எளிய மக்களை அதிகம் நேசிக்கும் அன்பர் நீங்கள். குருபகவான் 14.4.22 முதல் 22.4.23 வரை, உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜன்ம குருவாகப் பலன் தரப் போகிறார். பொறுப்புகளும், வேலைச்சுமையும், தேடலும் அதிகரிக் கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களை எதிர்க்கும் சூழல் வரலாம்.

எவருக்கும் வாக்குறுதி அளிக்கவேண்டாம்; சிலருக்கு ரத்த அழுத்தம் பாதிப்புக்குள்ளாகலாம். வெளி உணவுகளைத் தவிர்க்கவும். குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை அனுமதிக் காதீர்கள். அவநம்பிக்கையை வேரறுப்பது நல்லது. வீண் சந்தேகம், ஈகோ பிரச்னைகள் வேண்டாம். உங்களின் தன்மானத்தைப் பாதிக்கும் அளவுக்குச் சில சொந்தபந்தங்கள் நடந்து கொள்வார்கள்; பொருட்படுத்த வேண்டாம். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்.
குருபகவானின் பார்வை பலன்கள்
குரு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் கணவன்-மனைவிக்குள் அன்பு குறையாது. வீட்டில் தடைப்பட்டிருந்த திருமணம் நல்ல விதத்தில் முடியும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு.
குரு உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகளின் பிடிவாதக்குணம் தளரும். மகனுக்கு வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் வில்லங்கம் விலகும். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிப்பீர்கள். உடன் பிறந்தவர் களின் ஒத்துழைப்பு உண்டு. அவர்களால் செலவுகளும் இருக்கும்.
குரு 9-ம் வீட்டைப் பார்ப்பதால் வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். தந்தை வழிப் பாட்டன் சொத்துகள் வந்து சேரும். அரசுக் காரியங்கள் நல்லவிதத்தில் முடியும். அரசியல்வாதிகள் கோஷ்டிப் பூசலில் சிக்காமல் இருப்பது நல்லது.
குருபகவானின் நட்சத்திர சஞ்சார பலன்கள்
14.4.22 முதல் 29.4.22 வரை குரு, தனது பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால் சுறுசுறுப்பாவீர்கள். வேலை கிடைக்கும். பணம் வரும். வயிற்று வலி, சைனஸ் தொந்தரவு குறையும். உத்தியோகத்தில் கூடுதல் பதவி வரும். சம்பளம் உயரும். வி.ஐ.பிகள் நண்பராவார்கள்.
30.4.22 முதல் 24.2.23 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு செல்வதால் தடைகள் நீங்கும். வீட்டு லோன் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். நீண்டகால சிக்கல் களுக்குத் தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். 8.8.22 முதல் 16.11.22 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்திலேயே குரு வக்ரத்தில் செல்வதால், ஷேர் மூலம் பணம் வரும். அலைச்சலுடன் ஆதாயமும் உண்டா கும். வீடு, வாகன வசதிகள் பெருகும்.
24.2.23 முதல் 22.4.23 வரை குருபகவான் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் நண்பர்கள், உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். புதன் பாதகாதிபதியாக இருப்பதால், தாயாரின் உடல் நலனில் கவனம் தேவை. சிறு விபத்து, வீண் செலவுகள் வந்து நீங்கும்.
வியாபாரத்தில்
பெரிய முதலீடுகள் வேண்டாம். வாடிக்கையாளர்களை மனம் கோணமல் நடத்துங்கள். புதுத் துறையில் கால் பதிக்க வேண்டாம். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். உணவு, கமிஷன் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.
உத்தியோகத்தில்
பெரிய பொறுப்புகள் வந்து சேரும். சம்பளம் உயரும். சலுகைகளும் உண்டு. ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அலுவலக சூழ்நிலை சுமுகமாக இருக்கும். மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி நெளிவு சுளிவுகளைக் கற்றுத் தருவதுடன், அவ்வப்போது வெற்றியைப் பெற்றுத் தருவதாகவும் அமையும்.
பரிகாரம்: மகம் நட்சத்திரம் நடைபெறும் நாளில், தஞ்சாவூருக்கு அருகில் திருக்கருகாவூரில் அருளும் ஶ்ரீமுல்லைவனேஸ்வரரையும் ஶ்ரீதட்சிணாமூத்தியையும் சென்று வணங்கி வாருங்கள்; ரத்த தானம் செய்யுங்கள். அந்தஸ்து பெருகும்; முன்னேற்றம் உண்டாகும்.
மேலும் படிக்க 2022 குருப்பெயர்ச்சி மீனம் ராசிபலன்கள்