`ஆள் இல்லாத வீடுகளே டார்கெட்; 2 மாதங்களில் 16 வீடுகளில் கைவரிசை' - சிறை நண்பர்கள் சிக்கியது எப்படி?

0

தஞ்சாவூர் நகர்ப் பகுதி மற்றும் வல்லம் உள்ளிட்டப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு உடைத்து உள்ளேச் சென்று நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். கிட்டதட்ட அடுத்தடுத்து 16 வீடுகளில் இந்த திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றதால் பொதுமக்கள் பெரும் அச்சத்துக்கு ஆளானார்கள். ஆனாலும், திருட்டில் ஈடுபட்டவர்கள் பற்றி போலீஸாருக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

கொள்ளை

அதையடுத்து, தஞ்சாவூர் எஸ்.பி ரவளிபிரியா ஆளில்லாத வீடுகளில் கொள்ளையடிக்கும் கும்பலைப் பிடிக்கத் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

தனிப்படை போலீஸார் கொள்ளை நடந்த வீடுகளுக்கு அருகே இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், தஞ்சாவூர் மேல வஸ்தாசாவடி அருகே வாடகைக்கு வீடு எடுத்து கும்பல் ஒன்று திருட்டுச் சம்பவங்களில் ஈடுப்பட்டு வருவது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட கொடுங்கசாமி

அதை ஆதாரங்களின் அடிப்படையில் உறுதிசெய்த போலீஸார் கொடுங்க சாமி, சொட்டை தியாகராஜன், பூனை நாகராஜன் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர். மேலும், கொடுங்க சாமியிடமிருந்து 50 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட நகை

இது குறித்து தனிப்படை போலீஸ் டீம் வட்டாரத்தில் பேசினோம். ``தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கொடுங்கசாமி. இவனுக்கு வயது 55. பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருடுவதில் கைதேர்ந்தவன். இவன் மீது தமிழ்நாட்டில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அண்டை மாநிலங்களிலும் பல்வேறு வழக்குகள் உள்ளன.

திருட்டில் ஈடுபட்ட நாகராஜன்

தஞ்சாவூர் அருகே உள்ள நடுவூர் கிராமத்தைச் சேர்ந்தவன் சொட்டை தியாகராஜன். திருச்சி துவாக்குடியைச் சேர்ந்தவன் பூனை நாகராஜன் இவர்களின் கூட்டாளி மோகன். இவர்கள் நான்கு பேரும் வழக்கு தொடர்பாக சிறையில் இருந்த போது நண்பர்களானவர்கள்.

இந்த நிலையில், திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதற்காக தியாகராஜன், கொடுங்க சாமியை வர வழைத்துள்ளான். மேல வஸ்தாசாவடியில் கொடுங்க சாமி, முருகன் என்ற பெயரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளான். தியாகராஜன் ஆடு வளர்த்து வருகிறான். இவர்கள் சேர்ந்து ஆடுகளுக்கு இலை தலை வெட்டுவது போல் மரத்தில் ஏறி நின்று எந்தெந்த வீடுகளில் ஆள் இல்லை என பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிடுவார்கள்.

போலீச் கைது செய்துள்ள தியாகராஜன்

பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று நகை பணம் உள்ளிட்டவற்றை திருடி சென்று விடுவார்கள். கிட்டதட்ட இரண்டு மாதங்களில் மட்டும் 16 வீடுகளில் தங்கள் கைவரிசையைக் காட்டியிருக்கின்றனர். இவர்கள் நான்கு பேரும் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்" என்றனர்.

Also Read: சைக்கிள் திருட்டு, வழிப்பறி... கடைகளில் கொள்ளை - பலே `சைக்கிள்' திருடன் போலீஸில் சிக்கியது எப்படி?!


மேலும் படிக்க `ஆள் இல்லாத வீடுகளே டார்கெட்; 2 மாதங்களில் 16 வீடுகளில் கைவரிசை' - சிறை நண்பர்கள் சிக்கியது எப்படி?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top