ஸ்ரீராமாநுஜ ஜயந்தி: நாராயணனுக்கு மட்டும் அல்ல, எல்லோருடைய அன்புக்கும் உரியவர் ஸ்ரீராமாநுஜர்!

0

1017-ம் ஆண்டு, சித்திரை திருவாதிரை நன்னாளில் ஸ்ரீபெரும்புதூரில் ஆசூரி கேசவசோமயாஜி - காந்திமதி தம்பதியருக்கு ஸ்ரீஆதிசேஷனின் அம்சமாக, திருமாலவன் அருளால், ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் மாமா பெரிய திருமலைநம்பி. அந்தக் குழந்தைக்கு ராமாநுஜன் என்றும், லக்ஷ்மணனின் பெயரான இளையாழ்வார் என்றும் பெயர் சூட்டினார். அந்தக் குழந்தையே வைஷ்ணவத்தின் மாபெரும் ஞானியாக, 1000 ஆண்டுகளுக்கு முன்பே சாதி ஏற்றத்தாழ்வுகளை புரட்டித் தள்ளிய மாபெரும் புரட்சியாளராக உருவெடுத்தது.

சிறுவயது முதலே ஸ்ரீராமாநுஜரின் வைஷ்ணவப் பற்றும் பக்தியும் தீவிரமாக வளர்ந்தன. காஞ்சி வரதராஜரின் சந்நிதியில் துறவறம் மேற்கொண்டார். யதிராஜர் என்ற பட்டப் பெயரும் பெற்றார். வரதராஜ பெருமாளின் கட்டளைப்படியே ஒவ்வொரு செயலையும் செய்தும் வந்தார்.

ராமாநுஜர்

காஞ்சியில் இருந்து திருவரங்கத்துக்குப் புறப்பட்ட ராமாநுஜர், திருவரங்கப் பெருமானின் கோயிலை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பூஜா கிரமங்களை ஒழுங்குபடுத்தினார். திவ்வியபிரபந்த பாராயணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார். தத்துவப் பிரிவுகளில் முக்கியமான வேதாந்தத்தில் ஒன்றான விசிஷ்டாத்துவைதத்தின் முன்னோடியாக இவரே விளங்கினார். பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீபாஷ்யம் எழுதினார். ஆண்டாளின் மீதும் அவர் இயற்றிய பாசுரங்களின் மீதும் பற்றும் பக்தியும் கொண்டார். அதனால் திருவாய்மொழியின் செவிலித்தாய், திருப்பாவை ஜீயர் என்றெல்லாம் போற்றப்பட்டார்.

ஆசார்யர்களில் ஆதிசங்கரர், ஸ்ரீராமாநுஜர், மத்வர் ஆகிய மூவருமே முதலாமானவர்கள் என்று போற்றப்படுகிறார்கள். மேலும் திருவரங்க ரங்கநாத பெருமானே 'உடையவர்' என்று போற்றிய மாபெரும் ஞானியும் இவர். பாரத தேசம் எங்கும் எழுந்தருளி நமது தர்மங்களையும் திருமடங்களையும் நிறுவிய அருளாளர். மேலும் அப்போது ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்த உழைக்கும் மக்களை 'திருக்குலத்தார்' என்று தம்மோடு சேர்த்துக்கொண்டு சமயப் புரட்சி செய்த அருளாளரும் இவரே.

வடமொழியிலும், தமிழிலும் தேர்ச்சி பெற்ற பண்டிதர்களைக் கொண்டு வேத உபநிஷத்துக்கள் குறித்தும், பிரபந்தம் குறித்தும் ஆராய்ச்சிகள் நடத்தினார். அதன்வழியே பல உன்னதக் கருத்துக்களை எளிமையாக்கி மக்களிடம் கொண்டு சேர்த்தார். அற்புதமான பல ஆன்மிக நூலகளுக்கும் பாஷ்யங்களும் செய்தருளினார். கீதைக்கு அவர் செய்த பாஷ்யங்கள் அற்புதமானவை. வைணவ வழிபாடுகள் நீடித்து வளரவும், திருமாலின் பெருமை தேசம் எங்கும் பரவவும் அயராது பாடுபட்டவர் இந்த மகாபுருஷர். நாராயண சேவைக்கென 75 தலைவர்களை நியமித்தார். ஆலயங்களை சீர்படுத்தினார். எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சாது எங்கும் எப்போதும் எட்டெழுத்து திருமந்திரத்தை பரப்பி வந்தார்.

ஸ்ரீராமாநுஜர்

அந்த எட்டெழுத்தினை இவர் கற்றுக்கொண்ட விதமும் அதை மக்களிடம் இவர் கொண்டு சேர்த்த விதமும்தான் இவரை கருணையாளராக உலகுக்கு எடுத்துக் காட்டியது. ஆம், திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் நாராயண மந்திரோபதேசம் பெற பலமுறை நடையாய் நடந்தார் ராமாநுஜர். இறுதியில் ஒருவழியாக நம்பிகள் அவருக்கு மந்திரோபதேசத்தை திருக்கோஷ்டியூர் நாராயண பெருமாள் கோயில் கோபுர மாடத்தில் வைத்து ஓதினார். யாருக்கும் கிட்டாத, மோட்சம் தரும் அந்த மந்திர உபதேசத்தை யாருக்கும் சொல்லக் கூடாது என்றும், மீறினால் உனக்கு நரகமே கிடைக்கும் என்றும் எச்சரித்தார். ஆனால், ராமாநுஜரோ எல்லோரையும் அங்கிருந்தே அழைத்து உலகத்தை உய்ய வைக்கும் திருமந்திரமான அஷ்டாட்சர மந்திரத்தை பலரும் கேட்க ஓங்கி 'ஓம் நமோ நாராயணாய' என்று உபதேசித்தார்.

அதுகேட்ட திருக்கோஷ்டியூர் நம்பி ராமாநுஜரிடம், "உனக்கு நரகம் கிடைக்கும் என்று தெரிந்தும், இப்படிச் செய்தாயே, இது உனக்கு நல்லது அல்ல" என்று கோபித்தார். அதற்கு ராமாநுஜர், "சுவாமி, நான் நரகத்துக்குப் போனாலும் பரவாயில்லை, உபதேசம் பெற்ற அத்தனை பேரும் ஸ்ரீமன் நாராயணன் பாதம் அடைவார்களே, அதுவே எனக்குப் போதும்" என்றார். அதுகேட்டு கலங்கிய திருக்கோஷ்டியூர் நம்பி 'நீரே எம்பெருமானார்' என்று கலங்கி ஆசீர்வதித்துக் கொண்டாடினார்.

நாராயண பெருமாள்
இதுதான் பக்தி. மக்கள் மீது கொண்ட அன்பே முக்கியமானது. மற்றபடி சடங்குகள், வழிபாடுகள் எல்லாம் பிற்பாடுதான் என்று வாழ்ந்தவர் இந்த மகான்! அதனாலேயே எல்லோருடைய அன்புக்கும் காரணமாக விளங்குகிறார் இந்த மகாஞானி. அனுஜன் என்றால் உடன்பிறந்தவர் என்று அர்த்தம், ராமனோடு பிறந்த லட்சுமணன்தானே, ராமாநுஜராகவும் அவதரித்தார். அவர் திருஅவதாரம் செய்த சித்திரை திருவாதிரை நாள் மே 5. இந்நாளில் அவரை வணங்கி நலன்கள் யாவும் பெறுவோம்.

மேலும் படிக்க ஸ்ரீராமாநுஜ ஜயந்தி: நாராயணனுக்கு மட்டும் அல்ல, எல்லோருடைய அன்புக்கும் உரியவர் ஸ்ரீராமாநுஜர்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top