MI v DC: ஆர்சிபி ஹேப்பி அண்ணாச்சி - பண்ட் தவறுகளால் `ராயல் சேலஞ்சர்ஸ் மும்பை இந்தியன்ஸ்' வெற்றி!

0

எங்கோ ஸ்விட்ச்சைத் தட்டினால் எங்கோ லைட் எரிவதை போல வான்கடேவில் மும்பை இந்தியன்ஸ் போட்டியை வெல்ல, ஹோட்டல் ரூமில் பெங்களூரு அணி வீரர்கள் துள்ளிக் குதித்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

'நீ பிளேஆஃப்ஸ் போவேன்னு யாராவது சொன்னா, நீ நம்ப வேண்டியது உன்ன இல்ல. மும்பை இந்தியன்ஸ' இரண்டு நாள்களாக இந்த மனநிலையில்தான் ஒட்டுமொத்த பெங்களூரு அணியுமே இருந்தது. பெங்களூருவின் பிளேஆஃப்ஸ் கனவை நிறைவேற்றும் வகையில் டெல்லி கேப்பிட்டல்ஸூக்கு எதிரான போட்டியை மும்பை இந்தியன்ஸ் வென்றிருக்கிறது.
Rohit - Rishabh Pant

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவே டாஸை வென்றிருந்தார். வான்கடேவில் கடந்த 5 போட்டிகளில் நான்கில் சேஸ் செய்த அணியே வென்றிருக்கிறது. இதை மனதில் வைத்து ரோஹித் சர்மா சேஸிங்கைத் தேர்வு செய்தார். ரோஹித் சேஸிங் என்று சொல்லி முடித்தவுடனேயே சாரல் அடிக்கத் தொடங்கியது. 'நல்ல சகுனம்' என ஹோட்டல் ரூமில் அமர்ந்து மேட்ச் பார்த்துக் கொண்டிருந்த பெங்களூரு ரசிகர்கள் உள்ளூற ஆனந்தம் கொண்டிருக்கக்கூடும்.

டாஸைத் தோற்று பேட்டிங் ஆட வேண்டி போனதில் ரிஷப் பண்ட் கொஞ்சம் அப்செட்தான். டெல்லி பேட்ஸ்மேன்களின் தொடக்கம் ரிஷப் பண்ட்டை இன்னுமே அதிகமாக அப்செட் ஆக வைத்தது. டெல்லி அணி பவர்ப்ளேயில் 37 ரன்களை மட்டுமே அடித்து 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 5 ரன்களில் டேனியல் சாம்ஸின் ஓவரில் வார்னர் எக்குத்தப்பாகத் தட்டிவிட்டு ஷார்ட் தேர்டுமேனிடம் கேட்ச் ஆனார். டேனியல் சாம்ஸ் தொடங்கி வைக்க அடுத்து பும்ரா மிரட்டலாக வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிட்செல் மார்ஸை முதல் பந்திலேயே டக் அவுட் ஆக்கினார். ஒரு அவுட் ஸ்விங் டெலிவரியில் எட்ஜ் ஆக்கி ஸ்லிப்பில் கேட்ச் ஆக வைத்திருந்தார்.

Bumrah

கொஞ்சம் அதிரடியாக பவுண்டரிகளையும் சிக்ஸரையும் அடித்திருந்த பிரித்திவி ஷாவுக்கு ஒரு Unplayable Bouncer-ஐ வீசி எட்ஜ் ஆக்கி கீப்பரிடம் கேட்ச் ஆக வைத்திருப்பார். பவர்ப்ளே முடிந்து, ஸ்பின்னர்கள் அறிமுகமானவுடனே சர்ஃபராஸ் கான் மார்க்கண்டேவின் பந்தில் எட்ஜ் ஆகி வெளியேறினார்.

டெல்லி அணி 50 ரன்களுக்குள்ளாகவே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்தச் சமயத்தில்தான் ரோவ்மன் பவலும் ரிஷப் பண்ட்டும் கூட்டணி அமைத்தனர். இருவரும் ஓரளவுக்கு அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் இணைந்து 75 ரன்களை அடித்திருந்தனர். ரிஷப் பண்ட் கொஞ்சம் நின்று ஆட, ரோவ்மன் பவலோ ஸ்பின்னர்களுக்கு எதிராக சிக்ஸர்களைப் பறக்கவிட்டு அதிரடியில் இறங்கினார். ஹிரித்திக்கின் ஓவரில் இரண்டு சிக்ஸர்களையும் மார்க்கண்டேவின் ஓவரில் ஒரு சிக்ஸரையும் பறக்கவிட்டிருந்தார்.

Rishabh Pant - Rovman Powell

கொஞ்சம் மெதுவாக ஆடிக்கொண்டிருந்த ரிஷப் பண்ட் ரமன் தீப்பின் கைக்குப் பந்து சென்றதும் தன் வேலையைத் தொடங்கினார். அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளையும் சிக்ஸரையும் பறக்கவிட்டார். இந்த ஓவரில் 19 ரன்கள் வந்திருந்தன. ஆனால், அதே ஓவரில் ரிஷப் பண்ட் 39 ரன்களில் அவுட் ஆனார். 19வது ஓவர் வரை நின்று ஆடிய ரோவ்மன் பவல் பும்ராவின் பந்தில் சிக்ஸரும் அடித்து அவரின் யார்க்கரிலேயே ஸ்டம்பையும் பறிகொடுத்து அவுட்டும் ஆனார். பவல் 43 ரன்களில் அவுட்டாக கடைசியில் அக்ஸர் படேல் கொஞ்சம் அதிரடி காட்ட டெல்லி அணியின் ஸ்கோர் 159 ஆக உயர்ந்தது.

மும்பை 160 ரன்களை எடுத்தாக வேண்டும். இது மும்பைக்கான டார்கெட் மட்டுமல்ல. பெங்களூரு பிளேஆஃப்ஸ் செல்வதற்கான டார்கெட்டும் கூட. 'ரோஹித் சர்மாவை பெரிதாக நம்புகிறேன்' என பெங்களூரு அணியின் கேப்டன் டு ப்ளெஸ்ஸி பேசியிருந்தார். 'கேப்டன்' ரோஹித் சர்மா அளவுக்கு பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா டு ப்ளெஸ்ஸி மற்றும் பெங்களூருவின் நம்பிக்கையைக் காப்பாற்றவில்லை. 13 பந்துகளில் வெறும் 2 ரன்களை மட்டுமே அடித்த ரோஹித் நார்க்கியாவின் ஒரு யார்க்கரில் தன் விக்கெட்டை விட்டு வெளியேறினார். கலீல் அஹமதுவின் பந்திலெல்லாம் கடுமையாகவே திணறியிருந்தார்.

பவர்ப்ளேயில் ரோஹித்தின் விக்கெட்டை இழந்து மும்பை இந்தியன்ஸ் 27 ரன்களை மட்டுமே அடித்திருந்தது.

பெரிய ஸ்க்ரீனில் மும்பையின் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த பெங்களூரு வீரர்கள் மூட்டை முடிச்சைக் கட்டலாம் என நினைத்திருக்கக்கூடும். ஆனால், கொஞ்ச நேரத்திலேயே நிலைமை மாறத் தொடங்கியது.

Dewald Brevis with de Villiers
டீவில்லியர்ஸ்தான் பெங்களூருவிற்காக ஆடி பார்த்திருப்போம். அவர் இந்த சீசனில் இல்லை. ஆனால், அவர் இல்லாத குறையை போக்கும் வகையில் ப்ரெவீஸ் மும்பை ஜெர்ஸியில் பெங்களூருவிற்காக ஆடியிருந்தார்.

குல்தீப் மற்றும் அக்ஸர் இருவரின் ஓவர்களிலுமே சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் பறக்கவிட்டார். மும்பையின் ரன்ரேட்டும் கூட தொடங்கியது. இஷன் கிஷன் - ப்ரெவீஸ் பார்ட்னர்ஷிப் அரைசதத்தைக் கடந்து மேலும் முன்னேறிக் கொண்டிருந்த போதே குல்தீப் யாதவின் பந்தில் இஷன் கிஷன் கேட்ச் ஆனார். ஒன்றிரண்டு ஓவர்கள் கழித்து ஷர்துல் தாக்கூர் வீசிய ஓவரில் ப்ரெவீஸ் 37 ரன்களில் அவுட் ஆனார். இவர்கள் இருவரும் அவுட் ஆனாலும் திலக் வர்மாவும் டிம் டேவிட்டும் நன்றாக ஆடி மும்பையை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.

Tim David
டிம் டேவிட் அதிரடியாக 11 பந்துகளிலேயே 34 ரன்களை அடித்திருந்தார். பெரிய பெரிய சிக்ஸர்களாக பறக்கவிட்டிருந்தார்.

டிம் டேவிட்டின் அதிரடி, போட்டியை மும்பைக்குச் சாதகமாக மாற்றியது. டிம் டேவிட் கடந்த சீசனில் பெங்களூருக்காகத்தான் ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நார்க்கியாவின் பந்தில் டேவிட் அவுட் ஆகியிருந்தாலும் கடைசி ஓவரில் மும்பைக்கு 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. முதல் பந்தையே கலீல் அஹமது நோ-பாலாக வீச மும்பை ரொம்பவே சுலபமாக வென்றது. பெங்களூரு பிளேஆஃப்ஸூக்கு தகுதிப்பெற்றது. டெல்லி பிளேஆஃப்ஸ் வாய்ப்பை இழந்து வெளியேறியது.

இந்தப் போட்டியை வெல்வதற்கான அத்தனை வாய்ப்புகளும் டெல்லிக்கு இருந்தன. அதையெல்லாம் கோட்டைவிட்டது அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டே.
Rishabh Pant

குல்தீப் யாதவ் வீசிய 12வது ஓவரில் இஷன் கிஷன் அவுட் ஆகியிருந்தார். அதே ஓவரில் ப்ரெவீஸூம் ஒரு கேட்ச்சை கொடுத்திருப்பார். ரொம்பவே சுலபமான அந்த கேட்ச்சை ரிஷப் பண்டே கோட்டை விட்டிருப்பார். ப்ரெவீஸ் இதன்பிறகு சில ஓவர்கள் நின்று கூடுதலாக 12 ரன்களை அடித்துவிட்டே அவுட் ஆகியிருந்தார். ஷர்துல் தாக்கூர் வீசிய 15வது ஓவரில் ப்ரெவீஸூம் அவுட் ஆகியிருந்தார். அதே ஓவரில் டிம் டேவிட் 0 ரன்னில் முதல் பந்தை எதிர்கொண்டே போதே எட்ஜ்ஜாகி ரிஷப் பண்டிடம் கேட்ச் கொடுத்தார். அம்பயர் அவுட் வழங்கவில்லை. ஆதரவேயின்றி ரிஷப் பண்ட் மட்டும் இதை அவுட் என நம்பி ரிவியூவ் எடுக்கலாமா என யோசித்தார். எந்த வீரரும் பண்ட்டுக்குத் துணையாக நிற்காததால் அவர் ரிவியூ எடுக்கவில்லை. ஆனால், ரீப்ளேவில் பந்து எட்ஜ் ஆகியிருந்தது தெளிவாக தெரிந்தது. அது க்ளியரான அவுட். ரிவியூ எடுத்திருந்தால் டிம் டேவிட் டக் அவுட் ஆகியிருப்பார். மிஸ் ஆனதால் ஒரு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸே ஆடிவிட்டார்.

Tim David

அவ்வளவு உறுதியாக நம்பும்பட்சத்தில் யாரும் துணைக்கு இல்லாவிட்டாலும் கேப்டன் என்ற முறையில் ரிஷப் பண்ட் ஆளுமையோடு அந்த ரிவியூவை எடுத்திருக்க வேண்டும். இரண்டு ரிவியூக்களை கையில் வைத்துக் கொண்டு வென்றேயாக வேண்டிய போட்டியில் டிம் டேவிட்டுக்கு ரிவியூ எடுக்கத் தயங்கிய அவரின் மனநிலையை புரிந்துக் கொள்ளவே முடியவில்லை. இந்த இரண்டு விஷயங்களையும் ரிஷப் பண்ட் சரியாகச் செய்திருந்தால் போட்டியை வெல்லும் வாய்ப்பே டெல்லிக்கு கிடைத்திருக்கும். பிளேஆஃப்ஸிற்கும் தகுதிப்பெற்றிருக்கலாம்.

ரிஷப் பண்ட் தவறுகள்

ஒவ்வொரு சீசனிலும் ஒரு போட்டியில் மட்டும் ஜெர்ஸியின் நிறத்தை மாற்றி பச்சை நிற ஜெர்ஸி அணிந்துக் கொள்வது பெங்களூருவின் வழக்கம். ஆனால், இன்று பச்சை ஜெர்ஸிக்கு பதிலாக அடர்நீல நிற ஜெர்ஸியை அணிந்துக் கொண்டு பெங்களூரு அணி மும்பைக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டிருந்தது. பெங்களூருவின் எண்ணப்படியே மும்பை வென்று பெங்களூருவிற்கு பிளேஆஃப்ஸ் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.

கடந்த இரண்டு சீசன்களிலுமே பெங்களூரு அணி பிளேஆஃப்ஸூக்குத் தகுதிப்பெற்று எலிமினேட்டர் சுற்றோடு வெளியேறியிருந்தது. இந்த முறையும் லக்னோவிற்கு எதிரான எலிமினேட்டர் சுற்றிலேயே பெங்களூரு ஆடப்போகிறது. அங்கே அந்தப் போட்டியை வென்று பெங்களூரு அடுத்தக்கட்டத்துக்கு முன்னேற வேறெந்த அணியும் அவர்களுக்கு உதவ முடியாது.

RCB
கறுப்பு சிவப்பு ஜெர்ஸியை அணிந்து கொண்டு பெங்களூருவேதான் தங்களுக்காக ஆடிக்கொள்ள வேண்டும். இந்த முறையாவது `ஈசாலா கப் நம்தே' நிஜமாகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் படிக்க MI v DC: ஆர்சிபி ஹேப்பி அண்ணாச்சி - பண்ட் தவறுகளால் `ராயல் சேலஞ்சர்ஸ் மும்பை இந்தியன்ஸ்' வெற்றி!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top