தொற்றிலிருந்து குணமான பிறகும் நார்மலாகாத உடல்; ஏன் இப்படி?

0

ஒமிக்ரான் பாதிக்கப்பட்டு மீண்ட பிறகும், முழுமையான குணம் அடைந்ததுபோல தெரியவில்லை. அதிலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான அறிகுறிகள் தென்படுகின்றன. தொண்டையில் ஒருவிதமான உறுத்தல், லேசான தலைவலி, அவ்வப்போது வறட்டு இருமல், சளி, அவ்வப்போது தும்மல் இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பிரச்னைகள் சின்னதாகவோ... பெரிதாகவோ தொடர்கின்றன. மேலும் ஜுரத்தில் இருந்து மீண்டபிறகு ஒரு மாதிரியான உணர்வு சில நாள்களுக்கு நீடிக்கும். அத்தகைய உணர்வு பலநாள்களுக்கும் நீடிப்பதும் நடக்கிறது. இவையெல்லாமே 20 நாள்களுக்கும் மேலாக நீடிக்கின்றன. இது எதனால், பின்விளைவுகள் ஏதும் ஏற்படுமா?

- பிரவீன் (விகடன் இணையத்திலிருந்து)

டாக்டர் குமாரசாமி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி.

``சார்ஸ் கோவ் 2 எனும் வைரஸ் கிருமியால் பரவுவது கோவிட் நோய் என்பதை நாம் அறிவோம். இந்த வைரஸ் உடலில் தொற்றியதும் காய்ச்சல், சளி, தொண்டைவலி, மூக்கில் நீர் வடிதல், நுரையீரலில் சளி போன்ற பாதிப்புகள் வரலாம். 80 முதல் 85 சதவிகித நோயாளிகளுக்கு இத்தகைய அறிகுறிகள்தான் இருக்கும். குறைந்த அளவிலான நோய் பாதிப்பாக இது கணக்கிடப்படும். மீதி 15 சதவிகித நோயாளிகளுக்கு இந்த நோய் மிதமாகவோ, தீவிரமாகவோ இருக்கலாம்.

வயதானவர்களுக்கும், சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு போன்ற இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் நோயின் தீவிரம் அதிகமிருக்கும். கோவிட் தொற்றை ஏற்படுத்தும் வைரஸ் கிருமி உடலில் நுழைந்ததும் சைட்டோகைன்ஸ் (Cytokines) எனப்படும் புதரங்களைத் தூண்டி சுரக்க வைக்கும்.

Also Read: Doctor Vikatan: N95 மாஸ்க் மற்றும் KN95 மாஸ்க் - இரண்டுக்கும் என்ன வித்தியாசம், இரண்டில் எது பெஸ்ட்?

அந்த சைட்டோகைன்கள் உடல் உறுப்புகளை பாதிக்கலாம். அதன் விளைவாகவும் நோய்த்தொற்றானது மிதமாகவோ, தீவிரமாகவோ இருக்கலாம்.

மிதமான தொற்றிலிருந்து குணமானவர்களுக்குமே அதன் பிறகு உடல்வலி, களைப்பு, சுவையும் மணமும் உணரும் திறன் முற்றிலும் பழையநிலைக்குத் திரும்பாதது போன்ற சின்னச் சின்ன பிரச்னைகள் தொடரலாம். `போஸ்ட் கோவிட் சிண்ட்ரோம்' எனப்படும் இது, எல்லோருக்கும் வரும் என்றில்லை. வயதானவர்கள் மற்றும் இணைநோய்கள் உள்ளவர்களுக்கு வரலாம்.

India Covid 19 Outbreak

எனவே கோவிட் தொற்றின் போதான அறிகுறிகளும் சரி, குணமான பிறகு தொடரும் அறிகுறிகளும் சரி, எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டியதில்லை. நபருக்கு நபர் மாறலாம். எப்படியிருப்பினும் உங்களுடைய அறிகுறிகளுக்கேற்ப, மருத்துவரை அணுகி ஆலோசனைகள் பெறலாம். போஸ்ட் கோவிட் சிண்ட்ரோம் பாதிப்புகளை அலட்சியப்படுத்தாமல் அதற்கும் தகுந்த மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் பெறுவது பாதுகாப்பானது."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?

மேலும் படிக்க Doctor Vikatan: தொற்றிலிருந்து குணமான பிறகும் நார்மலாகாத உடல்; ஏன் இப்படி?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top