இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்தார். இந்தியா இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், பாதுகாப்பு துறையில் இந்தியாவுடனான ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் ஏற்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் போரிஸ் ஜான்சனுக்கு பிரமாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது. அதற்கு அவர் நன்றி தெரிவித்து பேசுகையில், " எனக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு நன்றி. நான் வந்தவுடன் சச்சின் டெண்டுல்கரைப் போலவும், எல்லா இடங்களிலும் விளம்பரப் பலகைகள்களை பார்த்தபோது அமிதாப் பச்சனைப் போலவும் உணர்ந்தேன். மோடி என்னுடைய சிறந்த நண்பர்” என்றார்.

இங்கிலாந்து பிரதமர் நேற்று காலை ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து பேசிய அவர், ``குஜராத் மக்கள் எங்களுக்கு அருமையான வரவேற்பு அளித்தனர். இதுபோன்ற மகிழ்ச்சியான வரவேற்பை நான் பார்த்ததில்லை. உலகில் வேறு எங்கும் எனக்கு இது மாதிரியான வரவேற்பு கிடைத்திருக்காது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்தை முதன்முறையாகப் பார்ப்பது ஆச்சரியமாக இருந்தது" என்று கூறினார்.
மேலும் படிக்க ``சச்சின், அமிதாப் பச்சனைப் போல் உணர்ந்தேன்" - இந்திய பயணம் குறித்து போரிஸ் ஜான்சன்