''இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லவே விரும்பவில்லை..!'' - தவிர்க்கிறார் தமிழிசை சௌந்தர்ராஜன்

0

மத்திய பா.ஜ.க ஆட்சியில், ஆளுநர்களைக் கொண்டு எதிர்க்கட்சியினரை முடக்குகிறார்கள் என்றக் குற்றச்சாட்டு இருந்துவரும்வேளையில், திடீர் திருப்பமாக.... 'தெலங்கானா சட்டசபைக் கூட்டத்தொடரை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உரையின்றி ஆரம்பித்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ்!

இதையடுத்து, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனிடம் பேசினேன்....

''தெலங்கானா சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரை இன்றியே நடத்தப்பட்டுள்ளதே... இதன் பின்னணியில் என்னதான் நடந்தது?''

''கடைசியாக ஐந்தரை மாதங்களுக்கு முன்புதான் தெலங்கானா சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது. அப்போது கொரொனா தொற்று ஆரம்பித்துவிட்டது. எனவே, சபையை இடையிலேயே கூட்ட வேண்டியதிருக்கும் என்ற காரணத்தால், சபையை முடித்துவைக்காமல், ஒத்திவைத்துவிட்டனர்.

சந்திரசேகர் ராவ்

தொற்று எல்லாம் முடிந்து ஐந்தரை மாதங்களுக்குப் பிறகு இப்போதுதான் பட்ஜெட் தாக்கலுக்காக சபையைக் கூட்டினர். மரபுப்படி அன்றைய தினம் ஆளுநர் உரையோடுதான் சபை தொடங்கப்பட வேண்டும். ஆனால், 'ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்ட சபையைத்தான் மீண்டும் கூட்டுகிறோம். எனவே, ஆளுநர் உரை தேவையில்லை' என தெலங்கானா அரசு டெக்னிக்கலான விஷயத்தை சொல்லிவிட்டது. நானும் அரசியலமைப்புச் சட்டத்தை நன்றாகப் படித்திருக்கிறேன். எனவே, இதுகுறித்து நானும் பெரிதாக கவலை கொள்ளவில்லை... அப்படியே ஏற்றுக்கொண்டேன்.

ஆனால், சபையைக் கூட்டுவதற்கு வேண்டுமானால், ஆளுநர் உரை தேவைப்படாமல் போயிருக்கலாம். சபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கும், அதைத்தொடர்ந்து பட்ஜெட்டுக்கான நிதி நிலையைப் பெறுவதற்கும்கூட ஆளுநரின் கையெழுத்து அவசியம் தேவை. மாநில அரசு செய்வதற்குப் போட்டியாக, நானும் இவ்விஷயத்தில் முரண்டுபிடிக்க விரும்பவில்லை. மக்களுக்கான நலத்திட்டங்கள் எதுவும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்று கருதி, பொறுப்புள்ள ஓர் ஆளுநராக பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான அனைத்து ஆவணங்களிலும் கையெழுத்திட்டு பிரச்னையை சுமூகமாக்கினேன்.''

''மத்திய ஆட்சிப் பொறுப்புக்கு பா.ஜ.க வந்துவிட்டபிறகு, எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களில் ஆளுநர் மூலம் தொல்லை கொடுத்துவருவதான புகார்கள் அதிகரித்துள்ளதுதானே?''

''மத்திய ஆட்சிப் பொறுப்பில் காங்கிரஸ் இருந்தபோதுதான் பல்வேறு மாநிலங்களில் ஆட்சிக் கலைப்புக்குக் காரணமாகவே ஆளுநர்கள் இருந்தனர். ஆனால், பா.ஜ.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்துவிட்ட இந்த காலகட்டத்தில் இப்படியான சம்பவங்கள் எங்குமே நடைபெறவில்லை. ஆனாலும்கூட இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுகிறது என்றால், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மத்திய ஆட்சியின் மீதான தங்களது அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை ஆளுநர்கள் மீது வெளிக்காட்டுகிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.''

கிரண்பேடி - நாராயணசாமி

''அப்படியென்றால், பா.ஜ.க-வுக்கு எதிரான மாநிலக் கட்சிகள் ஆட்சி செய்துவரும், மாநிலங்களில் ஆளுநர் - முதல்வர் இடையே மோதல் போக்கு நிலவிவருவதன் பின்னணியில் அரசியல் இல்லையா?''

''அரசியல் பின்னணிகள் இல்லாமல், மோதல் வருவதில்லை. என்னைப் பொருத்தவரையில், நான் ஆளுநராகப் பொறுப்பேற்றுவிட்ட பிறகு பா.ஜ.க-வோடு எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை. ஆனால், தெலங்கானா ஆளுநராக நான் பொறுப்பேற்ற உடனேயே, அம்மாநில முதல்வர் தரப்பிலிருந்து, 'அரசியல்வாதிகளை ஆளுநராக நியமனம் செய்யக்கூடாது' என்றொரு பத்திரிகை செய்தி வெளிவந்தது.

கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலிருந்தே, பெரும்பான்மையான ஆளுநர்கள் அரசியல் பின்னணியிலிருந்து வந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். நானும்கூட அரசியல் பின்னணியிலிருந்துதான் ஆளுநராக வந்துள்ளேன். அரசியல்வாதிகள் ஆளுநர் ஆகலாம்; ஆனால், ஆளுநரான பிறகு அவர்கள் அரசியல் செய்யக்கூடாது.... அவ்வளவுதான். அந்தவகையில், அரசியல் வேறுபாடுகள் இன்றி, அனைவருக்கும் பொதுவான நபராகத்தான் நான் இருந்துவருகிறேன்.''

''அரசியல் பின்புலத்திலிருந்து ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சி சார்ந்துதானே செயல்படுவார்கள்?''

'' 'ஆளுநர் என்பவர் அரசியல் பின்புலத்திலிருந்து வந்திருக்கலாம். ஆனால், ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு, அரசியல் பிரிவுகளுக்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் பொதுவானவர். தனிப்பட்ட அரசியல் சார்ந்து எந்த ஆளுநரும் இயங்குவதில்லை. மாறாக, எங்கேயேனும் சின்னச்சின்ன பிரச்னைகள் ஏதாவது நடந்திருந்தாலும்கூட, அதை மத்திய ஆட்சியாளர்களுக்கு எதிரான அரசியலாக பூதாகரமாக சிலர் மாற்றிவிடுகிறார்கள்.

மேற்குவங்கத்தில், ஆளுநர் வரும்போது சட்டமன்றத்தின் கதவுகள் பூட்டப்படுகிறது, இன்னும் சில இடங்களில் ஆளுநருக்கு உண்டான மரியாதைகள் கொடுக்கப்படாமல் அவமதிக்கப்பட்டிருப்பதை எல்லாம் எப்படி நியாயம் என்று சொல்லிக்கொள்ள முடியும்?

நானும்கூட அரசியல் பின்னணியிலிருந்துதான் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால், ஆளுநராகப் பொறுப்பேற்ற பிறகு, எந்தவித சார்பும் இன்றி, மக்கள் நலனை மட்டுமே கருத்திற்கொண்டுதான் செயல்பட்டு வருகிறேன்.''

தமிழிசை - ரங்கசாமி

''மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பணிகளில் ஆளுநர்கள் தலையிடுவதென்பது அதிகார அத்துமீறல் ஆகாதா?''

''ஒரு சாமான்யனின் பக்கத்தில் நான் இருக்கும்போது, அவனுக்காக நான் உதவிக்கரம் நீட்டுவது, சரியா அல்லது தப்பா? ஓர் இந்தியக் குடிமகன் நாட்டின் எந்த மூலைக்கும் சென்றுவர முடியும் என்று அரசியலமைப்புச் சட்டம் உரிமை கொடுத்திருக்கிறது. ஆக, ஒரு சாமான்யனுக்கு இந்த உரிமை வழங்கப்பட்டிருக்கும்போது, ஆளுநருக்கு மட்டும் ஏன் உரிமையை மறுக்கிறீர்கள்?

மக்கள் பணிக்காக நான் ஒரு சிற்றூருக்குப் போய்வருகிறேன் என்றால், 'மக்கள் பணி செய்யத்தானே நாங்கள் எம்.பி., எம்.எல்.ஏ-க்களாக இருக்கிறோம். நீங்கள் ஏன் அதைச் செய்கிறீர்கள்' என்று கேட்பது எப்படி சரியாக இருக்கும்? நீங்களும் போய் மக்களுக்காகப் பணி செய்யுங்கள். அதைவிட்டுவிட்டு அரசியல் செய்துகொண்டிருக்காதீர்கள் என்றுதான் சொல்லமுடியும்.''

''மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஓர் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்துவருவது சட்ட விரோதம்தானே?''

''அப்படியென்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை மட்டும்தான் மதிப்போம். மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாத மாநிலங்களவை உறுப்பினர்களைக்கூட மதிக்கமாட்டோம் என்று சொல்கிறார்களா?

ஆளுநரால் ஒப்புதல் அளிக்கக்கூடிய வகையில் சில அரசியல் அமைப்பு விஷயங்கள் இருக்கும்; சில இடங்களில் சட்ட நுணுக்கங்களின்படி ஆளுநர் ஒப்புதல் கொடுக்கமுடியாத வகையிலும் சில விஷயங்கள் இருக்கும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களே போதும் என்றால், நாட்டில் நீதிமன்றம் உள்ளிட்ட மேல் அதிகாரம் கொண்ட அமைப்புகளே தேவையில்லையா? எனவே, மக்கள் பிரதிநிதிகள் சொல்கிற எல்லாவற்றையுமே ஆளுநர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை!''

ஆளுநர் ஆர்.என்.ரவி

''கடந்த மாதம்கூட ஆளுநர் ஆர்.என்.ரவி உங்களை நேரில் சந்தித்தாரே?''

''மரியாதை நிமித்தமாகவும், நட்பு ரீதியாகவும் ஆளுநர்கள் நாங்கள் நேரில் சந்தித்து கருத்துகளைப் பரிமாறிக்கொள்வோம். அண்மையில் நானும்கூட, கேரள ஆளுநரை சந்தித்து என்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டேன். இதுபோன்ற சூழல்களில், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் குறித்தும் ஆலோசிப்போம்தான். ஆனால், இவற்றையெல்லாம் அதிகாரபூர்வமான ஆலோசனை என்று சொல்லிவிட முடியாது.''

''குடியரசுத் தலைவர் பதவிக்கு உங்கள் பெயரும் பரிந்துரைப் பட்டியலில் இருப்பதாக செய்திகள் வெளியாகின்றனவே?''

''இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லவே விரும்பவில்லை...!'' (சிரிக்கிறார்)


மேலும் படிக்க ''இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லவே விரும்பவில்லை..!'' - தவிர்க்கிறார் தமிழிசை சௌந்தர்ராஜன்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top