
மாறன்
டைரக்டர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஆக்ஷன் அரசியல் த்ரில்லர் படம் மாறன். இதனை கார்த்திக் நரேன் எழுதி, இயக்கி உள்ளார். தொடரி, பட்டாஸ் படங்களைத் தொடர்ந்து சத்யஜோதி ஃபிலிம்ஸ் உடன் தனுஷ் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள படம் இதுவாகும்

கொண்டாடும் ரசிகர்கள்
மாறன் திரைப்படத்தில் 5 மணிக்கு வெளியான நிலையில் அதனை ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடத் தொடங்கிவிட்டனர். இதில், தனுஷின் தீவிர ரசிகர் ஒருவர், மாறன் திரைப்படத்தின் தலைப்பை பதிவிட்டு தலைவா மாஸ் என பதிவிட்டுள்ளார்.

பத்திரிக்கையாளராக
இத்திரைப்படத்தில் தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் பத்திரிக்கையாளர்களாக நடிக்கின்றனர். சமுத்திரக்கனி வில்லனாக நடித்து மிரட்டி உள்ளார். கிருஷ்ண குமார், மாஸ்டர் மகேந்திரன், ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன் மற்றும் பல முன்னணி கலைஞர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

ஜிவியின் இசை சூப்பர்
மாறன் திரைப்படம் ஒரு நல்ல ஆக்ஷன் த்ரில்லர் படமாக இருக்கு, மாளவிகா மோகன் தன் பங்கை நன்றாக செய்துள்ளார். ஜிவியின் பின்னணி பிஜியம் இசை படத்திற்கு பிளஸ் என்று கருத்து கூறியுள்ளார். குடும்பத்தோடு படத்தை ஒரு முறை பார்க்கலாம் என்றும், 5க்கு 3.2 மதிப்பெண் கொடுத்துள்ளனர்.

ரசிகர்களை ஈர்க்கவில்லை
அண்ணன், தங்கை சென்டிமெண்டை மற்றும் உணர்வுகள், ட்விஸ்டுகள் தரமாக உள்ளது. தனுஷ் படத்தை தூக்கி நிறுத்தினார், ஆனால், கார்த்திக் நரேன் ரசிகர்களை ஈர்க்கத் தவறவிட்டுவிட்டார். அந்த ரசிகர் மாறன் படத்திற்கு 2.5/5 மதிப்பெண் கொடுத்து இருக்கிறார்.

தியேட்டரில் மிஸ் பண்ணிட்டோம்
மாறன் திரைப்படத்தை மிஸ் செய்துவிட்டோமோ என்ற எண்ணம் தோன்றுகிறது. மாறன் ஒரு பாசிட்டிவிட்டி, சூப்பரான திரைப்படம், நரேன் கார்த்தியின் இயக்கம் டாப் டக்கர் என பதிவிட்டுள்ளார்.

என்னடா பண்ணி வச்சிருக்கீங்க
அடேய் இதுக்குதான் இத OTT ல தள்ளி விட்டுடீங்களா? தனுஷ் அண்ணாவா இப்படி பண்ணி விட்டீங்களே டா... தனுஷின் ரசிகர்கள் மட்டும் நடிப்பை ரசிப்பார்கள் மற்றபடி ஒண்ணும் இல்லை என்று நொந்து போய் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க : இங்கே கிளிக் செய்யவும்