சூட்டைக் கிளப்பும் மேக்கேதாட்டு அணை விவகாரம்: தீர்வைக் கொடுக்குமா தமிழக அரசின் தீர்மானம்?!

0

`1971 கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்க, காவிரி துணையாறு ஹேமாவதியில் அணை கட்டுவோம் என்ற தேர்தல் அஸ்திரத்தை கையிலெடுத்தார் ஆளும் காங்கிரஸ் முதல்வர் வீரேந்திர பட்டீல். பதறிப்போன அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியதோடு, உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். ஆனால், அப்போதைய காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க இருந்ததால், பிரச்னையை தீர்த்துவைப்பதாகக் கூறிய இந்திரா காந்தியின் ஆலோசனையை ஏற்று வழக்கை வாபஸ் வாங்கினார் கருணாநிதி.

சட்டப்பேரவையில் கருணாநிதி

விளைவு, காவிரி வழக்கு வாபஸ் பெற்றதை வெற்றியாக முன்னிறுத்திய காங்கிரஸ் கட்சி, கர்நாடகாவில் அமோக வெற்றிபெற்றது. பிரச்னை தீரும் என நம்பியிருந்த தமிழக அரசுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்ச, ஹேமாவதி அணை மட்டுமல்லாமல் அடுத்தடுத்து ஹேரங்கி, கபினி அணைகளையும் கர்நாடக அரசு வெற்றிகரமாக கட்டிமுடித்தது.

இந்தச் சம்பவம் அரங்கேறி ஏறக்குறைய அரை நூற்றாண்டு கடந்திருக்கும் சூழ்நிலையில், தற்போது அதேபோன்றதொரு அஸ்திரத்தை தமிழகத்தை நோக்கி அனுப்பியிருக்கிறது கர்நாடக அரசு. அடுத்த ஆண்டு கர்நாடகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த 2022-ம் ஆண்டுக்குள் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணைக்கான கட்டுமானப்பணிகள் தொடங்கும் என பகிரங்கமாக அறிவித்திருக்கிறார் கர்நாடக பா.ஜ.க முதல்வர் பசவராஜ் பொம்மை. இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்திவந்த நிலையில், தற்போது தமிழக சட்டப்பேரவையில் மேக்கேதாட்டு அணைக்கு எதிராக, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

சூட்டைக் கிளப்பிய கர்நாடக அரசின் அறிவிப்பு:

கடந்த மார்ச் 4-ம் தேதி, கர்நாடக அரசு சட்டமன்றத்தில் தாக்கல்செய்த 2022-23 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணைகட்ட ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக அதிரடியாக அறிவித்தது. அறிக்கை குறித்து சட்டமன்றத்தில் பேசிய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, `தமிழக அரசு எதிர்த்தாலும், மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று நிச்சயம் அணை கட்டுவோம்' என உறுதியாகக் கூறினார். இது தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்

அந்த நிலையில், கடந்த மார்ச் 5-ம் தேதி பெங்களூர் வந்த மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ``நீர்ப்பங்கீடு என்பது மாநிலங்களுக்குரிய விவகாரம். அதில் மத்திய அரசு தலையிடமுடியாது. தமிழ்நாடும் கர்நாடாகாவும் இணைந்து பேச்சுவார்த்தையின்மூலம் தீர்வுகாண வேண்டும்" என கூறிச்சென்றார்.

இதற்கு அதிருப்தி தெரிவித்திருக்கும் கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா, ``கர்நாடகா மக்களின் மனதை காயப்படுத்தும் வகையில் மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் பேசியிருக்கிறார். கர்நாடகாவின் காவிரிப்படுகையிலிருந்து தமிழகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 60-70 டி.எம்.சி நீர் வீணாகச் செல்கிறது. இவற்றை சேமித்துவைக்க கர்நாடக அரசுக்கு தார்மீக உரிமை உள்ளது. எனவே, மேக்கேதாட்டு திட்டத்துக்கான அனைத்து அனுமதிகளையும் மத்திய அரசு விரைவில் வழங்கவேண்டும்" என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

சித்தராமையா

இதையடுத்து, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, ``மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிக்க விரைவில் சட்டமன்றத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தப்படும். இந்த திட்டத்துக்கு ஒப்புதல் வழங்குமாறு மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சரை டெல்லி சென்று நேரில் சந்தித்து வலியுறுத்தவிருக்கிறேன்" என அதிரடியாகக் கூறினார். மேலும், ``மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான விவரங்களை காவிரி மேலாண்மை வாரியத்துக்கு அனுப்பியிருப்பதாகவும், அதற்கான ஒப்புதல் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்தபிறகு, இந்த ஆண்டு இறுதிக்குள் அணையை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும்" எனவும் நம்பிக்கைத் தெரிவித்தார்.

மேக்கேதாட்டு அணை விவகாரம் - பாஜக

தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு:

அந்தநிலையில், ``எந்தச் சூழ்நிலையிலும் மேக்கேதாட்டு அணை கட்டப்படுவது கட்டாயம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாகத் தலையிட்டு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அணை தொடர்பான கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரிக்க மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டப் பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும்" என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அ.ம.மு.க தலைவர் டி.டி.வி தினகரன் முதலான தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் கோரிக்கை வைத்தனர்.

மேலும், ``மேக்கேதாட்டு அணை கட்டுவதற்காக, கர்நாடக பா.ஜ.கவும், காங்கிரஸிம் ஒரே அணியில் நின்று குரல்கொடுப்பதோடு, அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவரும் நிலையில், தமிழகத்தில் உள்ள பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் கள்ள மௌனம் காப்பதாகவும், தி.மு.க-அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் மெத்தனப்போக்குடன் செயல்படுவதாகவும், குறிப்பாக தமிழக அரசு மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் இதுவரை ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்.

காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்

தொடர்ந்து பேசிய அவர், ``கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்திலும் சரி, இப்போதைய தி.மு.க ஆட்சியிலும் சரி, `நாங்கள் அணை கட்டவிடமாட்டோம்' என பொத்தாம் பொதுவாக அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்களேத் தவிர, உருப்படியான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேக்கேதாட்டு அணைக்கு தடை வித்திக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு பல ஆண்டுகளாகளாகியும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கும் நிலையில், அந்த வழக்கைக்கூட விரைவுபடுத்த சட்ட முயற்சிகளையும் தி.மு.க அரசு செய்யவில்லை.

காவிரி உரிமை மீட்புக் குழு

கடந்த காலங்களில் இப்படி மெத்தனமாக நடந்துகொண்டதால்தான் ஹேமாவதி, ஹேரங்கி, கபினி உள்ளிட்ட அணைகளை கட்டி தமிழகத்திற்கான காவிரி உரிமையைப் பறித்துக்கொண்டது. எனவே, இனியும் தாமதிக்காது, மேக்கேதாட்டு அணைகட்ட தடைவிதிப்பதற்கும், தமிழகத்தின் வாழ்வாதாரமான காவிரி நீர் உரிமையை பாதுகாக்கவும் மத்திய அரசுக்கு தமிழக அரசு மற்றும் அரசியல், விவசாய இயக்கங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில்:

அந்த விவகாரம் குறித்து பதிலளித்துப்பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ``காவிரி நடுவர் மன்ற ஆணையத்தின் இறுதி தீர்ப்பின் படியும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படியும், எந்த ஒரு புதிய அணையைக் கட்டுவதற்கும் கர்நாடக அரசிற்கு அனுமதி கிடையாது. சுற்றுச்சூழல் அமைச்சகம் அளித்த குறிப்பில், தமிழ்நாடு அரசின் இசைவில்லாமல், இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க சாத்தியக்கூறு இல்லை என்றும் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. அப்படியிருக்க, உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிற காவிரி நீரை இடைமறித்து மேக்கேதாட்டுவில் அணைக் கட்டுவோம் என்று கர்நாடக ஆட்சியாளர்கள் கூறிவருவதும், அணைகட்ட பட்ஜெட்டில் நிதிஒதுக்கீடு செய்திருப்பதும் இந்திய இறையாண்மை மற்றும் கூட்டாட்சி தத்துவத்திற்கும் முரணானது" என தெரிவித்தார்.

மிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

மேலும், ``இந்த திட்டத்திற்காக ஆயிரம் கோடியல்ல, ஐந்தாயிரம் கோடியை கர்நாடக அரசு ஒதுக்கினாலும், ஒரு செங்கல்லை கூட வைக்க தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். இந்தத் திட்டத்தைத் தடுப்பதற்குண்டான சட்டப்படியான நடவடிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசு மேற்கொள்ளும். தமிழகத்தில் இருக்கின்ற அரசியல் கட்சிகள் இதுகுறித்து விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும் என நியாயமான கோரிக்கை வைத்திருக்கிறார்கள். விரைவில், கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணைக்கட்ட முயற்சிப்பதைத் தடுக்க, சட்டமன்றக் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து நிலைமைக்கேற்றவாறு பரிசீலித்து முடிவெடுக்கப்படும்" என உறுதியளித்தார்.

ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்:

இந்த நிலையில், மேக்கேதாட்டு அணைகட்ட எதிர்ப்பு தெரிவித்து 21.03.2022 அன்று சட்டப்பேரவையில் தமிழக அரசு தனித் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

தனிநபர் தீர்மானத்தைக் கொண்டுவந்துப் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ``எந்த அனுமதியும் இன்றி தன்னிச்சையாக மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கர்நாடக அரசின் செயலுக்குத் தமிழக சட்டப்பேரவை கடும் கண்டனத்தைத் தெரிவித்து கொள்கிறது. மேக்கேதாட்டு திட்டத்திற்கு எந்தவித அனுமதியும் ஒன்றிய அரசு வழங்கக் கூடாது" என்றார்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

மேலும், ``தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தண்ணீரை தடுத்து அணை கட்டுவோம் என்று கர்நாடக அரசு கூறுவது அடாவடித்தனம்! உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒரு மாநில அரசாங்கம் ஏற்கவில்லை என்றால், இங்கு கூட்டாட்சித் தத்துவம் எங்கே இருக்கிறது. மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்தான் நடத்துகிறார்கள். தமிழகத்தில் பல்வேறு ஆறுகள் ஓடினாலும் நாம் தண்ணீருக்காகக் கையேந்தும் நிலையில் இருக்கிறோம். அண்டை மாநிலத்துடன் நல்லுறவைப் பேணும் அதே நேரத்தில், நமது உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது.

மேக்கேதாட்டு

காவிரி பிரச்னையில் கர்நாடகாவில் அரசியல் கட்சியினர் ஒற்றுமையாக இருக்கின்றனர். தமிழகத்தில் தி.மு.க கொண்டு வந்த தீர்மானத்தை அ.தி.மு.க-வும், அ.தி.மு.க கொண்டு வந்த தீர்மானத்தை தி.மு.க-வும் ஆதரித்தது. இந்த நேரத்தில், `நீங்கள் என்ன செய்தீர்கள்? நாங்கள் என்ன செய்தோம்’ என்றெல்லாம் நமக்குள் மோதிக்கொண்டிருக்காமல், தமிழக அரசியல் கட்சியினர் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தமிழகத்திற்கான உரிமையை நாம் போராடி மீட்க வேண்டும். அப்படி மீட்காவிட்டால், வருங்கால தலைமுறையினர் நம்மைச் சபித்து விடுவார்கள்!" எனத்தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை

அதன்பின்னர், அனைத்துக் கட்சியினரின் ஆதரவுடன் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம், சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தமிழக அரசு, காவிரி உரிமையைத் தற்காத்துக்கொள்ளுமா அல்லது தவறவிடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!


மேலும் படிக்க சூட்டைக் கிளப்பும் மேக்கேதாட்டு அணை விவகாரம்: தீர்வைக் கொடுக்குமா தமிழக அரசின் தீர்மானம்?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top