`பாலியல் தொழிலும் ஒரு தொழில்தான்!' - உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவுகள் அமலுக்கு வருமா?!

0

மே 26 அன்று, பாலியல் தொழில் தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சில முக்கியமான உத்தரவுகளைப் பிறப்பித்திருப்பது நாடு முழுவதும் கவனம்பெற்றிருக்கிறது. `கொரோனா காலத்தில், பாலியல் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு ரேஷன் கடைகளில் உணவுப் பொருள்கள், நிதியுதவிகள் வழங்கப்பட வேண்டும்' என்று தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தது. அந்த வழக்கு விசாரணையின் போதுதான் சில முக்கியமான உத்தரவுகளைப் பிறப்பித்தது உச்ச நீதிமன்றம்.

உச்ச நீதிமன்ற உத்தரவு

இந்த வழக்கில் தொண்டு நிறுவனம் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், ``இந்தியா முழுவதும் ஒன்பது லட்சத்துக்கும் அதிகமான பாலியல் தொழிலாளர்கள் இருக்கின்றனர். அவர்களை காவல்துறை மிக மோசமாக நடத்துகிறது. பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை, அவர்களது விருப்பத்துக்கு மாறாகக் காப்பகங்களில் அடைக்கின்றனர். இந்த நடவடிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும்'' என்றார்.

மத்திய அரசின் அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெயந்த், ``பெண்கள் பலரும் கடத்தப்பட்டு, பாலியல் தொழிலில் தள்ளப்படுகின்றனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே காப்பகங்களில் சேர்க்கப்படுகிறார்கள்'' என்று வாதிட்டார். இரண்டு தரப்பு வாதாங்களையும் கேட்ட நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகிய மூவர் அடங்கிய அமர்வு சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தது. ``18 வயதைக் கடந்தவர்கள், விருப்பத்துடன் பாலியல் தொழில் செய்வது சட்டப்பூர்வமானதுதான். எனினும், பாலியல் கூடங்கள் நடத்துவது சட்டவிரோதமானது. பெரும்பாலான சமயங்களில், பாலியல் தொழிலாளர்களை காவல்துறை மோசமாகவே நடத்துகிறது. இந்த அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவேண்டும். அவர்களை உடல்ரீதியாகவோ, மனரீதியாக காவல்துறையினர் துன்புறுத்தக்கூடாது.

ரெய்டு நடத்தும்போது பாலியல் தொழிலில் விருப்பப்பட்டு ஈடுபடுபவர்களைக் கைது செய்யக்கூடாது. அவர்களுக்கு அபராதமும் விதிக்கக்கூடாது. பாலியல் தொழிலாளர்கள் புகார் அளித்தால், காவல்துறை அதில் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவர்களைக் கண்ணியமாக நடத்த வேண்டும். பாலியல் தொழிலாளர்களின் அடையாளங்களை ஊடகங்கள் வெளியிடக்கூடாது. பாலியல் தொழிலாளர்களின் குழந்தைகளை அவர்களிடமிருந்து பிரிக்கக்கூடாது. காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் பாலியல் தொழிலாளர்கள் குறித்து மாநில அரசுகள் ஆய்வு நடத்த வேண்டும். அங்கு அவர்கள் விருப்பத்துக்கு மாறாகத் தங்க வைக்கப்பட்டிருந்தால், உடனடியாக அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அவர்களுக்குத் தேவையான சட்ட, மருத்துவ உதவிகளைச் செய்ய வேண்டும்'' என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

இந்த உத்தரவுகள் வெளியான பின்னர் பேசிய மூத்த வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், ``உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் அனைத்தும் பாலியல் தொழிலாளிகள் சமூகத்துக்கு நல்ல செய்தியாக அமைந்திருக்கிறது. இனி அவர்கள் குற்றவாளிகளைப் போல நடத்தப்படக்கூடாது. ஆதார், ரேஷன் அட்டைகளைப் பெறுவது இனி அவர்களின் உரிமை என்றும் இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது'' என்று கூறினார்.

பாலியல் தொழில்

உச்ச நீதிமன்ற உத்தரவுகள் குறித்துப் பேசும் சமூக ஆர்வலர்கள் சிலர், `` `விருப்பத்துடன் பாலியல் தொழிலில் ஈடுபடுவது சட்டப்பூர்வமானது' என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வரவேற்கக்கூடியது. இந்தத் தொழிலில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானவர்கள் வேறு வழியின்றிதான் இந்தத் தொழிலைச் செய்கிறார்கள். அவ்வாறு நிர்பந்தத்தின் பெயரில் பலரும் இந்தத் தொழிலுக்குத் தள்ளப்படும் நிலையை அரசுதான் தடுத்து நிறுத்த வேண்டும். இனியாவது இந்த உத்தரவின்படி பாலியல் தொழிலாளர்களிடம், காவல்துறை கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். அவர்களை மூன்றாம் தரக் குடிமக்களைப் போலவோ, குற்றவாளிகளைப் போலவோ நடத்தக்கூடாது. காவல்துறையினருக்கு இது குறித்த விழிப்பு உணர்வுகளை மாநில அரசுகள்தான் ஏற்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவை காவல்துறை பின்பற்றுவதையும் மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்'' என்கிறார்கள்.


மேலும் படிக்க `பாலியல் தொழிலும் ஒரு தொழில்தான்!' - உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவுகள் அமலுக்கு வருமா?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top