
தனி ஸ்டைல்
தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான வெற்றிமாறன் இயக்கிய அடுத்தடுத்த திரைப்படங்களும் வெற்றி பெற்று தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றிருக்கிறது. தனக்கென தனி ஸ்டைலை வைத்துக்கொண்டு உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு உண்மைத் தன்மை மாறாமல் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக வலம் வந்து கொண்டுள்ள இயக்குனர் வெற்றிமாறன் தனுஷுடன் இணைந்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் சமீபத்தில் வெளியான அசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்

சூரி ஹீரோவாக
மீண்டும் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் இணைய உள்ள நிலையில் வடசென்னை 2 தயாராகி வருகிறது. இந்த நிலையில் இப்பொழுது தமிழில் முன்னணி காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கும் சூரி ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார் இந்த படத்திற்கு விடுதலை என டைட்டில் வைக்கப்பட்டிருக்க இதில் கதாநாயகியாக நடிகர் ஜிவி பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ நடித்து வருகிறார். மேலும் விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

வெற்றிமாறன் தயாரிப்பாளராகவும்
விடுதலை படத்தைத் தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன் அதைத் தொடர்ந்து விஜய்யை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக கூறியுள்ளார். இவ்வாறு இயக்குனராக படு பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் வெற்றிமாறன் தயாரிப்பாளராகவும் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் உதயம் NH4,விசாரணை, ராஜாவாக போகிறேன், காக்கா முட்டை, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே ,மிக மிக அவசரம், வடசென்னை, அதிகாரம், சங்கத்தலைவன் உள்ளிட்ட படங்களை தயாரித்து உள்ளார்.

பெட்ரோ
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தயாரிப்பில் வெளியாகும் திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இந்த நிலையில் கன்னடத்தில் நடேஷ் ஹெக்டே இயக்கத்தில் ரிஷாப் ஷெட்டி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பெட்ரோ படத்தை வெளியிடுகிறார்.
பூசன் இன்டெர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவலில் தேர்வாகிய கன்னடத்தில் முதல் திரைப்படமான பெட்ரோ படத்தில் கோபால் ஹெக்டே என்பவர் லீட் ரோலில் நடித்துள்ளார். வேட்டைக்காரனுக்கும் நாய்க்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் பற்றி ராவாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம் சர்வதேச அளவில் கவனத்தை பெற்று பல விருதுகளை வென்று வருகிறது. வெற்றிமாறன் இந்த படத்தை வெளியிடுவதால் இப்படம் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் படிக்க : இங்கே கிளிக் செய்யவும்