அமெரிக்கா அங்கம் வகித்துள்ள நேட்டோ அமைப்பில் இணைவதற்கு உக்ரைன் ஆர்வம் காட்டிவருகிறது. ஆனால் அண்டை நாடான ரஷ்யா, உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1 லட்சத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்களை ஆயுதங்களுடன் உக்ரைன் எல்லையில், எந்த நேரமும் போர் வெடிக்கும் விதமாக தயார் நிலையில் வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் உக்ரைனுக்கு ஆரம்பம் முதலே ஆதரவு தெரிவித்து, ரஷ்யாவுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா, தொடர்ந்து ரஷ்யாவை எச்சரித்து வருகிறது. முன்னதாக அமெரிக்காவின் செயல்பாடுகள் ரஷ்யாவை போர் சூழலுக்குத் தள்ளுகிறது என ரஷ்யா கூறியிருந்தது குறிப்பிடதக்கது.

அதையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சமீபத்தில், உக்ரைனில் இருக்கும் அமெரிக்கர்களை உடனடியாக நாடு திரும்பும்படியாக கூறியிருந்தார். பதற்றமான சூழல் காரணமாக, உக்ரைனில் வசிக்கும் மற்ற நாட்டவர்கள் தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
இந்த நிலையில், ரஷ்யா- உக்ரைன் விவகாரம் குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், ``உக்ரைனில் தற்போது மிகவும் பதட்டமான சூழ்நிலைகள் நிகழ்ந்து வருகின்றது. இந்த நிலையில் இதுகுறித்து அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசி அழைப்பில் பேசுவார் என நான் எதிர்பார்க்கிறேன். ஆனால் இப்போதைக்கு அதுபற்றி உங்களிடம் தெரிவிப்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை" என கூறியியுள்ளார்.
Also Read: உக்ரைன் - ரஷ்யா இடையே போர்ப் பதற்றம்? - தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் அமெரிக்கா!
மேலும் படிக்க உக்ரைன் விவகாரம்: இறுதி முயற்சியாக பைடன் - புதின் பேச்சுவார்த்தை?! - தணியுமா போர் சூழல்?