கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகையை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கின் பின்னணியில் நடிகர் திலீப் முக்கியப் பங்கு வகித்ததாக அவர் கைது செய்யபட்டார். இப்போது ஜாமீனில் வெளியே இருக்கும் நடிகர் திலீப் மீது போலீஸ் அதிகாரிகளை கொலை செய்ய முயன்ற வழக்கு குறித்த விசாரணை உள்ளிட்டவை நடைபெற்றுவருகின்றன. வரும் 15-ம் தேதிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என கேரள ஐகோர்ட் உத்தரவிட்டிருந்து. இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி அரசு தரப்பு வழக்கறிஞர் சார்பில் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், `விசாரணையை நடத்தி முடிக்க இன்னும் மூன்று மாதங்கள் கால அவகாசம் வேண்டும். நடிகர் திலீப் உள்ளிட்டவர்களின் மொபைல் போனை ஆய்வு செய்தபோது, நடிகை காவ்யா மாதவனுக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பதது தெரியவந்திருக்கிறது. எனவே டிஜிட்டல் அதாரங்களின் அடிப்படையில் நடிகர் திலீபின் மனைவி காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்தவேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நடிகை காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருப்பதாக ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வரும் 11-ம் தேதி திங்கள்கிழமை கொச்சி குற்றப்பிரிவு போலீஸில் நேரில் ஆஜராக வேண்டும் என நடிகை காவ்யா மாதவனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு காவ்யா மாதவனை விசாரிக்க முயன்றபோது அவர் சென்னையில் படப்பிடிப்பில் இருப்பதாகக் கூறியதாக குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், காவ்யா மாதவனை விசாரணைக்கு ஆஜராகும்படி குற்றப்பிரிவு போலீஸார் நோட்டீஸ் அனுப்பியிருப்பது நடிகை பாலியல் தொல்லை வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க நடிகை பாலியல் வழக்கு: திலீபின் மனைவி காவ்யா மாதவனுக்கும் பங்கு? - விசாரணைக்கு ஆஜராக உத்தரவு!