இந்தியப் பங்குச் சந்தையை ஆட்டுவித்த `இமயமலை சாமியார்' - NSE-யில் ஊழல் நடந்தது எப்படி?

0

என்.எஸ்.இ என சுருக்கமாக அழைக்கப்படுகிற தேசிய பங்குச் சந்தையின் சி.இ.ஒ.வாக இருந்து, ஊழல் குற்றச்சாட்டினால் பதவி விலகியவர் சித்ரா ராமகிருஷ்ணா. என்.எஸ்.இ.யின் சி.இ.ஒ.வாக இருந்தபோது, அவர் செய்த அட்டூழியங்களை செபி இப்போது தெளிவாக விசாரித்து வெளியிட்டிருக்கிறது. அவற்றைப் பார்க்கும்போது மிகப்பெரும் பதவியில் இருப்பவர்கள் இவ்வளவு புத்தி கெட்டு நடப்பார்களா, இத்தனை பெரிய ஊழல் பெருச்சாளிகளாக இருப்பார்களா என வியக்க வைக்கிறது. அப்படி அவர் என்ன செய்தார் என்பதைப் பார்ப்போம்.

சித்ரா ராமகிருஷ்ணா

பி.எஸ்.இ.க்குப் போட்டியாக வந்த சந்தை 

இந்தியப் பங்குச் சந்தையில் மும்பை பங்குச் சந்தை என்கிற ஒரே ஒரு எக்ஸ்சேஞ்ச் மட்டுமே இருந்தது. இதற்கு மாற்றாக ஒரு எக்ஸ்சேஞ்ச் ஒன்றை மத்திய அரசாங்கம் உருவாக்க நினைக்க, என்.எஸ்.இ எனப்படும் தேசிய பங்குச் சந்தை உருவாக்கப்பட்டது. எஸ்.பி.ஒ வங்கி உள்பட பல நிறுவனங்கள் கூட்டாக இணைந்து என்.எஸ்.இ. உருவாக்கப்பட்டதே தவிர, இது ஒரு அரசு நிறுவனம் அல்ல.

இந்த நிறுவனத்தின் ஆரம்ப காலம் முதலே நிர்வாகத்தின் முக்கிய பொறுப்பில் இருந்தார் சித்ரா ராமகிருஷ்ணா. இந்த நிறுவனத்தின் சி.இ.ஒ.வாக ரவி நாராயண் ஆனபோது, சித்ராவின் செல்வாக்கு மேலும் உயர்ந்தது. ரவி நாராயண் பதவிக்காலம் முடிந்தபோது, என்.எஸ்.இ.யின் அடுத்த சி.இ.ஒ சித்ராதான் என்கிற நிலையை உருவாக்கினார். அவர் திட்டமிட்டபடியே ரவிக்குப் பிறகு அந்தப் பதவிக்கு வந்தார் சித்ரா.

இமயமலை சாமியாரின் ஆலோசனை

என்.எஸ்.இ.யின் சி.இ.ஒ.வாக சித்ரா ஆனபிறகு, தான் சொல்வது மட்டுமே நடக்க வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்தார். அவர் சொல்வதற்கு ‘ஆமாம் சாமி’ போடுகிறவர்களை மட்டுமே பதவியில் நியமித்தார். தன்னை விமர்சித்தவர்களை எல்லாம் ஒழித்துக் கட்டிய சித்ரா ராமகிருஷ்ணா, இமயமலை சாமியார் ஒருவரின் ஆலோசனையில் பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார் என்பது இப்போது தெரிய வந்திருக்கிறது.

Stock Market

இந்த இமயமலை சாமியாரின் தொடர்பு சித்ராவுக்கு எப்படி ஏற்பட்டது தெரியவில்லை. ஆனால், என்.எஸ்.இ. தொடர்பான எல்லா விஷயங்களையும் இந்த சாமியாருடன் பகிர்ந்திருக்கிறார் சித்ரா. என்.எஸ்.இ பேலன்ஸ் ஷீட், டிவிடெண்ட் ரேஷியோ, என்.எஸ்.இ.யின் அடுத்த திட்டம் என வேறு யாருக்கும் தெரியாத தகவல்களை அந்த சாமியாரிடம் பகிர்ந்திருக்கிறார் சித்ரா.

‘சிரோன்மணி’ என்று சித்ரா இந்த சாமியாரை அழைக்கிறார். இவரை சித்ரா ஒருமுறை சந்தித்ததில்லையாம். ஆனால், 1996 முதல் இந்த இருவருக்கும் கருத்துப் பரிவர்த்தனை இருந்திருக்கிறது. என்.எஸ்.இ தொடர்பாக எதாவது முடிவு எடுக்க வேண்டுமெனில், இந்த இமயமலை சாமியாருக்கு சித்ரா இ-மெயில் அனுப்ப, அவரும் இ-மெயில் மூலமே பதில் அளிப்பாராம். இந்த இருவருக்கும் நடந்த பல நூறு இ-மெயில்களைத் தேடிப் பிடித்து ஆய்வு செய்த செபி, இப்போது அது பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டிருக்கிறது.

ஆனந்த் சுப்பிரமணியனின் நியமனம்!

கடந்த 2013-ம் ஆண்டு என்.எஸ்.இ எக்ஸ்சேஞ்சின் சீப் ஸ்ட்ராட்டஜிக் அட்வைசராக ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை நியமனம் செய்தார் சித்ரா. இவரை இந்தப் பதவியில் நியமிக்கும்படி, இமயமலை சாமியாரிடமிருந்து ஆலோசனை வர, சித்ராவும் அப்படியே செய்திருக்கிறார். அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்பது பற்றி என்.எஸ்.இ.யின் பங்குதாரர்கள் யாரும் கேட்கவில்லை. கேட்டாலும் பதில் கிடைக்காது என்பதால், அவர்கள் அமைதி காத்தனர்.

Share Market (Representational Image)

Also Read: பி.எஸ்.இ-யைத் திருத்தவந்த என்.எஸ்.இ முறைகேடு செய்தது எப்படி? சுஜிதா தலாலின் சூப்பர் புத்தகம்

பால்மர் லாறி என்கிற நிறுவனத்தில் 15 லட்சம் ரூபாய் ஆண்டு சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஆனந்த் சுப்பிரமணியனை 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் வேலைக்குச் சேர்த்து, 1.68 கோடி ரூபாய் ஆண்டு சம்பளம் தரத் தொடங்கினார் சித்ரா. அடுத்த ஆண்டே அதாவது, 2014 மார்ச்சில் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டார் என்று சொல்லி அவருக்கு 20% சம்பள உயர்வு தந்தார். இதனால் அவருடைய சம்பளம் ரூ.2.01 கோடியாக உயர்ந்தது. அது முடிந்து ஐந்து வாரம்கூட முடியவில்லை. மீண்டும் 15% அவருக்கு சம்பள உயர்வு போடப்பட்டது. இதனால் அவருடைய சம்பளம் ரூ.2.31 கோடியாக உயர்ந்தது.

2015-ம் ஆண்டு ஆனந்த சுப்பிரமணியன் வாங்கிய ஆண்டு சம்பளம் ரூ.5 கோடியாக இருந்தது. அது மட்டும் இல்லாமல், உலகின் எந்த நாட்டு விமானத்திலும் முதல் வகுப்பில் அவர் பயணம் செய்யும் உரிமையும் வழங்கப்பட்டது. என்.எஸ்.இ.யின் மற்ற ஊழியர்கள் எல்லாம் வாரத்தில் ஐந்து நாள்கள் கட்டாயம் அலுவலகத்துக்கு வந்து வேலை பார்க்க வேண்டும் என்கிற விதி இருந்தபோது, ஆனந்த் சுப்பிரமணியன் மட்டும் வாரத்துக்கு மூன்று நாள் வந்து வேலை பார்த்தால் போதும், அதையும் அவர் இஷ்டப்படி வந்துசெல்லலாம் என்கிற அளவுக்கு பல சலுகைகளைத் தந்தார் சித்ரா ராமகிருஷ்ணா.

கோ-லொகேஷன் ஊழல்

தேசிய பங்குச் சந்தையை இப்படி தன் இஷ்டத்துக்கு சித்ரா ராமகிருஷ்ணா நடத்திக்கொண்டிருந்தபோது, கோ-லொகேஷேன் தொடர்பாக மிகப் பெரும் ஊழலையும் செய்தார். கோ-லோகேஷன் என்பது பங்குச் சந்தை வர்த்தகம் தொடர்பான விவரங்களை மற்றவர்களுக்கு அளிப்பதற்கு முன்பே குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு சில விநாடிகளுக்கு அளிப்பது. வர்த்தகம் தொடர்பான தகவல்கள் முன்பே கிடைப்பதால், இந்த நிறுவனங்கள் எக்கச்சக்கமாக பங்குகளை வாங்கியும் பல கோடிகளை லாபம் கண்டன. இந்த நிறுவனங்களுக்கு இப்படியொரு சலுகை அளிப்பதன்மூலம் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கலாம் என்கிறார்கள்.

இந்த கோ-லோகேஷன் விவகாரம் பற்றி மும்பையின் பிரபல பத்திரிகையாளர் சுசிதா தலாலுக்குத் தெரியவர, அவர் இது தொடர்பாக கேள்விக்கு மேல் கேள்வி கேட்க, வசமாக மாட்டினார் சுசிதா தலால். இதற்கு மேலும் பதவியில் இருந்தால், கையும் களவுமாக பிடிபட்டு சிறை செல்ல வேண்டியிருக்கும் என்பதை முன்பே புரிந்துகொண்ட சித்ரா ராமகிருஷ்ணா, `தனிப்பட்ட காரணங்களுக்காக’ என்.எஸ்.இ.யின் சி.இ.ஒ பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து, விலகினார்.

கோ-லொகேஷன்

Also Read: தொடர் இறக்கத்தில் இந்தியப் பங்குச்சந்தை; நிபுணர்கள் சொல்லும் காரணங்கள் என்ன?

ஆனால், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைவராக இருந்த சாந்தா கோச்சர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மாதிரி, சித்ரா ராமகிருஷ்ணா விசாரிக்கப்படவில்லை. அப்படியொரு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால், இன்னும் என்னென்ன பூதங்கள் எல்லாம் கிளம்புமோ தெரியாது!


மேலும் படிக்க இந்தியப் பங்குச் சந்தையை ஆட்டுவித்த `இமயமலை சாமியார்' - NSE-யில் ஊழல் நடந்தது எப்படி?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top