`உக்ரைனிய தோட்டாக்கள் வேண்டும்’... போரை தவிர்க்க தங்களை தாங்களே சுட்டுக்கொள்ளும் ரஷ்ய வீரர்கள்?!

0

உக்ரைன் ரஷ்யா இடையே தொடரும் கடுமையான போரில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான உக்ரைனிய குடிமக்கள் தங்கள் நாட்டை விட்டு அண்டை நாடுகளுக்கு அகதிகளாக அடைக்கலம் தேடி சென்றுள்ளனர். இந்த நிலையில், ரஷ்ய ராணுவ வீரர்கள் தங்களை தாங்களே காலில் சுட்டுக்கொள்வதாக `Daily Star’ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ``உக்ரைனில் நடக்கும் போரிலிருந்து தப்பிக்க ரஷ்ய ராணுவ வீரர்கள் தங்கள் காலில் தாங்களே சுட்டுக்கொள்ளும் அளவுக்கு புதினின் ராணுவத்தில் மன உறுதி மிகவும் குறைந்துள்ளது.

உக்ரைன் -ரஷ்யா போர்

மூன்று வாரமாக நடைபெறும் மிருகத்தனமான போரினால் ரஷ்ய ராணுவ வீரர்கள் சோர்வடைந்து வருவதாகத் தோன்றுகிறது. இதுவரை 7,000 ரஷ்யர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், தாமாக முன்வந்து தங்கள் ராணுவ பதவிகளை விட்டு வெளியேறுபவருக்கு கடுமையான தண்டனைகள் காத்திருக்கின்றன. எனவே, விரைவாக இல்லம் திரும்ப தங்களை தாங்களே காயப்படுத்திக்கொள்கின்றனர்" எனக் குறிப்பிட்டுள்ளது.

பெலாரஸ்ய ஊடகமான நெக்ஸ்டாவின் கூற்றுப்படி, ``புதினின் ராணுவ வீரர்கள் உக்ரைனிய தோட்டாக்களை தேடுகிறார்கள். அப்போது தான் காலில் சுட்டுக் கொள்ள முடியும்.

உக்ரைன்

உக்ரைன் போர்க்களத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற ஆசையில் புதினை மறுப்பவர்கள் எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள வேண்டிவரும். ரஷ்ய வீரர் ஒருவர் இது தொடர்பாக கூறும் போது,"14 நாட்களாக துப்பாக்கிச் சூடு நடத்துகிறோம்.

எங்களுக்கான உணவைத் திருடுகிறோம், வீடுகளுக்குள் புகுந்து, பொதுமக்களைக் கொல்கிறோம். எங்கும் சடலங்களாக உள்ளன" எனக் வேதனையை வெளிப்படுத்தினார்.

உக்ரைன் ராணுவ வீரகள்

மேலும், ரஷ்ய ராணுவ வீரர்களில் ஒருவரான கல்கின் செர்ஜி அலெக்ஸீவிச், "எனது அணிக்காக, இந்த நிலங்களின் மீதான எங்கள் ஆக்கிரமிப்பிற்காக உக்ரைனில் உள்ள ஒவ்வொரு குடிமகனிடமும், முதியோர்களிமும், பெண்களிமும், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எங்கள் துரோகப் படையெடுப்பிற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்தது குறிப்பிடதக்கது.


மேலும் படிக்க `உக்ரைனிய தோட்டாக்கள் வேண்டும்’... போரை தவிர்க்க தங்களை தாங்களே சுட்டுக்கொள்ளும் ரஷ்ய வீரர்கள்?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top