PBKS vs SRH: பழைய ரவுடியாக ஃபார்முக்கு வந்த சன்ரைசர்ஸும்; வழக்கமான ஆட்டத்தைத் தொடங்கிய பஞ்சாபும்!

0
சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. 'பழைய ஃபார்முக்குத் திரும்பிய அணிகள்' என இந்தப் போட்டியை ஒரே வாக்கியத்தில் வரையறுத்துவிடலாம். சன்ரைசர்ஸ் அணி இரண்டு மூன்று சீசன்களுக்கு முன்னால் எப்படி ஆடியதோ அப்படி ஆடத் தொடங்கி தொடர்ச்சியாக வெல்ல ஆரம்பித்திருக்கிறது. இந்தப் போட்டியில் பஞ்சாபையும் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது. கையிலிருக்கும் போட்டிகளைக் கோட்டைவிடும் வகையில் பஞ்சாபுமே பழைய ஃபார்முக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது எனச் சொல்லலாம்.

இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனான வில்லியம்சனே டாஸை வென்றிருந்தார். அவரின் திட்டப்படியே முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார். மயங்க் அகர்வால் லேசான காயம் காரணமாக ஓய்வில் இருக்க பஞ்சாப் அணியை தவான் வழிநடத்தினார். மயங்க் அகர்வாலுக்கு பதில் ப்ரப்சிம்ரன்சிங் ஓப்பனராக இறங்கியிருந்தார்.

புவனேஷ்வர் குமார்

சன்ரைசர்ஸ் அணியை பொறுத்தவரைக்கும் பந்துவீச்சில் மெது மெதுவாக பழைய ஃபார்முக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆடியிருக்கும் 6 போட்டிகளிலுமே சன்ரைசர்ஸ் அணி முதலில்தான் பந்துவீசியிருக்கிறது. இந்த 6 போட்டிகளில் முதல் போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக மட்டுமே சன்ரைசர்ஸின் பௌலர்கள் 200க்கும் அதிகமான ரன்களை வழங்கியிருந்தனர். அடுத்து ஆடிய 5 போட்டிகளிலும் தொடர்ச்சியாக எதிரணியை 175 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருக்கின்றனர். இந்த 5 போட்டிகளில் 4 போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணி வெற்றிகரமாக ஸ்கோரை சேஸும் செய்து முடித்திருக்கிறது.

இந்த சீசனில் வேறெந்த அணியுமே இவ்வளவு சீராகத் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசியிருக்கவே இல்லை. சன்ரைசர்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சு பஞ்சாபிற்கு எதிரான இந்தப் போட்டியிலும் தொடர்ந்தது.

பவர்ப்ளேக்குள்ளாகவே பஞ்சாபின் இரண்டு ஓப்பனர்களையும் சன்ரைசர்ஸ் வீழ்த்தியிருந்தது. மூன்றாவது ஓவரிலேயே கேப்டன் தவாணை பத்தே ரன்களில் புவனேஷ்வர் குமார் வீழ்த்தினார். இந்த விக்கெட் மூலம் ஐ.பி.எல் வரலாற்றிலேயே பவர்ப்ளேயில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் எனும் சாதனையையும் படைத்தார். 5வது ஓவரில் நடராஜன் அறிமுகமானார். முதல் ஓவரிலேயே ப்ரப்சிம்ரனின் விக்கெட்டை வீழ்த்தினார். தொடர்ச்சியாக நடராஜன் முதல் பந்திலோ அல்லது முதல் ஓவரிலோ விக்கெட்டை வீழ்த்திக்கொண்டே இருக்கிறார். ஆரஞ்சு தொப்பிக்கான ரேஸிலும் சீறிப்பாய்ந்து கொண்டிருக்கிறார்.

நம்பர் 3 இல் வந்திருந்த பேர்ஸ்ட்டோ பவர் பவர்ப்ளே முடிந்த அடுத்த ஓவரிலேயே ஸ்பின்னரான சுஜித்தின் பந்துவீச்சில், ஸ்பின்னர்களை எதிர்கொள்ள இங்கிலாந்து பேட்டர்கள் நம்பும் ஒரே ஆயுதமான ஸ்வீப்பை ஆட முயன்று lbw ஆகினார்.

லிவிங்ஸ்டன், ஷாரூக்கான்

டாப் ஆர்டர் மொத்தமும் சீக்கிரமே வீழ்ந்த போதும் லிவிங்ஸ்டன் ஒரு முனையில் மனம் தளராமல் விட்டு வெளுத்தெடுத்தார். சுஜித், உம்ரான் மாலிக், நடராஜன் என அத்தனை பேரின் ஓவரிலும் பந்துகள் சிதறின. வெறும் சிக்ஸரெல்லாம் இல்லை. விதிமுறைகள் அனுமதித்தால் 12 ரன்களே கொடுக்கலாம் எனும் அளவுக்கு பிரமாண்ட சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். சூழலையெல்லாம் பொருட்படுத்தாமல் மரண அடி அடித்தார். கூடவே, தமிழக வீரரான ஷாரூக்கானும் இணைந்து கொண்டு ஒரு காட்டு காட்டினார். நடராஜனின் ஓவரில் ஹெல்மட்டில் வலுவாக ஒரு அடி வாங்கிவிட்டு அடுத்த பந்தையே மாஸாக சிக்சராக்கியிருந்தார்.

லிவிங்ஸ்டனும் ஷாரூக்கானும் ஆடிய ஆட்டமே பஞ்சாப் அணியை ஓரளவுக்கு காப்பாற்றது. லிவிங்ஸ்டன் அரைசதத்தை கடந்திருந்தார்.

கடைசிக்கட்ட ஓவர்களில் இவர்களுமே விக்கெட்டை விட்டனர். புவனேஷ்வர் குமார் வீசிய 17 வது ஓவரில் ஷாரூக்கானும் 19 வது ஓவரில் லிவிங்ஸ்டனும் வில்லியன்சனிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆகினர்.

கடைசி ஓவரில் உம்ரான் மாலிக் பஞ்சாபை மேலும் நொந்து போக வைத்தார். உம்ரான் மாலிக் வீசிய 20 வது ஓவரில் ஒரு ரன்னை கூட கொடுக்கவில்லை. பதிலுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ரன் அவுட் மூலம் கூடுதலாக ஒரு விக்கெட்டும் கிடைத்திருந்தது. ஆக, அந்தக் கடைசி ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டிருந்தது. ஷார்ட் பால், யார்க்கர் என 150 கி.மீ வேகத்தில் மாற்றி மாற்றி வீசி அசரடித்தார்.

வருங்காலத்தை மனதில் வைத்து சொதப்பிய போதும் உம்ரான் மாலிக்கிற்கு தொடர் வாய்ப்புகளை வழங்கியதற்கான பலனை சன்ரைசர்ஸ் அறுவடை செய்யத் தொடங்கியிருக்கிறது. இதுநாள் வரை வேகமாக பந்துவீசியதற்கான ஆறுதல் பரிசை மட்டுமே வென்று கொண்டிருந்த உம்ரான் மாலிக்கிற்கு இந்த ஓவர் ஆட்டநாயகன் விருதை வென்று கொடுத்தது.
Umran Malik

முதலில் பந்துவீச வேண்டும். எதிரணியை சராசரியான ஒரு ஸ்கோருக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற சன்ரைசர்ஸின் ஃபார்முலா இந்த முறையும் ஒர்க் அவுட் ஆனது. சன்ரைசர்ஸுக்கு 152 ரன்கள்தான் டார்கெட்.

18.5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சன்ரைசர்ஸ் இந்த டார்கெட்டை வெற்றிகரமாக எட்டிவிட்டது. உருட்டி உருட்டி பார்ட்னர்ஷிப்பை பில்ட் செய்து நின்றாலே வென்றுவிடலாம் எனும் வில்லியம்சனின் கணக்கு இந்தப் போட்டியில் எடுபடவில்லை. 9 பந்துகளில் 3 ரன்களை மட்டுமே எடுத்து ரபாடாவின் பந்தில் கேட்ச் ஆகியிருந்தார். அபிஷேக் சர்மா இன்னொரு முனையில் திணறிக்கொண்டிருந்தாலும் நம்பர் 3 இல் வந்த ராகுல் திரிபாதி வழக்கமான ஸ்டைலில் சீராக ஸ்கோர் செய்தார். ஆனால், கடந்த போட்டியை போல பெரிய இன்னிங்ஸை அவரால் ஆட முடியவில்லை. 22 பந்துகளில் 34 ரன்களை எடுத்து ராகுல் சஹாரின் பந்தில் லாங் ஆஃபில் கேட்ச் ஆகியிருந்தார். ராகுல் சஹார் லைனை மாற்றி வீசிய லெக் ப்ரேக்குகள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. ஒயிடு ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே நன்றாக திருப்பிவிட்டு, ஒரு பந்தை டைட்டாக மிடில் & ஆஃப் ஸ்டம்ப் லைனில் திருப்பியிருப்பார். ஷாட் ஆட இடமே இல்லாத அந்த பந்திற்கு பெரிய ஷாட் ஆட முயன்று திரிபாதி கேட்ச் ஆகினார்.

Markram & Pooran

ரொம்ப நேரமாக சரியாக கனெக்ட் ஆகாமல் திணறிக்கொண்டிருந்த அபிஷேக்கும் ராகுல் சஹாரின் பந்தில் லாங் ஆனில் ஷாரூக்கானிடமே கேட்ச் ஆகியிருந்தார். அபிஷேக் சர்மா அவுட் ஆன போது அணியின் ஸ்கோர் 77-3. வெற்றிக்கு இன்னும் 75 ரன்கள் தேவை. மேற்கொண்டு ஒன்றிரண்டு விக்கெட் விழுந்தால் பஞ்சாப் பக்கமாக ஆட்டம் திரும்பிவிடும் சூழல் இருந்தது. ஆனால், பூரனும் மார்க்ரமும் அப்படி ஒரு சம்பவம் நிகழாமல் தடுத்தனர். இருவருமே நிதானமாக நின்று ஆடி மேற்கொண்டு விக்கெட்டுகளையே விடாமல் 18.5 ஓவர்களிலேயே சன்ரைசர்ஸை வெல்ல வைத்தனர். 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் வென்றது.

இந்த சீசனில் அந்த அணி தொடர்ச்சியாக பெறும் நான்காவது வெற்றி இது. வலுவான பந்துவீச்சு + சீரான பேட்டிங் என்கிற பழைய சக்சஸ் ஃபார்முலாவிற்கு சன்ரைசர்ஸ் திரும்பியிருக்கிறது.

பஞ்சாபை பொறுத்தவரைக்கும் ஒரு திட்டமிடலே இல்லாத பேட்டிங் பெர்ஃபார்மென்ஸையே தொடர்ந்து கொடுத்து வருகிறது. பேர்ஸ்ட்டோ, ஜித்தேஷ் சர்மா, லிவிங்ஸ்டன், ஷாரூக்கான் என அதிரடியான மிடில் ஆர்டரை கொண்டிருந்தும் பெரும்பாலான போட்டிகளில் ஞாயமாக எடுக்க வேண்டிய ஸ்கோரை விட குறைவாகவே எடுத்து வருகிறது. எல்லாருமே ஹார்ட் ஹிட்டர்கள் என்பதால் ஒவ்வொரு பந்தையுமே சிக்சர்களாக அடிக்கவே விரும்புகின்றனர். டி20 க்கு இதுதான் தேவை. ஆனால், அது சூழலைச் சார்ந்ததாக இருக்க வேண்டும். வரிசையாக விக்கெட் விழும்போதும் நின்று ஆடாமல் வந்த வேகத்தில் இரண்டு சிக்சர்களை அடித்துவிட்டு அவுட் ஆவது அணிக்கு உதவவே செய்யாது. ஆனால், அதைத்தான் பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் செய்து கொண்டிருக்கின்றனர். அணியாக கூட்டாக இல்லாமல் தனித்தனி வீரர்களாக ஆடிக்கொண்டிருக்கின்றனர்.

Punjab

பஞ்சாப் ஆடியிருக்கும் 6 போட்டிகளில் நான்கில் பேர்ஸ்ட்டோ, லிவிங்ஸ்டன், ஜித்தேஷ், ஷாரூக்கான் என எந்த பேட்ஸ்மேனுமே கடைசி ஓவர் வரை நின்று ஆடியிருக்கவில்லை. பவர்ப்ளேயில் 10 க்கும் மேல் இருக்கும் பஞ்சாபின் ரன்ரேட் 7-15 ஓவர்களில் 9க்கு நெருக்கமாகவும் 16-20 டெத் ஓவர்களில் 10க்கு நெருக்கமாகவும் இருக்கிறது. இந்த சீசனில் டெத் ஓவர்களில் குறைவான ரன்களை எடுத்திருக்கும் அணி பஞ்சாப்தான். ஏனெனில், அந்த அணியின் முக்கியமான பேட்ஸ்மேன்கள் யாருமே கடைசி வரை நின்று ஆடுவதே இல்லை. இந்த அணுகுமுறை மாற வேண்டும்.

தரமான வீரர்கள் இருந்தால் மட்டும் போதாது. அவர்கள் சரியான முறையில் பெர்ஃபார்மும் செய்ய வேண்டும். சீசனிலேயே அதிக சிக்ஸர்களை அடித்த அணி எனும் பெருமை மட்டும் போட்டியை வென்று கொடுக்காது.

மேலும் படிக்க PBKS vs SRH: பழைய ரவுடியாக ஃபார்முக்கு வந்த சன்ரைசர்ஸும்; வழக்கமான ஆட்டத்தைத் தொடங்கிய பஞ்சாபும்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top