திலீப்

திருவனந்தபுரம் கிரைம் பிராஞ்ச் போலீஸ் ஸ்டேஷனின் 6/2022 என்ற எஃப்.ஐ.ஆர் நம்பரில் திலீப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.சி செக்‌ஷன் 116, 118, 120 பி, 506, 34 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி இரவு 10.30-க்கும் 12.30-க்கும் இடைப்பட்ட சமயத்தில் ஆலுவா கொட்டாரக்கடவில் உள்ள திலீபின் வீட்டில் இந்த ஆலோசனை நடந்துள்ளதாகவும், அதில் முதல் குற்றவாளியாக கோபால கிருஷ்ணன் என்ற திலீப், இரண்டாம் குற்றவாளியாக திலீபின் சகோதரன் அனூப், திலீப் மனைவியின் சகோதரன் சூரஜ் மூன்றாம் குற்றவாளி, அப்பு, பாபு செங்கமனாடு மற்றும் கண்டால் தெரியும் ஒருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Also Read: `மலையாள நடிகர் சங்க சர்ச்சை' - கடிதம் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார் திலீப்

நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் எட்டாம் பிரதியாக திலீப் சேர்க்கப்பட்டு கைது செய்த விசாரணை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த வேண்டும் என இவர்கள் ஆலோசனை நடத்தியதாக எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது. "என் மீது கை வைத்த எஸ்.பி சுதர்சனின் கையை வெட்ட வேண்டும்" என திலீப் கூறியதாகவும் எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்ப்ட்டுள்ளது. இயக்குநர் பாலச்சந்திர குமாரின் வாக்குமூலத்தின் அடிப்படையிலும், அவர் வெளியிட்ட ஆடியோவின் அடிப்படையிலும் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க `என் மீது கைவைத்த எஸ்.பி-யின் கையை வெட்ட வேண்டும்’ - திலீப்... எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top