
எம்ஜி மோட்டார் நிறுவனம் மிக விரைவில் அதன் எலக்ட்ரிக் எஸ்யூவி காரான இசட்.எஸ் இவி மாடலின் அப்டேட் வெர்சனை வருகிற மார்ச் 7ஆம் தேதி அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதற்கிடையில் புதிய இசட்.எஸ் இவி -யில் கொண்டுவரப்பட உள்ள புதிய அம்சங்களை எம்ஜி நிறுவனம் ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட்ட வண்ணம் உள்ளது.

இந்த வகையில் தற்போது 2022 இசட்.எஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் மிக முக்கிய அம்சமாக வழங்கப்பட உள்ள ஐ-ஸ்மார்ட் தொழிற்நுட்ப வசதியை பற்றிய விபரங்களை எம்ஜி மோட்டார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. புதிய இசட்.எஸ் இவி -யில் வழங்கப்பட உள்ள இந்த அதிநவீன அம்சத்தின் மூலமாக 75 விதமான இணைப்பு கார் வசதிகளை பெறலாம்.

இயக்குத்தளமாக கார் (CAAP- Car as a platform) -இன் பார்வையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள அப்டேட் செய்யப்பட்ட இசட்.எஸ் இவி ஆனது தேவையான அனைத்து இன்-கார் சேவைகளை பெற்றுவரவுள்ளது. அதேபோல் இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் இம்முறை இணைப்பு வசதிகளுக்கான சந்தா திட்டங்களும் வழங்கப்பட உள்ளன. இதற்காக எம்ஜி மோட்டார் நிறுவனம் சில கார்ப்பிரேட் நிறுவனங்களுடன் கூட்டணி ஏற்படுத்தி கொண்டுள்ளது.

இந்த கார்ப்பிரேட் நிறுவனங்களில் ஜியோ, பார்க்+, மேப் மை இந்தியா மற்றும் ஷார்ட்பீடியா உள்ளிட்டவை அடங்குகின்றன. 2022 இசட்.எஸ் எலக்ட்ரிக் காரில் 4-பரிமாண வரைப்படங்கள் வழங்கப்பட உள்ளன. இது ஆன்லைன் நாவிகேஷன் மற்றும் நேரலையான டிராஃபிக் அப்டேட்களை மிகவும் அட்வான்ஸாக காட்டும். பார்க்+ செயல்பாட்டின் மூலம் டிரைவர் காரை பார்க் செய்யும் இடத்தை நெருங்குவதற்கு முன்பாகவே தேர்வு செய்து முன்பதிவு செய்யலாம்.

இசை & போட்காஸ்ட் ஸ்ட்ரீமிங் சேவைகளை ஜியோசாவ்ன் (JioSaavn) மூலமாகவும், சமீபத்திய செய்திகளை ஹிந்தியிலோ அல்லது ஆங்கிலத்திலோ ஷார்ட்பீடியா வாயிலாகவும் கார் பயன்பாட்டாளர்கள் பெறலாம். புதிய எம்ஜி இசட்.எஸ் இவி ஃபேஸ்லிஃப்ட் கார் ஆனது டிஜிட்டல் ப்ளூடூத் விசையை பெறுகிறது. இது சில குறிப்பிட்ட நேரங்களில் இயற்பியல் முறையில் பொத்தான்களை அழுத்தாமல் டிரைவர் காரை ஓட்டுவதற்கு அனுமதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஓட்டுனரின் சவுகரியத்திற்காக, கதவுகளை திறக்க/மூட ஐ-ஸ்மார்ட் செயலி மற்றும் ஏசி-க்கு ரிமோட் கண்ட்ரோல் உள்ளிட்டவையும் 2022 இசட்.எஸ் ஃபேஸ்லிஃப்ட்டில் வழங்கப்பட உள்ளன. இதில் ஐ-ஸ்மார்ட் செயலி ஆனது ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் (வாட்ச்களும் உள்பட) என இரண்டையும் ஏற்கக்கூடியதாக இருக்கும். மேலும் இந்த செயலியை ஆடியோ, ஏசி கண்ட்ரோல்கள், நேரலையாக இருப்பிடத்தை பகிர்தல் மற்றும் பேட்டரியின் சார்ஜ் நேரத்தை கண்காணித்தல் உள்ளிட்டவற்றிகான இன்-கார் ரிமோட்டாகவும் பயன்படுத்தலாம்.

இத்துடன், ஈக்கோ-மரம் சேலன்ஞ்சை பயன்படுத்தி இசட்.எஸ் இவி உரிமையாளர்கள் தங்களது காரில் இருந்து வெளியிடப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடு அளவை மற்ற இசட்.எஸ் இவி மாடல்களுடன் ஒப்பிட்டும் பார்க்கலாம். இந்த புதிய எலக்ட்ரிக் ஃபேஸ்லிஃப்ட் காரில் அட்வான்ஸ்டு விஆர் சிஸ்டம் வழங்கப்பட உள்ளது. இதன் மூலமாக 35 இந்தி கலந்த ஆங்கில கட்டளைகளுடன் 100க்கும் அதிகமான கட்டளைகளை கொடுக்கலாம்.

அதாவது இந்த விஆர் சிஸ்டத்தின் வாயிலாக சன்ரூஃப், ஏசி, இசை, நாவிகேஷன் உள்ளிட்டவற்றை குரல்களின் மூலமாகவே கண்ட்ரோல் செய்யலாம். இவற்றுடன் புதியதாக வழங்கப்பட உள்ள லாக் ஸ்க்ரீன் வால்பேப்பர் மற்றும் ஹெட்-யூனிட்டிற்கான தீம் போன்றவற்றை வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்யும் வகையில் எம்ஜி வழங்கவுள்ளது. இத்துடன் 2022 இசட்.எஸ் இவி ஃபேஸ்லிஃப்ட்டிற்கான அம்சங்கள் நின்றுவிடவில்லை.

இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காருடன் வழங்கப்பட உள்ள எம்ஜி பல்ஸ் ஆனது 24x7 நேரமும் ஐ-கால் செயல்பாட்டின் வாயிலாக வாடிக்கையாளர்கள் தேவையை பூர்த்தி செய்யும். அதாவது எம்ஜி பல்ஸ் வாயிலாக பொதுவான உதவி, பயணத்தின் போது தேவைப்படும் உதவிகள் உள்ளிட்டவற்றை இன்ஃபோடெயின்மெண்ட் திரையின் வழியாக பெறலாம். இவற்றுடன் வாடிக்கையாளர்களின் அவசர நேர உதவிக்காக இ-கால் செயல்பாடும் 2022 இசட்.எஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் வழங்கப்பட உள்ளன.
மேலும் படிக்க : இங்கே கிளிக் செய்யவும்