செர்பியாவில் ஒரு பராசக்தி | உலக சினிமா #MyVikatan

0

13வது பெங்களூரு பன்னாட்டு திரைப்பட விழாவில் மூன்றாம் நாள் திரையிடலில் முத்தாக அமைந்த சத்தான திரைப்படம் ‘பாதர்’. இயக்குநர் சர்டான் கொலுபொவிச் ‘பாதர்’ திரைப்படத்தின் மூலம் ‘பெர்லின் திரைப்பட விழா’ உட்பட 15க்கும் மேற்பட்ட விருதுகளை அள்ளியிருக்கிறார்.பாதர் திரைப்படம் செர்பிய நாட்டின் அரசியல்,சமூக அவலங்களை படத்தின் அனைத்து சட்டகங்களிலும் நிரப்பி இருக்கிறது.

படத்தின் தொடக்க காட்சியே அதிர வைக்கிறது. ஒரு தொழிற்சாலையில் ஒரு பெண் தன் இரு குழந்தைகளுடன் வந்து நீதி கேட்கிறாள். ‘தன் கணவன் நிக்கலோவ் என்பவரை வேலையிலிருந்து நீக்கி ஒரு வருடம் கழிந்தும் சம்பளப்பாக்கியை தரவில்லை. அனைவரும் பட்டினி கிடக்கிறோம்.இனி பொறுக்க இயலாது’ என தன் மீது கொண்டு வந்த பெட் ரோலை ஊற்றி பற்ற வைத்துக்கொள்கிறாள்.

உடனடியாக ஊழியர்கள் ஓடி வந்து காப்பாற்றி விடுகிறார்கள். அந்தப்பெண்ணை மருத்துவமனையில் சேர்த்து குணப்படுத்தி மனநல சிகிச்சை வழங்குகிறார்கள். குழந்தைகளை சமூக நலத்துறை தங்களது பொறுப்பில் பாதுகாக்கிறார்கள்.

செய்தியறிந்து ஓடி வந்த நிக்கலோவ் குழந்தைகளை ஒப்படைக்குமாறு சமூகநலத்துறை அதிகாரிகளிடம் மன்றாடுகிறான்.

‘நிரந்தர வேலையில்லை;வீட்டில் தண்ணீர்,மின்சாரம் அனைத்தும் துண்டிக்கப்படுள்ளது;குழந்தைகளை வளர்க்க உனக்கு தகுதி இல்லை’ என சமூகநலத்துறை உயர் அதிகாரி மறுத்து விடுகிறார

நீதி கேட்டு நெடும் பயணம் மேற்கொள்கிறான் நிக்கலோவ். 300 கிலோமீட்டர் கடந்து தலைநகரை அடைந்து சமூகநலத்துறை அமைச்சரை கண்டு முறையிட நடந்து செல்கிறான். காரணம் கையில் பணம் இல்லை. ஆனால், துணிச்சலும் தன்னம்பிகையும் நிறைந்து இருக்கிறது.

கார்கள் பறக்கும் விரைவு வழிச்சாலைகளில் மனிதன் நடக்க அனுமதி இல்லை. எனவே, காடு,மலை,கிராமம் என பயணிக்கிறான் நிக்கலோவ். போகிற வழியெல்லாம் மனிதர்களும்,விலங்குகளும் மனிதநேயத்துடன் நடந்து கொள்கிறார்கள். கும்பலாக நிற்கும் ஓநாய்கள் கூட நிக்கலோவை தாக்கவில்லை.

ஐந்து நாட்கள் நடந்து சமூக நலத்துறை அமைச்சகத்தை அடைந்தும் அமைச்சரை காண இயலவில்லை.

அதிகாரவர்க்கம் சாக்கு போக்கு சொல்லி அலைக்கழிக்கிறது. ஒற்றை மனிதனாக தர்ணா போராட்டத்தை மேற்கொள்கிறான்.

ஊடகங்கள் நிக்கலோவ் நிலையைச்சொல்லி நாடே நடுங்கிய பிறகு அமைச்சரின் உதவியாளர் ஓடி வந்து சந்திக்கிறார். ஆவன செய்கிறேன்’ என வாக்குறுதி அளித்து அவனுடன் செல்பி எடுத்து டிவிட்டர் பக்கத்தில் பகிரந்து கொள்கிறார். சமூக நலத்துறை அமைச்சகம் பரிந்துரைத்தாலும் அந்தப்பகுதியைச்சார்ந்த சமூகநலத்துறை அதிகாரி குழந்தைகளை ஒப்படைக்க மறுக்கிறார்.

காரணம் ‘சிஸ்டம்’. சட்டத்தை காரணம் காட்டி நிக்கலோவை கட்டம் கட்டுகிறார்.

அது கூட அதிர்ச்சியில்லை. நிக்கலோவ் வீட்டில் உள்ள அனைத்துப்பொருட்களையும் எடுத்துச்சென்று விட்டார்கள் அக்கம்பக்கத்தார். இக்காட்சிதான் செர்பிய சமூகத்தின் அவலநிலையை அறைந்து சொல்கிறது.

Father
Father
Father
Father
Father
Father

பராசக்தி படத்தில் தனது வசனங்கள் மூலம் சமூக அவலத்தை படம் பிடித்துக்காட்டினார் கலைஞர். பாதர் படத்தில் காட்சி வடிவத்தில் காட்டுகிறார் இயக்குநர் சர்டான் கொலுபொவிச்.

தமிழ்நாட்டில் பராசக்தி மாற்றங்களை நிகழ்த்தியது. செர்பியாவில் பாதர் நிகழ்த்துமா?

காத்திருப்போம் ‘நிக்கலோவ்’ போல!.

‘Father’ Running time: 119 MIN. (Original title: "Otac”) Crew: Director: Srdan Golubović. Screenplay: Golubović, Ognjen Sviličić. Camera: Aleksandar Ilić. Editor: Petar Marković. With: Goran Bogdan, Boris Isaković, Nada Šargin, Milica Janevski.

மேலும் படிக்க செர்பியாவில் ஒரு பராசக்தி | உலக சினிமா #MyVikatan
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top