அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி மோசடி?! - ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் நடந்தது என்ன?

0

மோசடி விளம்பரம்:

சென்னை அமைந்தகரை பகுதியில் செயல்படும் ஆரூத்ரா கோல்டு நிறுவனத்துக்குத் தமிழ்நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட விளம்பரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அதாவது, ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தல் 36 ஆயிரம் வட்டி வழங்கப்படும் என்று விளம்பரம் வெளியானது. இந்த விளம்பரத்தை நம்பி சிலர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது.

ஆருத்ரா கோல்டு நிறுவனம்

இந்த விளம்பரம் தொடர்பாக, பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினருக்குப் புகார் சென்றுள்ளது. இதனையடுத்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்த நிறுவனங்களிலும், இந்த நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். சென்னையில், அமைந்தகரை, வில்லிவாக்கம், அண்ணாநகர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ஓசூர் போன்ற இடங்களில் சோதனை நடைபெற்றது.

சிக்கிய ஆவணங்கள்:

செங்கல்பட்டு கிளையில் நடைபெற்ற சோதனையில் 83 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. திருவள்ளூரில் நடைபெற்ற சோதனையில் 1.20 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை நிறுவனத்தில் பணியாற்றிவரும் பட்டாபிராமன் வீடு கடலூரில் உள்ளது. அங்கு நடைபெற்ற சோதனையில் 14 லட்சம் மதிப்புள்ள கார் பறிமுதல் செய்யப்பட்டது. திருவண்ணாமலையில் உள்ள நிறுவனத்தின் உறவினர் வீட்டில் நடத்திய சோதனையில் 312 கிராம் தங்கம், 650 கிராம் வெள்ளி மற்றும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம்

ஆரணி கிளை தொடங்கிய 18 நாளில் மட்டும் 107 வாடிக்கையாளர்கள் சுமார் 1.10 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் 26 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் வழக்கு தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அதிக வட்டி தருவதாக மோசடி நடைபெற்றிருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

3.41 கோடி ரூபாய் பறிமுதல்:

தமிழகம் முழுவதும் 26 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 48 கணினி, மென்பொருள், ஆறு மடிக்கணினி, 44 செல்போன்கள், 60 சவரன் தங்கம், இரண்டு கார் மற்றும் 3.41 கோடி ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் வசூல் செய்து பணம் டெபாசிட் செய்துள்ள இந்த நிறுவனத்தின் 11 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கிறது. அந்த நிறுவனங்களுக்குச் சீல் வைக்கப்பட்டு வெளியே காவல்துறையினர் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

நோட்டீஸ்

ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மீது மோசடி, கூட்டுச்சதி உட்பட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நிதி நிறுவனத்தின் இயக்குநர் பாஸ்கரன், மோகன்பாபு, உஷா, ஹரீஷ், ராஜசேகர், பட்டாபிராமன், மைக்கேல்ராஜ், செந்தில்குமார் ஆகிய எட்டு பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாஸ்கர் மற்றும் மோகன்பாபு ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மறுக்கும் நிறுவனம்:

ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அப்போது, ``முதலீடு செய்தல் அதிக வட்டி தருவதாக எங்கள் நிறுவனம் சார்பில் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி யாரோ மோசடியில் ஈடுபட்டுள்ளனர். ஆவணங்களை ஆய்வு செய்யவே காவல்துறையினர் வந்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தகுந்த விளக்கம் வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்த யாரையும் ஏமாற்றவில்லை" என்று தெரிவித்தார்.

ஆருத்ரா கோல்டு நிறுவனம்

இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள பொதுமக்கள் இந்த வழக்கு விசாரணை அதிகாரியை தொடர்பு கொள்ளலாம் என்றும், முதலீடு செய்து பாதிக்கப்பட்டுள்ளவர்கள் @eowtn7of2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் தெரிவிக்கலாம் என்று பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், பொதுமக்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்யும்போது, ரிசர்வ் வாங்கி வெளியிட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்யவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.


மேலும் படிக்க அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி மோசடி?! - ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் நடந்தது என்ன?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top