அம்பேத்கர் புகைப்படம் நீக்கம்; அரசுக்கல்லூரி முதல்வர் பணியிட மாற்றம்; ராமதாஸ் கண்டனம்! நடந்தது என்ன?

0

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள அய்யந்தோப்பு பகுதியில் இயங்கி வருகிறது 'கோவிந்தசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி'. இந்த கல்லூரி முதல்வர் அறையில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் புகைப்படம், கல்லூரி முதல்வராலேயே நீக்கப்பட்ட விவகாரம் அண்மையில் பெரும் பேசுபொருளுக்கு உள்ளானது. இதற்காக பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கண்டன குரல்கள் எழுந்தன. இந்நிலையில், கோவிந்தசாமி அரசு கல்லூரி முதல்வர் நாமக்கல் மாவட்டத்திற்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அம்பேத்கர்

இதன் பின்னணி குறித்து அந்த கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் சிலரிடம் பேசினோம். ``கடந்த 2017-ம் ஆண்டு, எஸ்.சி/எஸ்.டி ஆசிரியர்கள் நலச் சங்கத்தை சேர்ந்த பேராசிரியர்கள் அப்போதைய கல்லூரி முதல்வர் நடராஜன் என்பவரிடம் அனுமதிபெற்று சட்டமேதை அம்பேத்கர் புகைப்படத்தை முதல்வரின் இருக்கைக்கு பின்புறமாக வைத்துள்ளனர். கல்லூரி நிறுவனர் கோவிந்தசாமியின் புகைப்படமும், இதுவரை பணியாற்றிய கல்லூரி முதல்வர்களின் பெயர் பட்டியலும் இடப்புற சுவற்றில் மாட்டப்பட்டிருந்தது. 2017ல் இருந்து 4 கல்லூரி முதல்வர்கள் இங்கு பணிசெய்து சென்றுள்ளனர். இதுவரை இந்தப் புகைப்படங்களை மாற்றுவது குறித்த சிறிய யோசனையும் இருந்தது இல்லை. இந்நிலையில், தான் கடந்த வருடம் செப்டம்பர் மாத இறுதியில் புதிய கல்லூரி முதல்வராக பால்கிரேஸ் பதவி ஏற்றார்கள்.

இந்த கல்லூரியை பொருத்தவரை எந்த ஒரு முடிவெடுப்பது என்றாலும், ஆட்சிமன்ற குழுவை கூட்டிதான் எடுப்பார்கள். ஆனால், அப்படி எதையுமே செய்யாமல், கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதியன்று அம்பேத்கர் புகைப்படத்தை தன்னிச்சையாகவே நீக்கிவிட்டு, கோவிந்தசாமி ஐயாவின் புகைப்படத்தை அந்த இடத்தில் மாட்டி இருக்கிறார் கல்லூரி முதல்வர் பால்கிரேஸ்.

அதற்கு மறுதினம், ஆட்சிமன்ற குழுவைக் கூட்டி, "கல்லூரி நிறுவனர் கோவிந்தசாமி அவர்களின் புகைப்படத்தை தவிர, வேறு எந்த புகைப்படமும் முதல்வர் அறையில் இருக்கக்கூடாது" எனும் தீர்மானத்தை போட்டிருக்கிறார். அப்போது தான் அம்பேத்கர் புகைப்படம் நீக்கப்பட்ட விவகாரம் பேராசிரியர்களுக்கு தெரியவந்துள்ளது.

அச்சமயத்தில் ஒட்டப்பட்ட சில கண்டன சுவரொட்டிகள்.

ஆகவே, எஸ்.சி/எஸ்.டி ஆசிரியர் நல சங்கத்தினர் நேரில் சென்று முதல்வர் பால்கிரேஸ் அவர்களிடம் இதுகுறித்து கேட்டுள்ளனர். அதற்கு அவரோ, "எஸ்.சி/எஸ்.டி நலசங்கம் என அந்த புகைப்படத்தில் ஸ்டிக்கர் இருக்கிறது. அதனால்தான் நீக்கினேன்" என்று காரணம் கூறியுள்ளார். "அப்படியென்றால், நாங்கள் அந்தப் பெயரை மட்டும் நீக்கிவிடுகிறோம். புகைப்படத்தை அதே இடத்தில் மீண்டும் வையுங்கள்" என்று கோரிக்கை வைத்துள்ளனர் பேராசிரியர்கள். அதையும் அந்த அம்மையார் ஏற்க மறுத்துள்ளார். உடனே 16 தலைவர்களின் புகைப்படத்தை வைக்கலாம் என்ற அரசாணையை சுட்டிக்காட்டி, அம்பேத்கர் புகைப்படத்தை மீண்டும் வைக்கும்படி கூறியுள்ளனர். அதற்கு, "உங்கள் வீட்டில் வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள். இங்கே வைக்க முடியாது" என்று ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார் முதல்வர் அம்மையார்.

இந்நிலையில்தான், அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரடியாக கல்லூரிக்கு வந்து இந்த பிரச்னை குறித்து ஆய்வு செய்தார். "போட்டோவை அங்கிருந்து நீக்க வேண்டிய அவசியம் என்ன? யார் சொல்லி இதை செய்தீர்கள்? அந்த போட்டோ எங்கே.. எடுத்துக் கொண்டு வாருங்கள்" என்று சொன்னார். அப்போது, அந்த போட்டோ தெரியாமல் கீழே விழுவதைப் போல போட்டு கண்ணாடி உடைந்துவிட்டது. "சரி, வேறொரு நல்ல போட்டோவை எடுத்து வந்து இருந்த இடத்திலேயே வையுங்கள். இல்லையெனில், 16 தலைவர்களின் போட்டோக்களை தயார் செய்யுங்கள் நானே நேரில் வந்து வைக்கிறேன்" என்று கூறிய அமைச்சர், ரோசனை காவல் ஆய்வாளரிடம்... "என்னுடைய வாய்மொழி உத்தரவையே புகாராக ஏற்றுக் கொண்டு விசாரணை நடத்தி, போட்டோ நீக்கப்பட்ட காரணம் குறித்து கூறுங்கள்" என்று கூறிவிட்டு சென்றார்.

அமைச்சர். செஞ்சி மஸ்தான்

இந்நிலையில் தான், வி.சி.க-வின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சேரன், அம்பேத்கர் புகைப்படத்தை எடுத்துவந்து உள்ளே வைப்பதற்கு அனுமதி கேட்டார். "என்னிடம் அலுவலக ஊழியர் இல்லை. அதனால் போட்டோ வைக்க முடியாது" என்று மறுத்ததோடு, அங்கிருந்து வெளியே சென்றுவிட்டார். மீண்டும் வந்து, "ஏற்கனவே இருந்த இடத்தில் வைக்க முடியாது. வேறொரு இடத்தில் வேண்டுமானால் நானே வைக்கிறேன்" என்றார். அப்போதுதான் ஒரு பொது தலைவரை சாதிய வன்மத்தோடு இவர்கள் பார்ப்பது தெளிவாக தெரியவந்தது. உடனே மாவட்டச் செயலாளர் வெளியே வந்து, அதற்காக கண்டன ஆர்ப்பாட்டம் செய்தார். அப்போது அங்கு வந்த தாசில்தார், சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

மா.செ கொண்டு வந்த புகைப்படம், கல்லூரி முதல்வர் அறையின் ஒரு பகுதியில் வைக்கப்பட்டது. இதற்கு மறுதினமே பா.ம.க-வினர் வந்து, "கோவிந்தசாமி போட்டோவை இப்போது மாற்றி வைத்துள்ள இடத்திலேயே தான் நிரந்தரமாக வைக்க வேண்டும். மீண்டும் மாற்றி வைக்கக் கூடாது" என்று கல்லூரி முதல்வரிடம் மனு கொடுத்து சென்றனர். இதனால் ஒரு பொது தலைவரின் புகைப்படத்தை இருந்த இடத்தில் வைக்கச் சொல்வதில் மேலும் சிக்கலாகிப்போனது. ஆகவே, இந்த விவகாரம் ஒருபோதும் சாதிய மோதலாக நடந்துவிடக்கூடாது, சுமூகமான முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். ஆகவேதான், அம்பேத்கர் புகைப்படம் சாதிய வன்மத்தோடு நீக்கப்பட்டது குறித்தும், கல்லூரி முதல்வர் பால்கிரேஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் எஸ்.சி/எஸ்.டி ஆணையம், உயர்கல்வித்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு புகார் அனுப்பினோம்.

பணியிட மாற்றம் ஆணை

இதற்கிடையில், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் நேரில் வந்து விசாரணை நடத்தியிருந்தார்கள். மேலும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த கல்லூரி முதல்வர் பால்கிரேஸ், ராமநாதபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் முதல்வராக இருந்தபோது இதே மாதிரியான ஒரு செயலில் ஈடுபட்டுள்ளார். அதற்கான கண்டன போராட்டங்கள் வலுத்ததை தொடர்ந்துதான் இந்த கல்லூரிக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். இங்கு வந்த பின்பும் அந்த சாதியை வன்மத்தை கைவிடாமல் செயல்பட்டிருக்கிறார். இந்நிலையில் தான், அவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 'நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு' பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்" என்றனர் விரிவாக.

இந்த விவகாரம் குறித்து பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள பால்கிரேஸிடம் பேசினோம். "இந்த கல்லூரி துவங்கி இத்தனை ஆண்டு காலம் ஆகியும் மத்திய அரசின் 'தேசிய தர மதிப்பீட்டு குழு' இன்னும் வரவேயில்லை. இதுவரை இந்த கல்லூரியில், எந்த விதிமுறைகளையும் பின்பற்றப்படாமல் அடாவடித்தனம் செய்துவந்தார்கள். எனவே, அந்த கல்லூரியை மேம்படுத்த வேண்டுமென நல்ல மாற்றங்களை கொண்டு வந்தேன். இதை பிடிக்காத சுமார் 15 ஆசிரியர்கள், சாதி என்பதை மையப்படுத்தி சொன்னால் இவர்களை பணியிடமாற்றம் செய்து விடுவார்கள் என நினைத்து செயல்பட்டு வந்தார்கள். இந்நிலையில், கல்லூரி கல்வி இயக்குநர் எஸ்.சி/எஸ்.டி சமூகத்தினராக இருப்பதாலும், அந்த சமூகத்தினர் அவரை கவனித்தாலும் பழிவாங்கும் நோக்குடன் இவ்வாறு மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்கிறார்.

பால்கிரேஸ்

எனக்கு உண்மை ஜெயிக்க வேண்டும், நீதி வெல்ல வேண்டும். 'எஸ்.சி/எஸ்.டி நலசங்கம்' எனும் வார்த்தை அம்பேத்கரின் புகைப்படத்தில் இருந்தது. இப்பெயரை காரணம் காட்டி மற்றொரு தரப்பிலிருந்து தங்களுடைய புகைப்படத்தை வைக்க வேண்டும் என சொல்லி அழுத்தம் வந்தது. அதனால்தான் எந்த பிரச்னையும் வரக்கூடாது என்று இந்தப் புகைப்படத்தை நீக்கினேன். வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது" என்றார்.

மருத்துவர் ராமதாஸ்

இந்நிலையில், "திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கல்லூரியில் தவறுகளை திருத்த முயன்ற முதல்வருக்கு பரிசு இட மாற்றமா? அதை, உடனே திரும்பப் பெறுக!" எனும் தலைப்பில் தனது விரிவான கண்டனத்தை தெரிவித்துள்ளார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ்.


மேலும் படிக்க அம்பேத்கர் புகைப்படம் நீக்கம்; அரசுக்கல்லூரி முதல்வர் பணியிட மாற்றம்; ராமதாஸ் கண்டனம்! நடந்தது என்ன?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top