DC vs RCB: இந்தியாவுக்கான புதிய ஃபினிஷரா தினேஷ் கார்த்திக்? மூன்றாவது இடத்தில் பெங்களூர்!

0

எதுவும் எப்போதும் நிரந்தரமில்லை என்பதையே இந்த ஐபிஎல் உணர்த்தி வருகிறது. சாம்பியன் அணிகளான சென்னையும், மும்பையும் அதளபாதாளத்தில் இருக்கின்றன. புதிய அணிகளான குஜராத்தும், லக்னோவும் டாப்பில் இருக்கின்றன. சென்னை நிலைமையே தேவலாம் என்கிற நிலையில் இருக்கிறது மும்பை. விளையாடிய ஆறு போட்டிகளிலும் தோல்வி. இதற்கு முன்னர் இப்படித் தொடர்ச்சியாக ஆறு போட்டிகள் தோற்ற அணிகள், 2013ல் டெல்லி டேர்டெவில்ஸும், 2019ல் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரும்தான். அந்த இரண்டு அணிகளுக்கும் அந்தந்த சீசனில் கடைசி இடம்தான் கிடைத்தது. மும்பைக்கு ஒருவேளை வேறு ஸ்கிரிப்ட் எழுதப்பட்டிருக்கலாம். எவர் கண்டது?! சரி, நேற்று நடந்த இன்னொரு போட்டியான டெல்லி வெர்சஸ் பெங்களூர் ஆட்டத்தைப் பார்க்கலாம்.

DC vs RCB

மிட்சல் மார்ஷுக்குத் தொப்பியை வழங்கினார் டெல்லி கேப்டன் பண்ட். அப்பாடா, இனி பவல் தொல்லை இல்லை என பெருமூச்சு விட்டனர் டெல்லி ரசிகர்கள். ஆனால், அதில் ஒரு ட்விஸ்ட் இருப்பது பின்னர்தான் தெரிந்தது. டாஸ் வென்ற ரிஷப் பண்ட், குல வழக்கப்படி சேஸிங் தேர்வு செய்தார். சர்பராஸ் கானுக்குப் பதிலாக மிட்ச் மார்ஷை எடுத்திருக்கிறார்கள். அப்படியெனில் இந்தப் போட்டியிலும் பவல் இருக்கிறாரா என்கிற சந்தேகத்துடன் கூடிய கடுப்பு இயல்பாகவே வெளியே வர ஆரம்பித்தது. காரணம் இல்லாமல் இல்லை. இந்த சீசனில் அவர் அடித்த ரன்கள் 0(2) வெர்சஸ் மும்பை, 20 (12) வெர்சஸ் குஜராத், 3(10) வெர்சஸ் லக்னோ, 8 (6) வெர்சஸ் கொல்கத்தா.

டெல்லி பிளேயிங் XI: பிருத்வி ஷா, டேவிட் வார்னர், மிட்சல் மார்ஷ், பண்ட், லலித் யாதவ், பவல், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முஷ்டாபிசூர் ரஹ்மான், கலீல் அஹமது.
பெங்களூரு பிளேயிங் XI: டு ப்ளெஸ்ஸி, கோலி, அனுஜ் ராவத், க்ளென் மேக்ஸ்வெல், சபாஷ் அஹமது, சுயாஷ் பிரபுதேசாய், தினேஷ் கார்த்திக், ஹசரங்கா, ஹர்ஷல் படேல், சிராஜ், ஹேசல்வுட்.
DC vs RCB

டு ப்ளெஸ்ஸியும், ராவத்தும் ஓப்பனிங் இறங்கினார்கள். ராவத் தான் சந்தித்த முதல் பந்திலேயே எல்பிடபுள்யூ முறையில் வெளியேறினார். லார்டு ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தை, லெக் சைட் அடிக்க முயல, அது மிஸ்ஸாகி பேடில் பட்டதால் பாவமாய் வெளியேறினார். அடுத்து கலீல் அஹமது வீசிய ஓவரில் டு ப்ளெஸ்ஸியும் அவுட். அடுத்து வந்த மேக்ஸ்வெல், கோலியுடன் இணைந்து ஓவருக்கு ஒரு பவுண்டரி என அடித்து, பவர்பிளேவில் மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார். பவர்பிளே இறுதியில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்திருந்தது பெங்களூர்.

பாயின்ட் திசையில் தட்டிவிட்டு சிங்கிளுக்கு ஆயுத்தமான கோலியை, தன் அபாரமான ஃபீல்டிங்கால் ரன் அவுட் செய்தார் லலித் யாதவ். கோலி கொஞ்சம் டைவ் அடித்திருந்தால்கூட இந்த விக்கெட்டைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால், கோலி அதற்கு முயலவேயில்லை.

ஒன்பதாவது ஓவரை வீசினார் குல்தீப். மிட் விக்கெட் திசையில் ஒரு பவுண்டரியுடன் ஆரபித்து வைத்தார் மேக்ஸ்வெல். அடுத்ததாக டீப் மிட் விக்கெட்டில் ஒரு சிக்ஸ். 'அவந்தான் ஷார்ட் பால் போட்டா அடிக்கறான்ல, அப்புறம் எதுக்கு அதையே போட்டுக்கிட்டு இருக்க' என்பதாக ரசிகர்கள் கடுப்பாகினர். அடுத்து எக்ஸ்ட்ரா கவர் பக்கம் ஒரு பவுண்டரி. அடுத்து இன்னொரு சிக்ஸ் என அந்த ஓவரில் மட்டும் 23 ரன்கள். 5.87ல் இருந்த ரன்ரேட் ஒரே ஒவரில் 7.77 ஆக உயர்ந்துவிட்டது.

கோலி | DC vs RCB

மேக்ஸி எதிரில் இருக்கும்போது ஸ்விட்ச் ஹிட், ரிவர்ஸ் புல் எல்லாம் அடிக்க யாருக்குத்தான் ஆசை வராது. சுயாஷும் அவ்வண்ணமே அக்சர் போட்ட பந்தை அடிக்க முயன்றார். ஆனால், அதை முன்னரே உத்தேசித்து லெந்த்தை மாற்றினார் அக்சர். சுயாஷ் அடித்த ரிவர்ஸ் புல் குல்தீப்பின் கைகளில் சிக்கும் வரைதான் சென்றது. அடுத்த ஷர்துல் ஓவரில் பவுண்டரி அடித்து 30 பந்துகளில் அரைசதம் கடந்தார் மேக்ஸி. தன் முதல் ஓவரில் 23 ரன்கள் விட்ட குல்தீப் மீண்டும் பௌலிங் போட வந்தார். லாங் ஆன் பக்கம் மீண்டும் சிக்ஸ் அடிக்க முயல, லலித் யாதவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் மேக்ஸி. 5 விக்கெட் போய்விட்டதென்பதால் அடுத்த சில பந்துகள் தினேஷ் கார்த்திக்கும், சபாஷும் சிங்கிள் மட்டுமே ஆடினார்கள்.

மேக்ஸ்வெல் | DC vs RCB

கலீல் அஹமது ஓவர்களில் மட்டும் பிளான் செய்து சிக்ஸர் அடித்துக்கொண்டிருந்த தினேஷ் கார்த்திக்கிற்கு லட்டாய் வந்து அமைந்தது ரஹ்மானின் ஓவர். கீப்பருக்கும், ஷார்ட் தேர்ட் மேனுக்கும் இடையே முதல் பவுண்டரி; அடுத்த பந்தை கட்டராக வீசினார் ரஹ்மான். ரிவர்ஸ் புல் ஷாட் மூலம் அதையும் பவுண்டரியாக மாற்றினார். அடுத்து ஒரு அட்டகாசமான கவர் டிரைவ் என ஹேட்ரிக் பவுண்டரிகள். நான்காவது பந்தை லாங் ஆஃப் பக்கம் சிக்ஸராக்கினார். மீண்டும் ஒரு இமாலய சிக்ஸர். கடைசி பந்தில் யார்க்கர் போட நினைத்து அது மிஸ்ஸாகி ஃபுல் டாஸாக மாற, அதையும் மிட் ஆஃபில் பவுண்டரிக்கு அனுப்பினார். ஒரே ஓவரில் 28 ரன்கள்.

இந்தியாவுக்கான அடுத்த ஃபினிஷர் யார் என்னும் போட்டியில் 36 வயதான தினேஷ் கார்த்திக் மின்னல் வேகத்தில் மேலே வந்து கொண்டிருந்தார். 26 பந்துகளில் ஐம்பது ரன்களைக் கடந்துவிட்டார். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்திருந்தது பெங்களூர்.
DC vs RCB

வார்னரும், ஷாவும் ஓப்பனிங் இறங்கினார்கள். முதல் ஓவரை வீசினார் மேக்ஸி. வார்னர் தான் சந்தித்த முதல் பந்தையே ஸ்வீப் அடித்து சிக்ஸராக மாற்றினார். அடுத்து சிராஜ் ஓவரில் லாஃப்ட் ஷாட் மூலம் லாங் ஆனில் சிக்ஸர் அடித்தார் ஷா. ஹேசல்வுட்டின் முதல் பந்தை சிக்ஸராக்கினார் வார்னர். என்னடா இது யார் பௌலிங் போட்டாலும் சிக்ஸரா போகுது என நினைத்து நான்காவது ஓவரை வீச வந்தார் சபாஷ் அஹமது. ஷார்ட் ஃபைன் லெக்கில் ஒரு பவுண்டரி; லாங் ஆனில் ஒரு சிக்ஸ் என சபாஷ் ஓவரில் 15 ரன்கள். ரன் ரேட் 11-ஐத் தாண்டி போய்க்கொண்டு இருக்க, அதற்கு கடிவாளம் போடு நிப்பாட்டினார் சிராஜ். ராவத்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஷா. ஐபிஎல் வரலாற்றில் தன் 52வது அரை சதத்தை பூர்த்தி செய்தார் வார்னர். ஹர்ஷல் படேல் ஓவரிலும் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி. வார்னர் அடித்துக்கொண்டிருந்த வேகத்துக்கு இன்று ஒற்றை ஆளாய் வெற்றியை எட்டிவிடுவார் என்றே தோன்றியது.

ஹசரங்கா வீசிய பந்தை வார்னர் ஸ்விச் ஹிட் அடிக்க முயன்று, அது மிஸ்ஸாகி எல்பிடபிள்யூ அப்பீல் கேட்டது பெங்களூர். அம்பயர் அவுட் சொல்ல மறுக்க, ரிவ்யூ எடுத்தது பெங்களூரு. இந்த வரியை எழுதும் முன்னர் மீண்டும் ஹாட்ஸ்டாரில் சிலமுறை அந்த விக்கெட்டைப் பார்த்தேன். அது ஸ்டம்பில் படும் என நம்பவே முடியவில்லை. ஆனாலும், டெக்னாலஜி படும் என்றது, வார்னரும் அவுட் என அறிவிக்கப்பட்டார்.

ரிஷப் பண்ட் அடித்தாலும், மிட்சல் மார்ஷ் சிங்கிள்ஸ் மட்டுமே ஆடிக்கொண்டிருந்தார். ஹசரங்கா விசிய பந்தை ரிஷப் பண்ட், ஸ்கேல் வைத்து கோடு போடுவது போல நேராக ஸ்டிரைட் டிரைவ் அடிக்க, அதை ஹசரங்கா தொட்டுவிட, அது மார்ஷின் ஸ்டம்பை பதம் பார்த்தது. ரன் அவுட் முறையில் வெளியேறினார் மார்ஷ். ஆட்டத்தின் ஆரம்பத்தில் பவல் பற்றி எழுதியிருந்தேன் அல்லவா... அதற்கு சற்றும் குறையாத வண்ணம், இந்தப் போட்டியில் முதல் பந்திலேயே கோல்டன் டக்காகி வெளியேறினார் பவல். அதே ஓவரில் லலித் யாதவும் அவுட். பத்து பந்துகளில் மூன்று விக்கெட்டுகள்.

வார்னர்

ஷர்துல் தாக்கூரும், ரிஷபும் இணைந்து ஹசரங்கா ஓவரில் 19 ரன்கள் அடித்தனர். அடுத்த சிராஜ் ஓவரில் ரிஷப் கவர் பக்கம் அடிக்க, அதை பறந்தே ஒற்றைக் கையில் பிடித்தார் கோலி. இன்னும் சொல்லப்போனால், அவர் கையில் பந்து அகப்பட்டுவிட்டது. 'எகிறி குதித்தேன் வானம் இடித்தது' என பாய்ஸ் பட பாடலில் ஆடுவது போல குதித்தே பண்ட்டை வெளியேற்றினார் கோலி. அதற்குப் பின்னர் ஆட்டம் மொத்தமாக பெங்களூரு வசம் சென்றுவிட்டது. 20 ஓவர் முடிவில் டெல்லியால் 173 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பெங்களூரு.

கோலி | DC vs RCB

இந்த சீசனில் அதிரடி ஃபினிஷராய் அசத்திக்கொண்டிருக்கும் தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

"எனக்கு மிகப்பெரிய லட்சியங்கள் உண்டு. இந்திய அணியில் விளையாட எல்லா விதத்திலும் என்னை தயார்ப்படுத்தி வருகிறேன்" என்றார் டிகே. 'ஜெர்ஸி' படத்து நானி போல, 36 வயதில் தினேஷ் கார்த்திக்கிற்கு இந்திய அணியின் ஃபினிஷராகும் வாய்ப்புக் கிட்டும் என நம்புவோம்.

மேலும் படிக்க DC vs RCB: இந்தியாவுக்கான புதிய ஃபினிஷரா தினேஷ் கார்த்திக்? மூன்றாவது இடத்தில் பெங்களூர்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top