குஜராத்தில் வேகமெடுக்கும் ஆம் ஆத்மி... 2022 தேர்தலில் பாஜக-வுக்கு டஃப் கொடுப்பாரா கெஜ்ரிவால்?

0

குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களை இப்போதே வகுத்துச் செயல்படத் தொடங்கிவிட்டன. இந்த முறை பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளோடு ஆம் ஆத்மியும் குஜராத் தேர்தலுக்குத் தயாராகிவருகிறது. பஞ்சாப்பில் கிடைத்த அமோக வெற்றி தந்த உத்வேகத்தில் குஜராத்தில் களமிறங்கியிருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். இந்த நிலையில், `குஜராத்தில் பா.ஜ.க-வுக்கு ஆம் ஆத்மி டஃப் கொடுக்குமா?' என்ற விவாதங்கள் தேசிய அரசியலில் எழத் தொடங்கியிருக்கின்றன.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுடன் அகமதாபாத்திலுள்ள சபர்மதி ஆசிரமத்துக்குச் சென்ற ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், அந்தப் பகுதியில் நடந்த பேரணியிலும் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``குஜராத்தில் 25 ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சி செய்து வந்தாலும், ஊழலை ஒழிக்க முடியவில்லை. இங்கு ஊழலை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். பணக்காரர்களுக்காக மட்டுமே பா.ஜ.க வேலை செய்கிறது'' என்று பேசியிருந்தார்.

ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பக்வந்த் மான்

இந்த நிலையில், மே 1 அன்று, குஜராத்தின் பரூச் மாவட்டத்தில் நடந்த `ஆதிவாசி சங்கல்ப் மகாசம்மேளன'ப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார் கெஜ்ரிவால். குஜராத்தின் பழங்குடிகள் பகுதியில் இயங்கிவரும் `பாரதிய பழங்குடிகள் கட்சி'யின் தலைவர் சோட்டுபாய் வாசவாவும் (Chhotubhai Vasava) இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். இதன் மூலம் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி, பாரதிய பழங்குடிகள் கட்சியோடு கூட்டணி அமைக்கப்போவது உறுதியாகியிருக்கிறது.

இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ``குஜராத் மாநிலத்தைப் பற்றி தனது கட்சி கவலைப்படுவதே இல்லை என்று பா.ஜ.க-வைச் சேர்ந்த ஒருவரே என்னிடம் சொன்னார். பா.ஜ.க-வின் ஆணவத்தை முறியடிக்க ஆம் ஆத்மிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். எங்கள் ஆட்சி பிடிக்கவில்லை என்றால், எங்களைத் தூக்கி எறியுங்கள்'' என்றார். மேலும், ``காங்கிரஸ் கட்சி ஓய்ந்துவிட்டது. ஆனால், காங்கிரஸில் சில நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் குஜராத்துக்கு நல்லது செய்ய நினைத்தால், எங்களுடன் இணைந்துகொள்ளலாம். பா.ஜ.க-விலிருக்கும் சில நல்லவர்களும் எங்களோடு இணைந்து குஜராத்துக்கு நல்லது செய்யலாம். அவர்கள் பா.ஜ.க-விலேயே இருந்தால் ஒரு நல்லதும் நடக்காது'' என்றார் கெஜ்ரிவால்.

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்

இதையடுத்து பா.ஜ.க மாநிலத் தலைவர் சி.ஆர்.பாட்டீல் தனது ட்விட்டர் பக்கத்தில், ``காலிஸ்தான் பற்றிப் பேசிவருபவர்களுக்குக் கட்சியில் பொறுப்புகளை வழங்கியிருக்கிறது ஆம் ஆத்மி. அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்துபவர்'' என்று பதிவிட்டிருந்தார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த சி.ஆர்.பாட்டீலின் இந்த ட்விட்டர் பதிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ``குஜராத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மாநிலத் தலைவர் பதவி கொடுக்காமல், குஜராத் மக்களை அவமானப்படுத்தியிருக்கிறது பா.ஜ.க. மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர் குஜராத்தில் தலைமை வகிக்கலாமா?'' என்று அரவிந்த் கெஜ்ரிவால் பதிவிட்டிருந்தார். கெஜ்ரிவாலின் இந்த ட்வீட்டை ரீ-ட்வீட் செய்த பா.ஜ.க-வின் கபில் மிஸ்ரா, ``அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்?'' என்று கேள்வியெழுப்பியிருந்தார்.

இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் மாநிலத் தலைவர் இசுடான் காத்வி (Isudan Gadhvi), ``தேசப்பற்று, நேர்மை, மனிதாபிமானம் கொண்ட மனிதர் அரவிந்த் கெஜ்ரிவால். மக்கள் அவரை விரும்புகிறார்கள். அவர், நல்ல கல்வி, மருத்துவம், பாதுகாப்பு ஆகியவற்றை வழங்கிவருகிறார். எங்களுக்கு சி.ஆர்.பாட்டீலின் சான்றிதழ் தேவையில்லை'' என்றிருக்கிறார்.

இவ்வாறு பா.ஜ.க-வும் ஆம் ஆத்மியும் மோதிவரும் நிலையில், மற்றுமொரு ட்விட்டர் பதிவின் மூலம் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். ``குஜராத்தில் முன்கூட்டியே தேர்தல் வரும் என்று கேள்விப்படுகிறேன். ஆம் ஆத்மி கட்சியைக் கண்டு பாஜக பயப்படுகிறதா? டிசம்பர் வரை அவர்கள் எங்களுக்கு நேரம் கொடுக்க விரும்பவில்லை. ஒருவேளை அப்படிக் கொடுத்தால், ஆம் ஆத்மிக்கு பெரும்பான்மை கிடைத்துவிடும் என அஞ்சுகிறார்கள். ஆனால், கடவுள் நம்முடன் இருக்கிறார். எப்போது தேர்தல் வந்தாலும் ஆம் ஆத்மி வெற்றிபெறும்!'' என்று பதிவிட்டிருக்கிறார் கெஜ்ரிவால்.

இந்த நிலையில், ஆம் ஆத்மியின் ராஜ்ய சபா எம்.பி சந்தீப் பதக், ``குஜராத்தில் நாங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில், எங்களுக்கு 58 இடங்கள் கிடைக்கும் எனத் தெரியவந்திருக்கிறது. கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளவர்கள் எங்களுக்கு வாக்களிக்கத் தயாராக இருக்கிறார்கள்'' என்று கூறியிருக்கிறார்.

அமித் ஷா, மோடி

குஜராத்தில் ஆம் ஆத்மிக்கு இருக்கும் செல்வாக்கு பற்றியும் கள நிலவரம் பற்றியும் பேசும் தேசிய அரசியல் நோக்கர்கள், ``குஜராத்திலுள்ள சூரத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 27 வார்டுகளைக் கைப்பற்றிய உற்சாகத்தில், சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வருகிறது ஆம் ஆத்மி. பழங்குடிகள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற பாரதிய பழங்குடிகள் கட்சியோடு கூட்டணி அமைத்திருக்கிறது. இந்த பாரதிய பழங்குடிகள் கட்சி, கடந்த தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணியிலிருந்தது. நர்மதா, பரூச் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்தக் கட்சிக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது. மாற்றத்தை எதிர்நோக்கியிருக்கும் இளைஞர்கள் மத்தியில் ஆம் ஆத்மி கட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆனால் தற்போதைய நிலவரத்தை வைத்து, பா.ஜ.க-வுக்கு ஆம் ஆத்மி டஃப் கொடுக்கும் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.

அதே நேரத்தில், குஜராத்தில் காங்கிரஸுக்கு மிகப்பெரிய தலைவலியாக ஆம் ஆத்மி அமையும் என்பதில் சந்தேகமில்லை. தற்போதே ஒரு கூட்டணிக் கட்சியை ஆம் ஆத்மியிடம் இழந்துவிட்டது காங்கிரஸ். குஜராத்தில், 64 எம்.எல்.ஏ-க்களுடன் எதிர்க்கட்சியாக இருந்துவருகிறது காங்கிரஸ். 2022 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் எதிர்க்கட்சி அந்தஸ்தை, ஆம் ஆத்மி பறித்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், தேர்தலுக்கு இன்னும் எழு மாதங்கள் இருக்கும் நிலையில், எதையுமே உறுதியாகச் சொல்லிவிட முடியாது'' என்கிறார்கள்.


மேலும் படிக்க குஜராத்தில் வேகமெடுக்கும் ஆம் ஆத்மி... 2022 தேர்தலில் பாஜக-வுக்கு டஃப் கொடுப்பாரா கெஜ்ரிவால்?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top