
கோபமாய் விள்ளாதே குவியச் சிரியாதே
பாவத்தைக் காணாதே பாராக்கிரமம் காட்டாதே
ஆக்கிரமம் எல்லாம் அடக்கியிரு என்மகனே
தாக்கிரவான் ஆகிடினும் சற்றும் பகையாதே

பொல்லாதாரோடு பொறுமை உரை மகனே
கோபத்தைக் காட்டாதே கோளோடு இணங்காதே!

சத்தியம் தான் மறந்து மத்திபத்தைச் செய்யாதே
மத்திபசெய்தாயானால் மனநாகம் தீண்டிவிடும்

நீ பெரிது நான் பெரிது
நிச்சயங்கள் பார்ப்போம் என்று
வான் பெரிது என்று அறியாமல்
மாள்வார் வீண் வேதம் உள்ளோர்

அன்பு குடிகொண்ட அதிகமங்கா நீங்களெல்லாம்
பொறுத்து இருங்கோ பூலோகம் ஆள வைப்பேன்

ஆசை வையாதுங்கோ அவகடம் செய்யாதுங்கோ
ஞாயமுறை தப்பி நன்றி மறவாதுங்கோ

எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே
வலியாரைக் கண்டு மகிழாதே என் மகனே!

கொத்தைக் குறையாதே குறை மரக்கால் வையாதே
உபதேசம் சொல்லும் கூலி உடன் கையில் கொடுத்திடுங்கோ

எளியோடைக் கண்டால் ஈந்து இரங்கிடு நீ
வரம்பு தப்பாதே வழி தவறி நில்லாதே

நல்ல மகனே வரும் நற்காலம்
செல்ல மகனே தொலையுமே என் கணக்கு
மேலும் படிக்க அய்யா வைகுண்டர் அவதார தினம்: "எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே!" | பொன்மொழிகள்