
மாநாடு 100வது நாள்
இத்திரைப்படம் வெளியாகி இன்றோடு 100 நாளாவதையொட்டி தயாரிப்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எண்ணித் துணிக கருமம் என்ற வள்ளுவன் நமக்கு எப்போதுமே சிறந்த மோட்டிவேட்டர். தயங்கி நிற்கும்போதெல்லாம் "துணிந்து இறங்கு" எனத் தட்டிக் கொடுப்பவர்.

"மாநாடு" தரமான வெற்றி
துணிந்து இறங்கி செய்த படம் "மாநாடு" . இன்று தன்னம்பிக்கையின் உச்சமாய் நூறாவது நாளைத் தொட்டிருக்கிறது. சமீபகாலமாக 100வது நாள் கடலில் போட்ட பெருங்காயமாய் கரைந்தே போய்விட்டது. ஆனால், நான்கு நாட்களில் திரையரங்கிலிருந்து படத்தை துரத்திவிடும் இந்நாட்களில் "மாநாடு" தரமான வெற்றியை, மகிழ்ச்சியை தமிழ் சினிமாவோடு பகிர்ந்திருக்கிறது.

அனைவருக்கும் மனமார்ந்த நன்றி
இசை இளவல் யுவன் ஷங்கர் ராஜா ஒரு ராஜாங்கமே செய்துவிட்டார். அவருக்கு என் நன்றிகள். அசாத்திய தொழில் நுட்பங்களோடு அசத்திய ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன், "எடிட்டிங் கிங்" கே எல் பிரவீண், சண்டைப்பயிற்சியாளர் சில்வா, கலை இயக்குநர் உமேஷ் ஜே குமார், ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர், விளம்பர வடிவமைப்பு ட்யுனி ஜான் ஆகியோர் மாநாடு படத்தின் பலமாக நின்றார்கள். அவர்களுக்கு என் மனதார்ந்த நன்றிகள்.

எஸ்.ஜே சூர்யாவின் மேஜிக்
இந்தப் படத்தில் வேலை செய்த உதவி இயக்குநர்கள், தயாரிப்பு நிர்வாகி சுப்பு என்ற சுப்பிரமணியனுக்கும், மற்ற தயாரிப்பு மேலாளர்கள், லைட் மேன்கள், சமையல் கலைஞர்கள் உள்ளிட்ட அத்தனை தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றிகள். எனது மிகப் பெரிய பலமாக நின்ற பத்திரிகை நண்பர்கள் அனைவருக்கும் தனித்தனியாக என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் கொண்டு சேர்த்த படம் இது. உடன் நிற்கும் நண்பர்களாக என்றும் இருங்கள். மிக்க நன்றி. மாநாடு படத்தின் வெற்றியை மேஜிக்காக மாற்றிய எஸ்.ஜே சூர்யாவுக்கு என் மானசீக நன்றிகள். என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார்.
மேலும் படிக்க : இங்கே கிளிக் செய்யவும்