மனிதநேயம் மாறாதவர் நீங்கள். குருபகவான் 14.4.22 முதல் 22.4.23 வரை உங்கள் ராசிக்கு 7-ல் அமர்ந்து, உங்களை நேருக்கு நேர் பார்க்கவுள்ளார். உங்களு டைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள். கடன் வாங்கி ஏமாற்றியவர்கள், பணத்தைத் திருப்பித் தருவர். குடும்பத்தில் மதிப்பு கூடும். பிரிந்திருந்த தம்பதி ஒன்றுசேர்வர். `வாரிசு இல்லையே' என ஏங்கித் தவித்த தம்பதிக்கு அழகான குழந்தை பிறக்கும்.
பிள்ளைகளின் வாழ்க்கைத் தரம் உயரும். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிப்பீர்கள். வெளி வட்டாரத்தில் மரியாதை கூடும். வேலைக்காகக் காத்திருக்கும் அன்பர்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு விரைவில் கல்யாணம் கூடிவரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பும் சிலருக்குக் கிட்டும். மீதித் தொகையைக் கொடுத்து புதிய சொத்துக்குப் பத்திரப் பதிவு செய்வீர்கள். பழைய வழக்குகள் சாதகமாகும். கெளரவப் பதவி வந்து சேரும்.
குருபகவானின் பார்வை பலன்கள்
குரு உங்கள் ராசியை நேருக்கு நேர் பார்ப்பதால் குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். வங்கிக் கடனுதவியுடன் வீடு கட்டும் பணியை நிறைவு செய்வீர்கள். சொத்துப் பிரச்னை தீரும். மூத்த சகோதரி பண உதவிசெய்வார். இளைய சகோதரர் களுடனான மனத்தாங்கல் நீங்கும்.
குரு உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் தொட்டது துலங்கும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். ராசிக்கு 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் கௌரவப் பதவிகள் தேடி வரும். உங்களால் பயன் அடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவ முன் வருவர். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கமாவார்கள்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்...
14.4.22 முதல் 29.4.22 வரை, குருபகவான் தன் நட்சத்திரத்திரமான பூரட்டாதியில் 4-ம் பாதத்தில் செல்வதால், புதிய முயற்சிகள் பலிதமாகும். எதிர்பாராத பணவரவு உண்டு. பூர்வீகச் சொத்தில் இருந்த சிக்கல் தீரும். வழக்குகள் சாதகமாகும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் குறையும். அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் அடைவீர்கள்.
30.4.22 முதல் 24.2.23 வரை உங்களின் பூர்வ புண்ய, ரோகாதிபதியான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு செல்வதால், தள்ளிப்போன திருமணம் உடனே முடியும். மகனுக்கு வேலை கிடைக்கும். பணப் புழக்கம் அதிகரித்தாலும் செலவுகளும் துரத்தும். 8.8.22 முதல் 16.11.22 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்திலேயே குரு வக்ரத்தில் செல்வதால் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பூர்வீகச் சொத்தைச் சீர்செய்வீர்கள். 24.2.23 முதல் 22.4.23 வரை புதனின் ரேவதி நட்சத்திரத்தில் குரு செல்வதால் வேலை கிடைக்கும். கால் வலி, முதுகு வலி நீங்கும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள்.
வியாபாரத்தில்
இனி திட்டம் தீட்டிச் செயல் படுவீர்கள். பற்று-வரவு உயரும். பிரபலங்களின் உதவியால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பர்னிச்சர், உணவு, எண்ணெய் வகைகளால் லாபம் அடைவீர்கள். டிசம்பர், ஜனவரி மாதங்களில் புதிய ஏஜென்ஸி எடுப்பீர்கள். பழைய பாக்கிகள் வந்து சேரும். கூட்டுத் தொழிலில் பிரச்னைகள் ஓயும். பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள்.
உத்தியோகத்தில்
கடுமையாக உழைத்தாலும் அவப்பெயர்தானே வந்தது. இனி அந்த அவல நிலை மாறும். உயரதிகாரி உங்களுக்கு ஆதரவாகவே செயல்படுவார். நீங்கள் நினைத்தபடி பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் புதிய வாய்ப்பு களும் தேடிவரும். மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி சமூகத்தில் மதிப்பு - மரியாதையைப் பெற்றுத் தருவதுடன், உங்களின் நீண்டகால ஆசைகளை நிறைவேற்றுவதாகவும் அமையும்.
பரிகாரம்: அனுஷம் நட்சத்திர நாளில் சென்னை திருவலிதாயத்தில் (பாடி) அருளும் ஶ்ரீகுருபகவானை, நெய் விளக்கேற்றி வணங்கி வாருங்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அன்பர்களுக்கு உதவுங்கள்; நல்லது நடக்கும்.
மேலும் படிக்க 2022 குருப்பெயர்ச்சி கன்னி ராசிபலன்கள்