GT v RR: பட்லரை ஓரங்கட்டிய மில்லரின் ஹாட்ரிக் சிக்ஸர்கள்... முதல் சீசனிலேயே பைனல் சென்ற குஜராத்!

0

லீக் போட்டிகளை முடித்துவிட்டு, இந்த ஐபிஎல்லின் முதல் குவாலிபையர் போட்டி கொல்கத்தாவில் தொடங்கியது. ராஜஸ்தான் வென்றால் 2008-ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் ஃபைனலுக்கு முன்னேறலாம். ஒரு பக்கம் மழை வரலாம் என்கிற அச்சுறுத்தல் இருந்தாலும், அடித்து வெளுத்தது என்னவோ மில்லர் புயல்தான். 2016-ம் ஆண்டும் கார்லோஸ் பிராத்வெய்ட் பவுண்டரிகளாக அடித்து வெற்றியை நோக்கி நகர்ந்தார். இந்த முறை 'மில்லர் தி கில்லர்' அதைச் செய்திருக்கிறார்.

ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று சேஸிங் தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் XI: ஜாஸ் பட்லர், யஷ்ஹஸ்வி யாதவ், சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல், ஷிம்ரோன் ஹிட்மெய்ர்,ரியான் பராக், அஷ்வின், போல்ட், மெக்காய், சஹால், பிரசித் கிருஷ்ணா
GT v RR
குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் XI: ஷுப்மன் கில், சாஹா, மேத்யூ வேட், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, ரஷீத் கான், சாய் கிஷோர், மொஹமது ஷமி, ஜோசஃப், யஷ் தயால்

ஜெய்ஸ்வாலும், பட்லரும் ஓப்பனிங் இறங்க முதல் ஓவரை வீசினார் ஷமி. ஒரு அட்டகாசமான கவர் டிரைவுடன் பட்லர் தன் கணக்கைத் தொடங்கினார். அதே ஓவரில் மேத்யூ வேடைத் தாண்டிக்கொண்டு சென்றது இன்னொரு பவுண்டரி. யஷ் தயால் வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில், கொஞ்ச நேரமாக அடிக்க முயன்று அது நடக்காமல் உழற்றிக்கொண்டிருந்த ஜெய்ஸ்வால் தன் விக்கெட்டை இழந்தார். ஜெய்ஸ்வால் அந்த பந்தை லைட்டாக நிக்தான் செய்தார், ஆனால் அந்த வாய்ப்பை தவறவிடவில்லை கீப்பர் சாஹா. அம்பயரின் பதிலுக்காகக் காத்திருக்காமல் வெளியேறினார் ஜெய்ஸ்வால்.

ஒன் டவுன் வழக்கம் போல சஞ்சு சாம்சன். நான்காவது ஓவரின் முதல் பந்தில் லாங் ஆனில் ஒரு சிக்ஸ் அடித்து தன் கணக்கைத் தொடங்கினார். அடுத்து கவருக்கும், மிட் ஆஃபுக்கும் இடையே ஒரு பவுண்டரி. அடுத்து ஷமியின் ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரி; அல்ஜரி ஜோசஃப் ஓவரில் டீப் மிட்வ்விக்கெட்டில் ஒரு சிக்ஸ்; டீப் ஃபைன் லெக்கில் ஒரு சிக்ஸ் என அசால்ட்டு செய்தார் சஞ்சு. பவர்பிளே முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்திருந்தது ராஜஸ்தான்.

GT v RR

ரஷீத் கானின் முதல் ஓவரில் வெறும் ஆறு ரன்களை மட்டுமே ராஜஸ்தானால் எடுக்க முடிந்தது. அடுத்து சாய் கிஷோர் ஓவரில் இரு பவுண்டரி அடித்தார் சஞ்சு. முதல் ஓவரைவிட இரண்டாம் ஓவரை இன்னமும் துல்லியமாக வீசினார் ரஷீத் கான். பட்லர் மூன்று பந்துகள், சஞ்சு மூன்று பந்துகள் என பேட் செய்தும் அவர்களால் இரண்டு ரன்களுக்கு மேல் எடுக்க முடியவில்லை. ரஷீதின் ஓவரில் அடிக்க முடியாத ரன்களையும் சேர்த்து சாய் கிஷோரின் ஓவரில் அடித்துவிட முடிவு செய்தார் சஞ்சு சாம்சன். மறுபடியும் சஞ்சு தூக்கியடிக்க, அதை எளிதாக கேட்ச் பிடித்தார் அல்சரி ஜோசப். 26 பந்துகளில் 3 சிக்ஸ் உட்பட 47 ரன்கள் அடித்து அவுட்டானார் சஞ்சு சாம்சன். சாய் கிஷோரின் ஓவரில் டீப் ஸ்கொயர் லெக்கில் ஒரு சிக்ஸ் அடித்தார் படிக்கல். முந்தைய ரஷீதின் ஓவரில் நான்கு ரன்கள் மட்டுமே அடித்ததற்கு, இந்த சிக்ஸ் கொஞ்சம் ஈடு செய்ய உதவியது.

பட்லரும், படிக்கலும் விக்கெட்டுகள் கைவசம் இருந்தாலும், கிட்டத்தட்ட ஒண்டே மேட்ச் போல ஆடிக்கொண்டு இருந்தார்கள். சாய் கிஷோரின் கடைசி ஓவரில் டீப் மிட் விக்கெட் திசையில் ஒரு சிக்ஸும், அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளும் அடித்து தன் ஸ்டிரைக் ரேக்கை பெட்டராக்கிக் கொண்டார் படிக்கல். என்ன செய்து என்ன பிரயோஜனம் என்பதாக, அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே போல்டாகி வெளியேறினார். ரஷீத் கான் நான்கு ஓவர் முடிவில் வெறும் 15 ரன்கள்தான் விட்டுக்கொண்டிருந்தார். ரஷீத் கானின் நான்கு ஓவர்களைக் கழித்துவிட்டுப் பார்த்தால் 16 ஓவர்களில் 173 ரன்கள் அடித்திருந்தது ராஜஸ்தான். அதாவது ஒரு இன்னிங்ஸின் ரன்ரேட் 9.59 ஆக இருக்கும் போது, ரஷீத் ஒரு ஓவருக்கு வெறும் 3.75 ரன்களையே வழங்கியிருந்தார்.

Jos Butler | ஜாஸ் பட்லர் | GT v RR

அடுத்த யஷ் தயாலின் ஓவரில் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கினார் பட்லர். நான்கு பவுண்டரிகள் அடித்து அரைசதத்தையும் கடந்தார். அடுத்த ஜோசபின் ஓவரிலும் மூன்று பவுண்டரி. அதிரடியாக ஆடுவார் என எதிர்பார்த்த ஹிட்மெயர் சொற்ப ரன்களுக்கு அவுட்டானாலும், மறுமுனையில் விளாசித்தள்ளினார் பட்லர். 19வது ஓவரின் கடைசி பந்தில் தன் முதல் சிக்ஸரை அடித்தார் பட்லர். லாங் ஆஃப் பக்கம் அடிக்கப்பட்ட அட்டகாசமான சிக்ஸர் அது.

யஷ் தயால் வீசிய இருபதாவது ஓவரில் லாங் ஆனில் ஒரு சிக்ஸர். 56 பந்துகளில் 89 ரன்கள் அடித்து ரன் அவுட்டாகி வெளியேறினார் பட்லர். 20 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் அடித்தது ராஜஸ்தான்.
மேத்யூ வேட் | GT v RR

189 ரன்கள் என்னும் இலக்கை நோக்கி நகர்கையில் முதல் ஓவரிலேயே குஜராத் டைட்டன்ஸுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. போல்ட் வீசிய பந்தை சாஹா அடிக்க முயல, அது கீப்பர் கேட்ச் ஆனது. தேர்ட் மேனைக் கடந்து ஆட்டத்தின் முதல் பவுண்டரியை அடித்தார் மேத்யூ வேட். பிரசித் கிருஷ்ணாவின் முதல் ஓவரிலேயே 14 ரன்கள். அப்போதே கொஞ்சம் சுதாரித்து இருக்கலாம். என்ன செய்ய! போல்ட்டின் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்தார் மேத்யூ வேட். பவர்பிளேயின் ஆறாவது ஓவரை வீசினார் அஷ்வின். கிரீஸைவிட்டு வெளியே வந்து இமாலய சிக்ஸ் அடித்தார் கில். அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் என ஒரே ஓவரில் 17 ரன்கள். பவர்பிளே இறுதியில் 1 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் அடித்தது.

அஷ்வின் வீசிய ஆட்டத்தின் எட்டாவது ஓவரில் கில் இரண்டாவது ரன்னுக்கு ஓடிவர, வேடோ இரண்டு அடி எடுத்துவிட்டு மீண்டும் அங்கேயே நின்றுவிட்டார். அப்புறமென்ன நன்றாய் விளாசிக்கொண்டு இருந்த கில் ரன் அவுட். மெக்காயின் ஓவரில் மேத்யூ வேடும் அவுட்டானார். ஹர்திக்கும், மில்லரும் இணைந்து 107 ரன்கள் அடித்தால் வெற்றி என்னும் இலக்குடன் மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்தார்கள்.

சரியாகக் கணித்து ஓவருக்கு பத்து ரன்களை அடித்து வந்தது குஜராத் டைட்டன்ஸ். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை. லெக் சைடில் லாங் ஆனில் மட்டும் ஒருவர் இருந்தார். பிரசித் கிருஷ்ணா ஓவரை வீசினார். 35 பந்துகளில் 50 ரன்களை அடித்திருந்த மில்லர் ஸ்டிரைக்கில் இருந்தார். முதல் பந்தையே லாங் ஆனில் சிக்ஸருக்கு விளாசினார். 'தம்பி, பல லட்ச ரூவா காண்டிராக்ட்பா மண்ணள்ளி போட்டுடாத' என்பதாக பட்லர், கிருஷ்ணா அருகே வந்து ஏதோ ஆலோசனைகள் வழங்கினார். கிருஷ்ணருக்கே உபதேசமா என்பதாக, அடுத்த பந்தை நல்லதொரு லெந்த் பாலாக வீசினார். இந்த முறை டீப் ஸ்கொயர் லெக்கில் ஒரு சிக்ஸ். அடுத்த நான்கு பந்துகளில் நான்கு ரன்கள் தேவை. மிடில் ஸ்டம்ப் நோக்கி வந்த பந்தை டீப் மிட் விக்கெட்டில் சிக்ஸருக்கு விளாசித்தள்ளி, டைட்டன்ஸ் தன் முதல் சீசனிலேயே ஃபைனலுக்குச் செல்ல மில்லர் தி கில்லர் உதவினார்.

ஒரு சீசனில் ஃபைனல் ஓவர் வரை சென்று அதிக போட்டிகளில் (7*) வென்ற அணி என்னும் பெருமையையும் பெற்றது குஜராத் டைட்டன்ஸ்.
டேவிட் மில்லர் | GT v RR

முதல் 14 பந்துகளில் 10 ரன்களும், அடுத்த 24 பந்துகளில் 58 ரன்களும் அடித்த மில்லர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - பெங்களூரு அணிகளுக்குள்ளான போட்டியில் வெல்லும் அணி, இனி ராஜஸ்தானை எதிர்கொள்ளும்.


மேலும் படிக்க GT v RR: பட்லரை ஓரங்கட்டிய மில்லரின் ஹாட்ரிக் சிக்ஸர்கள்... முதல் சீசனிலேயே பைனல் சென்ற குஜராத்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top