`ஒரு வாரமா அதிமுக சந்தோஷமாக உள்ளது; பெரிய பாரமே கொறஞ்சிருக்கு!' -பாஜக விலகல்; சி.வி.சண்முகம் சூசகம்?

0

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. வேட்புமனுத் தாக்கல், மனுக்கள் பரிசீலனை ஆகிய இரு கட்டங்கள் முடிந்துள்ளது. அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் நகராட்சி வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களை சந்தித்து நேற்று (06.02.2022) காலை பேசியிருந்தார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். இந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில், திமுக வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தவறிழைப்பதாக சுட்டிக்காட்டி பேசியிருந்த சி.வி.சண்முகம், "இந்த தி.மு.க ஆட்சி, நீங்கள் (தேர்தல் அதிகாரிகள்) ஓய்வு பெறும் வரை இருக்கப்போவதில்லை.

திண்டிவனத்தில் சி.வி.சண்முகம்

இந்த திமுக ஆட்சி என்பது இன்னும் மூன்றறை வருடம் தான், அதுவும் நிச்சயமில்லை. நாளை என்ன நடக்கும் என்பது நம் கையில் இல்லை. எது வேண்டும் என்றாலும் நடக்கலாம். ஏனெனில், தற்போது திமுக-வில் குடும்ப அதிகார போட்டி கடுமையாக நடந்து கொண்டிருக்கிறது. ஏதோ ஒத்துமையா இருக்கிற மாதிரி தெரியுது, ஆனா இல்ல. மாமா, மருமகன், மச்சான் சண்டை உச்சத்தில் இருக்கிறது. வேறு ஒன்றுமில்லை... யாரு வசூல் பாக்குறது இந்த ஆட்சியில என்றுதான்.

இப்போது மருமகன் வசூல் பார்க்க, பிள்ளையோ... நானும் பார்ப்பேன் என்கிறார். இந்த உச்சக்கட்ட சண்டை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம், ஆட்சி களையலாம், கட்சி உடையெல்லாம். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆகவே, அதிகாரிகள், ஜனநாயக கடமைகளை முறையாக செய்ய வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை. தி.மு.க ஆட்சியில் நகர மன்றத் தேர்தல் என்றாலே அராஜகம் தலைவிரித்து ஆடுகிறது. அதனால் தான், தேர்தலை முறையாக நடத்த கோரி உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க வழக்கு தொடர்ந்தது. அதன்படி, 'தேர்தல் நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்ய வேண்டும்' என்ற உத்தரவையும் பெற்றுள்ளோம். 'எங்களுக்கு இதில் தெளிவு வேண்டும்' என்று தேர்தல் ஆணையம் இப்போது பெட்டிஷன் போட்டுள்ளது, எதுவுமே தெரியாத மாதிரி. என்னதான் இருந்தாலும் நாம் யாரையும் நம்பக்கூடாது.

தி.மு.க தலைவர் ஸ்டாலின், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்

இந்த தி.மு.க அரசு பொறுப்பேற்று ஓராண்டு காலமாக ஆகப்போகிறது. இந்த காலகட்டத்திலே எல்லாத் தரப்பு மக்களும் ஏமாற்றப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 525 வாக்குறுதிகளை இந்த தி.மு.க அரசு கொடுத்தது. அதில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி விட்டதாக சொல்லுகிறார்கள். ஆனால், மக்களைக் கேட்டால் தான் உண்மை தெரியும், என்ன செய்தார்கள்... என்று. தி.மு.க செய்கிறேன் என்று கூறி, செய்யாமல் இருப்பதை எல்லாம் மக்களிடம் தெளிவாக எடுத்துச் சொல்லி திட்டமிட்டு தேர்தலுக்கு பணியாற்றுங்கள்.

அ.தி.மு.க, எந்த நிலையிலும் தைரியமாக தனியாக இருப்பதற்கு தயாராக இருக்கும். இப்போ உற்சாகமாக, சந்தோஷமாக இருக்கிறார்கள் எல்லோரும். அது ஏன் என உங்களுக்கே தெரியும். அ.தி.மு.க ஒரு வாரமாக உற்சாகமாக இருக்கிறது. பெரிய பாரம் நம்மை விட்டு கொறஞ்சிருக்கு. யாரோ செய்த தவறுக்கு நாம் பதில் சொல்ல வேண்டிய கடமையில் இருந்தோம். இப்போ அது இல்ல, விலகிடுச்சி.

அண்ணாமலை, சி.வி.சண்முகம்

அந்த பழியிலிருந்து நாம் விலகிட்டோம். ஆகவே, தொண்டர்களில் இருந்து தலைவர்கள் வரை உற்சாகமாக, தெம்பாக, நம்பிக்கையாக இருக்கிறோம்" என்றார். பாஜக, அதிமுக-வின் கூட்டணியில் இருந்து விலகி நகர்ப்புற தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதை பற்றி சூசகமாக குறிப்பிட்டதாக கூறுகிறார்கள்.


மேலும் படிக்க `ஒரு வாரமா அதிமுக சந்தோஷமாக உள்ளது; பெரிய பாரமே கொறஞ்சிருக்கு!' -பாஜக விலகல்; சி.வி.சண்முகம் சூசகம்?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top