U19 Worldcup: ஜெர்சி நம்பர் 12; ஒலிம்பிக் பரம்பரை; 5 விக்கெட் ஹால் எடுத்த ஆட்டநாயகன் ராஜ் பவா யார்?

0

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக் கொண்டன. இதில் இந்தியா வென்று 5வது முறையாக U19 உலகக் கோப்பையைக் கைப்பற்றி இருக்கிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ராஜ் பவா எனும் வேகப்பந்து வீச்சாளர் 5 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் இந்தியாவின் கையை ஓங்க செய்துள்ளார். இவர்தான் இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனும் கூட! இந்த ராஜ் பவா குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ...

19 வயதாகும் ராஜ் பவா ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக இந்தத் தொடர் முழுவதுமே மிகச்சிறப்பாக ஆடி வந்தார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இந்திய அணியின் முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். அயர்லாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் 42 ரன்களை எடுத்திருந்தார்.

உகாண்டாவிற்கு எதிரான மூன்றாவது போட்டியில் உச்சக்கட்டமாக 108 பந்துகளில் 102 ரன்களை அடித்திருந்தார். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் இந்திய வீரர் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோர் இதுவே.

காலிறுதியிலும் அரையிறுதியிலும் கொஞ்சம் சைலண்ட்டாக இருந்தவர், இறுதிப்போட்டியில் முக்கியமான கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி 5 விக்கெட் ஹால் எடுத்திருக்கிறார். தனது கட்டுக்கோப்பான ஸ்பெல்களால் இங்கிலாந்தை எழவே முடியாமல் சரித்திருக்கிறார். இங்கிலாந்தின் மிடில் ஆர்டர் விக்கெட்டுகள் அத்தனையின் மீதும் ராஜ் பவாவின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் சேஸிங்கில், மிடில் ஆர்டரில் களமிறங்கி, 35 ரன்களும் அடித்துள்ளார்.

இமாச்சல் பிரதேசத்தில் பிறந்த ராஜ் பவாவின் தந்தை சுக்விந்தர் சிங் பவா இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் பயிற்சியாளர் ஆவார்.

Raj Bawa
இப்போது U19 அணியில் ராஜ் பவாவின் ஜெர்சி எண் 12. ராஜ் பவாவுமே யுவராஜ் சிங்கின் ரசிகரே.

சிறுவயதில் தங்களுடைய பயிற்சி மையத்தில் யுவராஜ் பயிற்சி செய்வதை பார்த்தே ராஜ் பவா வளர்ந்திருக்கிறார். ராஜ் பவாவுமே ஒரு இடக்கை பேட்ஸ்மேன் தான். தன்னையறியாமலேயே தன்னுடைய பேட்டிங்கில் யுவராஜின் தாக்கம் இருப்பதாக ராஜ் பவாவே கூறியிருக்கிறார். பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக வேகப்பந்து வீச்சிலிருந்து ஸ்பின்னராக மாறிய ராஜ் பவா, சில ஆண்டுகளிலேயே மீண்டும் வேகப்பந்து வீச்சுக்கே திரும்பிவிட்டார். இப்போது இந்திய U19 அணியின் தவிர்க்க முடியாத வீரராக மறக்க முடியாத பெர்ஃபார்மென்ஸ்களை கொடுத்து வருகிறார்.

ராஜ் பவாவின் தாத்தா தர்லோச்சன் பவாவும் ஒரு விளையாட்டு வீரரே. 1948 லண்டன் ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம்பிடித்தவர் அவர்.

இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா அடித்த நான்கு கோல்களில் ராஜ் பவாவின் தாத்தா அடித்த ஒரு கோலும் அடக்கம். தாத்தாவின் கடந்தகால சகாப்தத்தை கேட்டும்... யுவராஜ் எனும் நிகழ்கால மாவீரனை அருகிலிருந்து பார்த்தும் வளர்ந்தவர், இப்போது தனக்கான சாம்ராஜ்யத்தை இங்கிலாந்துக்கெதிரான 5 விக்கெட் ஹால் மூலம் கட்டியெழுப்பத் தொடங்கியிருக்கிறார். வாழ்த்துகள் ராஜ் பவா!


மேலும் படிக்க U19 Worldcup: ஜெர்சி நம்பர் 12; ஒலிம்பிக் பரம்பரை; 5 விக்கெட் ஹால் எடுத்த ஆட்டநாயகன் ராஜ் பவா யார்?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top