''பிரதமர் வேட்பாளர்: மு.க.ஸ்டாலின்தான் பதில் அளிக்க வேண்டும்'' - சொல்கிறார் டி.கே.எஸ்.இளங்கோவன்

0

2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஆரம்பித்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரையிலாக தொடர் வெற்றியைப் பெற்று, 'வலிமை'யை நிரூபித்து வருகிறது தி.மு.க கூட்டணி!

இந்தச் சூழலில், ''மு.க. ஸ்டாலினை போன்றவர்கள், பிரதமராக இருந்தால் நாடு செழிக்கும் என டெல்லியில் உள்ள அகில இந்திய தலைவர்கள் அனைவரும் எண்ணத்தொடங்கிவிட்டனர்'' என அச்சாரம் போட்டிருக்கிறார் தி.மு.க-வின் செய்தித் தொடர்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவனின்.

அவரிடம் பேசினேன்....

மோடி

''அகில இந்திய அரசியலில், பா.ஜ.க-வுக்கு எதிரான கூட்டணியைக் கட்டமைக்கிற முயற்சியில் தி.மு.க ஈடுபடுமா?''

''பா.ஜ.க பேசிவருகிற இந்துத்துவா என்பது, சமூக நீதிக்கு எதிரானது. அதனால்தான் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து இயங்கி வருகிறது. இந்த நிலையில், 'பா.ஜ.க அரசு தொடர்வது, நாட்டின் சமூகநீதிக்கு பெரும் ஆபத்து' என்றே நாங்கள் நம்புகிறோம். ஆகவேதான் நாடுதழுவிய அளவில் சமூக நீதிக் கூட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியுள்ளோம். இதுவே, பா.ஜ.க-வை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணிதான்.''

''மம்தா பானர்ஜி, சந்திரசேகர ராவ் ஆகியோர் காங்கிரஸ் கட்சி தவிர்த்த கூட்டணிக்கு முயன்றுவரும் வேளையில், தேசிய அளவிலான தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் இடம் எத்தகையதாக இருக்கும்?''

''காங்கிரஸ் கட்சியை நாங்கள் எதிர்க்கவில்லையே... எனவே அந்தக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கட்டாயம் இருக்கும். ஏனெனில், தேசிய அளவில் இருப்புகொண்ட மிகப்பெரிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது. இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்ததொரு கூட்டணியை உருவாக்கினால், அது மூன்றாவது அணியாகிவிடும். இது பா.ஜ.க-வுக்கு எதிரான அணியை பிளவுப்படுத்தத்தான் உதவும்.''

ராகுல்காந்தி

''அப்படியென்றால், தேசிய அளவில் மிகப்பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்தானே பிரதமர் வேட்பாளராகவும் இருக்கமுடியும்?''

''தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களோடு நிற்கிறார்; ஆனால், பிரதமர் மோடி மக்களிடமிருந்து விலகி நிற்கிறார். ஆக, இந்த ஒப்பீட்டு அடிப்படையிலேயே, 'மு.க.ஸ்டாலின் பிரதமரானால், நாடு செழிக்கும்' என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், மு.க.ஸ்டாலின் இதுகுறித்து என்ன நினைக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை.

கடந்தகாலத்தில், பிரதமர் பதவி வாய்ப்பு குறித்து கருணாநிதியிடம் கேள்வி கேட்டபோது, 'எனது உயரம் எனக்குத் தெரியும்' என்று பதிலளித்தார். இதுபோல், பிரதமர் பதவி குறித்த கேள்விக்கு நமது முதல்வர்தான் பதில் அளிக்க வேண்டும். மேலும் இதுகுறித்து கூட்டணிக் கட்சிகளும் கூடிப்பேசித்தான் முடிவெடுக்க முடியும். மற்றபடி 'மு.க.ஸ்டாலின்தான் பிரதமர் வேட்பாளர்' என்றப் பேச்செல்லாம் இப்போது எழவில்லை.''

''கோவையில், பணப் பட்டுவாடா நடைபெற்றிருப்பதால்தானே, 'கோவை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது' என சென்னை உயர் நீதிமன்றமே உத்தரவிட்டிருக்கிறது?''

''பணப்பட்டுவாடா நடைபெற்றிருக்கிறது என்ற பொதுவான குற்றச்சாட்டின் பேரில்தான் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. எனவே, 'பணப்பட்டுவாடா செய்தது யார்' என்பதையெல்லாம் முன்கூட்டியே நாம் சொல்லிவிட முடியாது. நீதிமன்றத்துக்கும் இது தெரிந்தேயிருக்கிறது. எனவே 'தப்பு செய்தவர்கள் யார்' என்பதையும் நீதிமன்றமே சொல்லட்டும்.''

சென்னை உயர் நீதிமன்றம்

''கோவை மாநகராட்சியில் வெற்றிபெற்ற உறுப்பினர்களின் சான்றிதழில்கூட, 'தேர்தல் முடிவுகள் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது' என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டுள்ளதே?''

''ஆமாம்.... பணப்பட்டுவாடா நடைபெற்றிருப்பதாக நீதிமன்ற வழக்கு இருப்பதால், 'வெற்றிச் சான்றிதழை இறுதிப்பட்டியலாக வைத்துக்கொள்ள வேண்டாம்' என்ற முன்னெச்சரிக்கையோடு தேர்தல் ஆணையம் இந்த வாசகத்தைப் பிரிண்ட் செய்து கொடுத்திருக்கிறது. ஆனால், தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் என்ற அறிவிப்பையும் தேர்தல் ஆணையம்தானே அறிவித்திருக்கிறது!''

''நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், ‘தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்கிற இடத்தை பா.ஜ.க பெற்று விட்டது' என அண்ணாமலை சொல்கிறாரே?''

(சிரிக்கிறார்) ''பல இடங்களிலும் பா.ஜ.க டெபாசிட் இழந்திருக்கிறது. பின் எப்படி மூன்றாவது பெரிய கட்சி என்று சொல்கிறார்கள்? பா.ஜ.க-வின் கோட்டை என்று அவர்களே சொல்லிவந்த கன்னியாகுமரி மாவட்டத்தில்கூட இப்போது சொல்லிக்கொள்ளும்படியாக வெற்றி கிடைக்கவில்லை. தனிப்பட்ட வகையில் உள்ளூர் மக்களின் அபிமானம் பெற்றவர்கள் யாரேனும் பா.ஜ.க சார்பில் நின்று வெற்றி பெற்றிருப்பார்களே தவிர.... சொல்லிக்கொள்கிற அளவுக்கு அவர்கள் எங்கேயும் வெற்றி பெறவில்லை.

ஒருவேளை, 'தி.மு.க 100 மார்க் வாங்கிவிட்டது. அ.தி.மு.க 50 மார்க், பா.ஜ.க 5 மார்க் வாங்கியிருக்கிறது. எனவே, மூன்றாவது பெரிய கட்சி பா.ஜ.க-தான்' என்று சொல்லிக்கொள்கிறாரோ என்னவோ!''

அண்ணாமலை

'' 'அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் இணைந்து நின்றால், கொங்கு மண்டலத்தில் தி.மு.க வெற்றிபெற முடியாது' என்றும் அண்ணாமலை சொல்கிறாரே?''

''அது அவரது கற்பனை. அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் சேர்ந்து வாங்கியிருக்கும் ஓட்டுகளைவிடவும் அதிக எண்ணிக்கையில் தி.மு.க ஓட்டுகளைப் பெற்றிருக்கிறது.''

''பா.ஜ.க-வுக்கு கிடைத்திருக்கும் கணிசமான வாக்குகள் தி.மு.க-வை எரிச்சல்படுத்தியுள்ளது என்கிறார்களே....?''

''மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் தொழில் வீழ்ச்சி, வாழ்வாதாரம் பாதிப்பு, விலைவாசி உயர்வு, வேலையிழப்பு, வேலைவாய்ப்பின்மை என மக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கும் உள்ளாகியிருக்கிறார்கள். இந்த நிலையில், தமிழ்நாட்டில் பா.ஜ.க-வுக்கு மூன்றாவது இடம், கணிசமான வாக்குகள் என்றெல்லாம் எந்த அடிப்படையில் சொல்கிறார்கள் என்றே தெரியவில்லை.''

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

''முதல்வரேகூட, 'சில இடங்களில் கட்சியை மனதில் வைத்து ஓட்டு போடுவார்கள். சில இடங்களில் வேட்பாளரை மனதில் வைத்து வாக்களிப்பார்கள்' என்றுதானே பா.ஜ.க வெற்றியைப் பற்றிச் சொல்கிறார்?''

''அதைத்தான் நானும் சொல்கிறேன். உள்ளாட்சித் தேர்தல் என்பது உள்ளூர் மக்களுடன் சம்பந்தப்பட்ட விஷயம். எனவே, உள்ளூர் நட்பின் அடிப்படையில்கூட வாக்குகள் கிடைக்கலாம். அதை கட்சிக்கான அங்கீகாரமாக எடுத்துக்கொள்ள முடியாது.''

''உள்ளாட்சி தேர்தல் வெற்றி என்பது உள்ளூர் மக்கள் சார்ந்தது என்ற உங்கள் கருத்து, தி.மு.க-வுக்கும் பொருந்தும்தானே?''

''ஆமாம்... தி.மு.க-வுக்கும் பொருந்தக்கூடியதுதான். அதேசமயம், தனி மனித தொடர்புகளையும் தாண்டி இவ்வளவு பெரிய வெற்றியை தி.மு.க-வுக்கு மக்கள் கொடுக்கிறார்கள் என்றால், விஷயம் இருக்க வேண்டும் இல்லையா? அதைத்தான் 'தி.மு.க தலைமையிலான ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்' என்று நான் சொல்கிறேன்.''

''உள்ளாட்சித் தேர்தலுக்கான தொகுதி மறுவரையை சரி செய்வதற்கான வாய்ப்பையே உச்ச நீதிமன்றம் எங்களுக்குக் கொடுக்கவில்லை. மாறாக, 'பத்து மாதங்களுக்குள்ளாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தியாக வேண்டும்' என்ற உத்தரவைத்தான் உச்ச நீதிமன்றம் கொடுத்திருந்தது. எனவே தேர்தலை நடத்தியாக வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்தச் சூழ்நிலையில், மறைமுகத் தேர்தலை மாற்றியமைத்து உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்த நேரிட்டால், நீதிமன்றம் பிறப்பித்த காலகட்டத்துக்குள் தேர்தலை நடத்தி முடிக்க முடியாது. எனவே, பழைய நடைமுறையையே தொடரவேண்டியதாயிற்று.''

திருமாவளவன்

''அப்படியெல்லாம் இல்லை. கடந்த காலத்தில், திருவொற்றியூர் நகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒரேயொரு உறுப்பினர்தான் இருந்தார். ஆனாலும்கூட கூட்டணி தர்மத்துக்காக அவரையே நகராட்சித் தலைவராக தி.மு.க தேர்ந்தெடுத்தது. கோவில்பட்டியிலும்கூட இதேபோன்று நடைபெற்றுள்ளது. கோவையில் காங்கிரஸ் கட்சிக்கு குறைவான உறுப்பினர்களே இருந்தபோதும் காங்கிரஸிலிருந்தே மேயரைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.

எனவே, தலைவர், துணைத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக கூட்டணிக் கட்சிகளிடையே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்போதுதான் இதுகுறித்தெல்லாம் முடிவெடுக்கப்படும்.''


மேலும் படிக்க ''பிரதமர் வேட்பாளர்: மு.க.ஸ்டாலின்தான் பதில் அளிக்க வேண்டும்'' - சொல்கிறார் டி.கே.எஸ்.இளங்கோவன்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top