தமிழ் விக்கி: இது வாசகர்களின் பங்களிப்புடன், தொடர்ந்து விரியக்கூடிய ஒன்று!

0
`தமிழ் விக்கி' ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நடந்து முடிந்து, அமெரிக்காவில் வரும் 7-ம் தேதியன்று அதற்கான தொடக்கம் நடைபெறுகிறது. இந்த `தமிழ் விக்கி' கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு போன்றவை குறித்த செழுமையான விஷயங்களை முன்னிறுத்தும்.அதற்கான முன்னெடுப்பை எழுத்தாளர் ஜெயமோகன் மேற்கொண்டிருக்கிறார். அதுகுறித்த முழு விவரங்களையும் எடுத்துக்கூறுகிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

சென்ற ஜனவரி இறுதியில் நான் நண்பர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அதில் “நாம் ஏன் ஒரு இணையக்கலைக்களஞ்சியத்தை அமைக்கக்கூடாது?” என்று கேட்டிருந்தேன்.

ஒரு சிலர் “ஏற்கனவே இணையத்தில் கலைக்களஞ்சியங்கள் இருக்கின்றன. நாம் ஏன் இன்னொரு பெரிய முயற்சியில் ஈடுபடவேண்டும்?”என்றார்கள்.

நான் சொன்னேன். “ இணையத்தில் இரண்டு கலைக்களஞ்சியங்கள் உள்ளன. பெரியசாமித் தூரன் தலைமையில் உருவாக்கப்பட்ட தமிழ்க்கலைக்களஞ்சியம் கிடைக்கிறது . அது அதிகாரபூர்வமான கலைக்களஞ்சியம். ஆனால் 1968ல் அது எழுதப்பட்டுவிட்டது. அதன்பிறகு அது புதுப்பிக்கப்படவில்லை. புதிய செய்திகள் அதில் இல்லை”

“இணையக் கலைக்களஞ்சியம் என்று கிடைப்பது விக்கிப்பீடியா தமிழ்தான். ஆனால் அதை யார் வேண்டுமென்றாலும் எழுதலாம். அதில் நிபுணர்கள் என எவருமில்லை. யார் வேண்டுமென்றாலும் எடிட் செய்யலாம். ஆகவே அதில் விருப்பம்போல எதையாவது எழுதுகிறார்கள். எழுதப்பட்டதை அவரவருக்கு தோன்றியபடி திருத்துகிறார்கள். என் பெயரை நான் ஜெயமோகன் என எழுதினால் இன்னொருவர் வந்து அதை செயமோகன் என்று திருத்துவார். ஜெயமோகன் ஒரு முட்டாள் என்று இன்னொருவர் எழுதிவிட்டுச் செல்வார். எந்தக் கட்டுப்பாடும் இல்லை. நாம் இரவுபகலாக கண்காணித்து திருத்திக்கொண்டே இருக்கவேண்டும். அது வெட்டிவேலை. ஆகவே அதிகாரபூர்வமாக ஆசிரியர் குழு உள்ள ஓர் இணையக்கலைக்களஞ்சியம் நமக்கு தேவை” என்றேன்.

ஜெயமோகன்

பேசிக்கொண்டிருக்கும்போதே ஒரு நண்பர் சொந்தச்செலவில் இணையதளத்துக்கான ‘டொமெயின்’ பதிவுசெய்து விட்டார். இன்னொருவர் அந்த தளத்துக்கான அமைப்பு, பதிவுகளுக்கான அமைப்பு ஆகியவற்றை வடிவமைத்துவிட்டார். வெறும் மூன்றே நாட்களில் கலைக்களஞ்சியத்தை எழுதத் தேவையான எல்லாமே உருவாகிவிட்டது.

எவரையும் எதற்கும் தேர்ந்தெடுக்கவில்லை. எவருக்கும் அதிகாரபூர்வமாகப் பொறுப்பும் அளிக்கவில்லை. சொன்னதுமே வந்து தாங்களே எடுத்துச்செய்ய ஆரம்பித்த நண்பர்களை வேலை முடிந்தபோது கலைக்களஞ்சிய அமைப்பாளர்களாக ஆக்கினோம். அதாவது அவர்கள் எதை செய்துகொண்டிருக்கிறார்களோ அதற்கு அவர்களே பொறுப்பாளர்கள்.

இவ்வளவு எளிமையாக இதெல்லாம் நிகழுமா என்றால், எங்கள் விஷ்ணுபுரம் அமைப்பின் எல்லா செயல்பாடுகளும் இதுவரை இப்படித்தான் நிகழ்கின்றன. எவரும் எவருக்கும் ஆணையிடுவதில்லை. எவரும் எவருக்கும் மேல் அல்ல. ஒவ்வொருவரும் அவரவருக்கு முடிந்ததை உடனடியாகச் செய்ய ஆரம்பிப்பார்கள். ஓரிரு நாட்களில் தானாகவே ஓர் அமைப்பு உருவாகிவிடும்.

தமிழகத்தின் தலைசிறந்த இலக்கியவிழா என்று சொல்லப்படும் விஷ்ணுபுரம் இலக்கியவிழாவே இப்படித்தான் நடக்கிறது. இன்றுவரை அதிகாரபூர்வ பொறுப்பாளர்கள் எவரும் அதற்கு இல்லை. விஷ்ணுபுரம் விழாவுடன் ஒப்பிடத்தக்க விழா ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழா. அது எங்களைவிட நூறு மடங்கு அதிக செலவில், பிரம்மாண்டமான அமைப்பால் நடத்தப்படுகிறது. அரசுநிதியும் தனியார் நிதியும் அதற்கு ஏராளமாக கிடைக்கின்றன.

தமிழ் விக்கி

எங்களுக்கு நிதி ஒரு பிரச்னையே இல்லை. ஏனென்றால் அதைப்பற்றி கவலையே படுவதில்லை. மிகமிகக் குறைவான நிதிச்செலவில் நாங்கள் எல்லா செயல்பாடுகளையும் நடத்துகிறோம். கார்ப்பரேட் நிதி பெறுவதில்லை. அரசுநிதி இல்லை. எங்களைப்போன்று ஆர்வமுடைய நண்பர்களின் நன்கொடைதான் எங்களுக்கு அடிப்படை. ஆண்டுதோறும் இலக்கிய விழாக்கள், இலக்கியச் சந்திப்புகள், கருத்தரங்குகள் எல்லாமே மிகக்குறைவான நிதியில் நடத்தப்படுகின்றன. ஏராளமான எழுத்தாளர்களுக்கு அவர்களின் பிரச்னைகளில் நிதியுதவியும் செய்கிறோம். எல்லாமே நண்பர்களின் நன்கொடை. இதையும் அப்படித்தான் நடத்தவிருக்கிறோம்.

கலைக்களஞ்சியம் என்பது ஒரு மொழியின் அறிவுத்தொகுதி. அதுவரை நிகழந்த அறிவுச்செயல்பாட்டை தொகுத்துக்கொண்டு மேற்கொண்டு சிந்திப்பதற்கான வழி. ஆகவே ஒரு கலைக்களஞ்சியத்தில் அதுவரை சேகரிக்கப்பட்ட எல்லா செய்திகளும் இருக்கவேண்டும். அப்போதுதான் அதனால் பயன். அரைகுறைச் செய்திகள் இருக்கக்கூடாது.

அத்துடன் அந்தச் செய்திகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தப்பட்டிருக்கவேண்டும். உதாரணமாக, ஆனந்த விகடன் என ஒரு பதிவு இருந்தால் அதில் எஸ்.எஸ்.வாசன், கல்கி, தேவன், மாலி, சில்பி ,மெரினா,பரணீதரன், கொத்தமங்கலம் சுப்பு, தில்லானா மோகனாம்பாள் என்று இணைப்புச்சுட்டிகள் இருக்கவேண்டும். அதை ஒரு மென்பொருள் தானாகவே செய்தால் சகட்டுமேனிக்கு இணைப்பு இருக்கும். ஓர் ஆய்வாளர்தான் இணைப்பை அளிக்கவேண்டும். அதை பாமரர் செய்ய முடியாது.

இதற்காகவே இந்த இணையதளம். `தமிழ் விக்கி' என்பது இணையதளத்தின் பெயர். விக்கி என்னும் சொல் எதைக்குறிக்கிறது என்றால் இது எழுதி முடிக்கப்பட்டுவிட்ட கலைக்களஞ்சியம் அல்ல என்பதைத்தான். இது வாசகர்களின் பங்களிப்புடன், தொடர்ந்து விரியக்கூடிய ஒன்று. விக்கிப்பீடியா போலவே இதற்கு வாசகர் எவரும் கட்டுரைகள் எழுதி அனுப்பலாம். திருத்தங்கள் அனுப்பலாம். ஆனால் துறைசார் நிபுணர்களின் ஒரு குழு ஆராய்ந்த பின்னரே அவை பதிவுசெய்யப்படும்.

அ.கா.பெருமாள்

இப்போது கல்வித்துறை சார்ந்த ஆசிரியர்களாக பேரா மௌனகுரு, பேரா சிவக்குமாரன், பேரா மா.சுப்ரமணியம், பேரா தெ.வே.ஜெகதீசன், முனைவர் ப.சரவணன் ஆகியோர் செயல்படுகிறார்கள். படைப்பிலக்கியத்துறையில் இருந்து நாஞ்சில்நாடன், சோ.தர்மன், சுனீல் கிருஷ்ணன் ஆகிய சாகித்ய அக்காதமி விருதுபெற்ற எழுத்தாளர்களும் நானும், முனைவர் சுசித்ராவும் செயல்படுகிறோம். இதன் ஆசிரியர் அ.கா.பெருமாள்.

இப்போது இருபது நண்பர்கள் இதில் இணைந்து வேலைசெய்கிறார்கள். பிப்ரவரியில் தொடங்கி 90 நாட்களில் இரண்டாயிரம் பதிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் ஐந்தாயிரம் பதிவுகள் ஆகிவிடும். பத்தாண்டுகளில் ஐம்பதாயிரம் பதிவுகள் என்பது திட்டம்.

இப்போதைக்கு இலக்கியம், பண்பாடு சார்ந்த கலைக்களஞ்சியமாகவே இது இருக்கும். ஓராண்டுக்குப்பின் வரலாறும் சேர்த்துக்கொள்ளலாம் என நினைக்கிறோம்.

இந்த இணையக் கலைக்களஞ்சியம் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளிவரும். நிறைய பேரின் பங்களிப்பு தேவை. குறிப்பாக ஆங்கில மொழியாக்கத்துக்கு நிறைய இளைஞர்கள் வரவேண்டியிருக்கிறது.


மேலும் படிக்க தமிழ் விக்கி: இது வாசகர்களின் பங்களிப்புடன், தொடர்ந்து விரியக்கூடிய ஒன்று!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top