மரண தண்டனை டு விடுதலை... 31 ஆண்டுகள் - ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் கடந்து வந்த பாதை

0

தேர்தல் பிரசாரத்துக்காகத் தமிழகம் வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி சென்னை ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப்படை பெண் மூலமாகக் குண்டு வெடிக்கச் செய்து கொல்லப்பட்டார். 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி இரவு 10.20 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு, பொது மக்களிடம் பேசி கொண்டு இருந்தபோது, பெண்மணி ஒருவர் ராஜீவின் கழுத்தில் மாலை அணிவித்துவிட்டு கீழே குனிந்தார். அடுத்த நோடி மிகப் பெரிய அளவிலான சத்தம் கேட்டது. அந்த தற்கொலைப்படை தாக்குதலில் ராஜீவ்காந்தி, லதா கண்ணன், கோகிலா, ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு அதிகாரி, மாவட்ட காவல்துறை அதிகாரி முகமது இக்பால் உள்ளிட்ட 9 காவலர்கள் உயிரிழந்தனர்.

'ராஜீவ்காந்தி கொலை ஆவதற்கு முன்பாக எடுக்கப்பட்ட படம்

மே 22-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது. அன்றைய தினமே இந்த கொலை வழக்கு சி.பி.ஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஐ.ஜியாக இருந்த டி.ஆர். கார்த்திகேயன் தலைமையில் இந்த வழக்கை விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இதனையடுத்து, மத்தியப் புலனாய்வுத் துறை மே 24-ல் புதிதாக ஒரு வழக்கைப் பதிவுசெய்தது. இந்த கொலையில் சந்தேகத்துக்குரிய கொலையாளி என்று பெண் ஒருவரின் படம் மே 29-ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த வழக்கின் முதல் கைதாக ஜூன் 11-ல் நளினியின் தாயார் பத்மா, சகோதரர் பாக்கியநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர், 14-ம் தேதி நளினி, முருகன் ஆகிய இருவரும் சைதாப்பேட்டையில் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, 19-ல் பேரறிவாளன் கைது செய்யப்பட்டார். பின்னர், விசாரணை வளையம் பெரிதானது. கிட்டதட்ட ஒரு ஆண்டுக்குப் பின்னர், 1992 மே 20-ல் 55 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் 41 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதில் 12 பேர் தற்கொலை செய்து கொண்டனர். 3 பேர் தலைமறைவாகினர். 26 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் 1998-ம் ஆண்டு ஜனவரி 28-ல் 26 பேருக்கும் மரண தண்டனை விதித்தது.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்

இந்த தண்டனை எதிர்த்து பேரறிவாளன் உட்படத் தண்டிக்கப்பட்டோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். 1998 செப்டம்பர் முதல் 1999 ஜனவரி வரை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. மே 5-ம் தேதி வழங்கிய தீர்ப்பில் நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு மட்டும் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரது மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. சண்முக வடிவேலு குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார். மீதமிருந்த 18 பேரும் தீவிரம் குறைந்த குற்றங்களையே புரிந்ததாக விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்பு எதிராக சி.பி.ஐ தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது.

தூக்குக் தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரும் ஆளுநருக்கு அக்டோபர் 10-ம் தேதி கருணை மனு அளித்தனர். ஆனால், அம்மனுக்களை ஆளுநர் பாத்திமா பீவி நிராகரித்தார். இதனால், ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுத்ததாகக் கூறி 4 பேரும் உயர் நீதிமன்றத்தை அணுகினர்.

நான்கு முதல்வர்களின் கனவு

ஆளுநரின் உத்தரவை நவ.25-ல் ரத்து செய்த உயர் நீதிமன்றம் அமைச்சரவையில் முடிவு எடுத்து ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியது. இதன்காரணமாக, அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையில், 2000-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி அமைச்சரவை கூடி, விவாதித்தது. இதில் நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க ஆளுநருக்குப் பரிந்துரைக்கப்பட்டு, குறைக்கவும் பட்டது. இதனால், மீதமுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரும் ஏப்ரல் 26-ம் தேதி குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர்.

அற்புதம் அம்மாள் - பேரறிவாளன்

ஆனால், 2000 - 2007-ம் ஆண்டு வரை இந்த காலகட்டத்தில் குடியரசுத் தலைவர்களாக இருந்த கே.ஆர். நாராயணன், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோர் கருணை மனுக்களை நிலுவையில் வைத்தனர். ஆனால், 2011-ம் ஆண்டு கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக அப்போதைய குடியரசுத் தலைவர் அறிவித்தார். இதனால், செப்டம்பர் மாதத்தில் அவர்கள் தூக்கிலிடப்படலாம் எனச் செய்திகள் வெளியானது. இதனால், 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்றும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பேரறிவாளன் உட்பட 3 பேரும் வழக்குத் தொடர்ந்தனர். மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், மூவரையும் தூக்கிலிடத் தடை விதித்தது. இதனால், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அங்கும், தீர்ப்பு உறுதியானது.

இதனையடுத்து, தமிழக அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின்படி ராஜீவ் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுவதாக 2014-ம் ஆண்டு பிப்ரவரி19-ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதனை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகி, விடுதலைக்கு தடையாணையும் வாங்கியது. இந்த வழக்கை மேலும் விசாரித்த நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய அமர்வு, 161-வது பிரிவின் கீழ் விடுதலை செய்தால் மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லையெனக் கூறியது. அதன்படி, 7 பேரையும் விடுவிக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு 2016-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி தமிழக அரசு கடிதம் எழுதியது. 2017-ம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் 24-ம் தேதி பேரறிவாளனுக்கு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக பரோல் வழங்கினார்.

பேரறிவாளன்

2018-ம் ஆண்டு செப்டம்பர் 6-ல் 7 பேரையும் விடுவிப்பது குறித்து அரசியல் சாஸனத்தில் உள்ள 161-வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க வேண்டுமென ரஞ்சன் கோகய் தலைமையிலான 3 நீதிபதி அமர்வு தீர்ப்பளித்தது. அதற்கு ஏற்ற வழிகளை அமைக்க 7 பேரையும் விடுதலை செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை 2018 செப்டம்பர் 9-ல் தீர்மானம் நிறைவேற்றியது. அமைச்சரவைத் தீர்மானத்தை ஏற்று, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரையும் விடுதலை செய்ய ஆணையிட வேண்டுமெனக் குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் 2021 மே 20-ல் கடிதம் எழுதினார்.

அதன்படி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைக்கவும் விடுதலை செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதன் மீதான விசாரணை, நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அமர்வில் நடந்து வந்தது. விசாரணையின்போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யத் தமிழக அமைச்சரவை கடந்த 2018-ல் நிறைவேற்றிய தீர்மானம் மீது ஆளுநர் நீண்டகாலமாக எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

ஆனந்த பறையடிக்கும் பேரறிவாளன்

மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தரப்பில் எந்த சட்டப்பூர்வ வாதங்களையும் முன்வைக்க இல்லை என்றால் பேரறிவாளனை விடுவிக்க நாங்களே முடிவு எடுப்போம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் பேரறிவாளனுக்கு ஜாமீன் கிடைத்தது. முன்னதாக, மருத்துவ சிகிச்சை பெற என்பது உள்ளிட்ட காரணங்களுக்காக பல முறை அவருக்கு பரோல் வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் தனக்குரிய பிரத்தியேக அதிகாரமான 142-ஐ பயன்படுத்தி விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளன் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ்,பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.


மேலும் படிக்க மரண தண்டனை டு விடுதலை... 31 ஆண்டுகள் - ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் கடந்து வந்த பாதை
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top