
மீண்டும் சூர்யா–ஜோதிகா
இந்நிலையில் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்க போவது டைரக்டர் பாலா என்பது ஏற்கனவே உறுதியாகி விட்டது. நீண்ட இடைவேளைக்கு பிறகு பாலா இயக்க போகும் இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. இதில் மற்றொரு சுவாரஸ்யமாக 16 வருடங்களுக்கு பிறகு சூர்யாவிற்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க போகிறாராம்.

எப்போ ஷுட்டிங்
இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க போவதாகவும், மார்ச் 18 ம் தேதி இந்த படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது. இதற்காக மதுரையில் பிரம்மாண்ட செட் தயாராகி வருவதாக கூறப்பட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை முடித்து ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அட இவங்களும் இருக்காங்களா
இந்நிலையில் இந்த படம் பற்றிய அடுத்த அப்டேட்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, இந்த படத்தில் ஜோதிகா மட்டும் இல்லையாம். மொத்தம் மூன்று ஹீரோயின்கள், இரண்டு ஹீரோக்கள் நடிக்கிறார்களாம். சூர்யா, ஜோதிகாவுடன், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்க போகிறார்களாம். நடிகர் அதர்வாவும் மிக முக்கியமான ரோலில் நடிக்க போகிறார்களாம். விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாம்.

ஹீரோவை மாற்றிய பாலா
ஆரம்பத்தில் பாலா இயக்க போகும் நடித்தில் ஹீரோவாக அதர்வாவும், ஹீரோயினாக கீர்த்தி சுரேஷும் தான் நடிக்க போவதாக கூறினார்கள். இந்த படத்தில் சூர்யா கெஸ்ட் ரோல் தான் செய்கிறார்கள் என்றார்கள். அதற்கு பிறகு தான் சூர்யாவே ஹீரோவாக நடிக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது அனைவருமே இந்த படத்தில் நடிப்பதாக கூறுகிறார்கள்.

படம் வேற லெவலில் இருக்குமே
ஏற்கனவே பாலா படம் என்றால் நடிப்பை பின்னுவார்கள் என்பார்கள். ஆனால் தற்போது இந்த படத்தில் இணைந்துள்ள அனைவருமே நடிப்பில் சிறந்தவர்கள் என ஏற்கனவே பல படங்களில் நிரூபித்து, பெயர் வாங்கியவர்கள். இவர்கள் அனைவரையும் ஒரே படத்தில் இணைத்து நடிக்க வைக்க போகிறார் பாலா. அப்படியானால் படம் வேற லெவலில் தான் இருக்கும், விருதும் கன்ஃபார்ம் என ரசிகர்கள் பேச துவங்கி விட்டனர்.
மேலும் படிக்க : இங்கே கிளிக் செய்யவும்