உக்ரைன் விவகாரம்: 11 நாடுகள் ஆதரவு; தவிர்த்த இந்தியா! -ஐ.நா தீர்மானத்தை தோற்கடித்த ரஷ்யா... எப்படி?!

0

ரஷ்யா, கடந்த இரண்டு நாள்களாக உக்ரைன் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. உலகின் பல நாடுகள் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்தாலும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை முன்னெடுத்தது. குறிப்பாக, தொடர்ந்து உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ நெருங்கி, தாக்குதலை நடத்தி வருகிறது.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி

இதனிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியானது. எனினும் அவர், `தான் இன்னும் உக்ரைனில் தான் இருக்கிறேன்’ என வீடியோ வெளியிட்டார். மேலும், ரஷ்யாவின் முதல் இலக்கு தானும் தனது குடும்பத்தினரும் தான் என்றும், உலக நாடுகள் போரை வேடிக்கை மட்டுமே பார்ப்பதாக வேதனை தெரிவித்தார்.

இதனிடையே, உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ரஷ்யா உடனடியாக நிபந்தனையின்றி உக்ரைன் எல்லையில் இருந்தும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருந்தும் அனைத்து ராணுவப் படைகளையும் முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஐநாவுக்கான அமெரிக்க தூதர்

இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய ஐநாவுக்கான அமெரிக்க தூதர், ``நமது அடிப்படைக் கொள்கைகள் மீதான ரஷ்யாவின் சமீபத்திய தாக்குதல் மிகவும் தைரியமானது, மிகவும் வெட்கக்கேடானது, அது நமது சர்வதேச அமைப்பை அச்சுறுத்துகிறது” என்றார்.

ஐநாவுக்கான யுனைடெட் கிங்டம் தூதர்

ஐநாவுக்கான யுனைடெட் கிங்டம் தூதர் பேசுகையில், ``ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைன் மீது மிகப்பெரிய படையெடுப்பை தொடங்கியுள்ளார். அவரின் நோக்கம் அதன் அரசாங்கத்தை அகற்றி அதன் மக்களை அடிபணிய வைப்பதாகும். இது தற்காப்பு அல்ல. இது அப்பட்டமான ஆக்கிரமிப்பு” என்றார்.

ஐநாவுக்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி பேசுகையில், ``அனைத்து மாநிலங்களின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும் என்றும் ஐநா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் நாங்கள் நம்புகிறோம், உக்ரைன் கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையே பாலமாக மாற வேண்டும்” என்றார்.

ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ் திருமூர்த்தி பேசுகையில், ``உக்ரைனில் ஏற்பட்டுள்ள சமீபத்திய சம்பவங்களால் இந்தியா மிகவும் கவலையடைந்துள்ளது. வன்முறை மற்றும் விரோதப் போக்கை உடனடியாக நிறுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மனித உயிர்களை விலையாக வைத்து எந்த தீர்வையும் எட்ட முடியாது.

உக்ரைனில் உள்ள ஏராளமான இந்திய மாணவர்களை உள்ளடக்கிய இந்திய சமூகத்தின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்தும் நாங்கள் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம். சமகால உலகளாவிய ஒழுங்கு ஐக்கிய நாடுகளின் சாசனம், சர்வதேச சட்டம் மற்றும் மாநிலங்களின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ் திருமூர்த்தி

அனைத்து உறுப்பு நாடுகளும், ஆக்கபூர்வமான வழியைக் கண்டுபிடித்து தான் இந்தக் கொள்கைகளை மதிக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் மற்றும் சச்சரவுகளைத் தீர்த்து வைப்பதற்கான ஒரே பதில் உரையாடல் மட்டுமே, இருப்பினும் இந்த நேரத்தில் அது அச்சுறுத்தலாகத் தோன்றலாம்.

அரசின் ராஜாந்திர வழிகள் கைவிடப்பட்டது வருத்தம் அளிக்கிறது. நாம் அதற்குத் திரும்ப வேண்டும். இந்த அனைத்து காரணங்களுக்காகவும், இந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணிக்க முடிவு செய்துள்ளது” என்றார்.

ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தில் மீது உறுப்பு நாடுகள் வாக்களித்தன. அமெரிக்கா உள்ளிட்ட 11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 3 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதன் மூலம் இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கும் முடிவை எடுப்பதாக் தெரிவித்திருக்கிறது. முன்னதாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என ரஷ்யா கேட்டுக்கொண்டது குறிப்பிடதக்கது.

15 நாடுகளில், 11 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தும், ரஷ்யாவுக்கு எதிரான இந்த தீர்மானம் தோல்வியில் முடிவடைந்தது. காரணம், ரஷ்யா தனக்கு உள்ள `வீட்டோ’ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்தது.

எனினும் உலக அரங்கில் ரஷ்யா தனித்து விடப்பட்டுள்ளது என்பதை இந்த தீர்மானம் உணர்த்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின்

ஐக்கிய நாடுகளில் வீட்டோ அதிகாரம் (veto power) எனப்படுவது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கும் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து(UK), அமெரிக்கா(US) ஆகிய ஐந்து நாடுகள் கொண்டுள்ள சிறப்பு அதிகாரம் ஆகும். ஐநா அமைக்கப்பட்ட 1946 -ம் ஆண்டு முதல் வீட்டோ அதிகாரம், அதாவது தடுத்து நிறுத்தும் அதிகாரம் பெற்ற நாடுகள் என்ற சிறப்பை இந்நாடுகள் பெறுகின்றன. இதன்படி ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு பெற்றிருந்தாலும், இந்த 5 நாடுகளில் எதேனும் ஒரு நாடு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தால் அந்தத் தீர்மானம் தோல்வியடையும் என்று ஐ.நா சட்ட பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க உக்ரைன் விவகாரம்: 11 நாடுகள் ஆதரவு; தவிர்த்த இந்தியா! -ஐ.நா தீர்மானத்தை தோற்கடித்த ரஷ்யா... எப்படி?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top