யூரோ டூர் - 41: வேலைவாய்ப்பின்மை, ஊழல், வறுமை - ஐரோப்பாவின் இருண்ட முகம் பல்கேரியாவின் பிரச்னைகள்!

0
ஹைடெக் நாடுகள் கோலோச்சும் ஐரோப்பாவின் மறு பக்கம் அதிர்ச்சிகரமான இருள் சூழந்த அவலம். மேற்கு ஐரோப்பாவின் செல்வத்துக்கும் வளர்ச்சிக்கும் கொஞ்சமும் சம்பந்தமே இல்லாமல் கிழக்கு ஐரோப்பா வறுமையில் திண்டாடிக்கொண்டு இருக்கிறது. செல்வத்திலும், கல்வியறிவிலும், தொழில்நுட்ப முன்னேற்றத்திலும், வாழ்க்கைத்தரத்திலும் மேற்கு ஐரோப்பா அசுர வேகத்தில் முன்னேறிச் செல்ல, ஆமை போலப் பின்தங்கிய நிலையில் தவிக்கிறது கிழக்கு ஐரோப்பா.

இத்தொடரின் முந்தைய அத்தியாயங்களைப் படிக்க...

யூரோ டூர் - நிழலும், நிஜமும்!

ஐக்கிய நாடுகள் சபையின் வரையறையின்படி, பெலாரஸ், பல்கேரியா, செக் குடியரசு, ஹங்கேரி, மால்டோவா, போலந்து, ருமேனியா, ஸ்லோவாக்கியா, உக்ரைன் மற்றும் ரஷ்யக் கூட்டமைப்பின் மேற்குப் பகுதி போன்ற சில நாடுகள் கிழக்கு ஐரோப்பிய எல்லைக்குள் அடங்குகின்றன. வடக்கில் பால்டிக் மற்றும் பேரண்ட்ஸ் கடல்களையும், கிழக்கில் Adriatic, Black மற்றும் காஸ்பியன் கடல்கள், காகசஸ் மற்றும் யூரல் மலைகளையும் கொண்ட கிழக்கு ஐரோப்பாவின் மேற்குப் பகுதி பெரும்பாலும் பனிப்பாறைகள் அடங்கிய சமவெளிகள்.

கிழக்கு ஐரோப்பிய நாடுகள்

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஐரோப்பா, மேற்கு ஐரோப்பா மற்றும் கிழக்கு ஐரோப்பா என இரு பகுதிகளாக இரும்புத்திரையால் பிரிக்கப்பட்டது. மேற்கிலிருந்து பிரிக்கப்பட்ட கிழக்கு ஐரோப்பா, சோவியத் ஒன்றியத்தின் கைகளில் விழுந்தது. 1991-ல் சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்தபோது, கிழக்கு ஐரோப்பாவின் எல்லையிலிருந்த அனைத்து சோவியத் குடியரசுகளும் சுதந்திரம் பெற்று ஐரோப்பாவுடன் இணைந்தன. கடந்த சில தசாப்தங்களில் கிழக்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட மாற்றங்கள் மிகப்பெரிது. இருப்பினும், இன்னும் இந்த நாடுகள் மீளமுடியாத பல பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றன. வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக மேற்கு ஐரோப்பாவையே முற்று முழுதாகச் சார்ந்து இருக்கும் இந்த நாடுகளில் பல ஐரோப்பிய ஒன்றியத்துடன் தற்போது இணைந்து கொண்டுள்ளன.

கம்யூனிசத்தின் வீழ்ச்சியும் கிழக்கு ஐரோப்பாவின் மறுமலர்ச்சியும்

கிழக்கு ஐரோப்பியப் பகுதியில் உள்ள ஒவ்வொரு நாடும் கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் இருந்தது. ரஷ்யாவின் எல்லையில் உள்ள நாடுகள் ஒரு காலத்தில் சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்தன. சோவியத் ஒன்றியத்தின் பகுதியாக இல்லாத நாடுகள் கூட அதன் மேலாதிக்க நிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டன. கம்யூனிசம் மற்றும் சோவியத் யூனியனின் சரிவு கிழக்கு ஐரோப்பாவின் எழுச்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் வழிவகுத்தது. மால்டாவியா அதன் பெயரை மால்டோவா என மாற்றியது.

செக்கோஸ்லோவாக்கியா மற்றும் யூகோஸ்லாவியா ஆகிய நாடுகள் ஒவ்வொன்றும் பல நாடுகளாக உடைந்தன. செக்கோஸ்லோவாக்கியா, செக் குடியரசு மற்றும் ஸ்லோவாக்கியா குடியரசு என்னும் இரண்டு நாடுகளாகப் பிரிந்தது. இன-தேசியவாதத்தின் எழுச்சி, தொடர்ச்சியான அரசியல் மோதல்களால் உடைந்த யூகோஸ்லாவியா மூன்று ஆண்டுகளில் ஆறு நாடுகளாகப் பிரிந்தது. போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, குரோஷியா, மாசிடோனியா, ஸ்லோவேனியா, செர்பியா மற்றும் மாண்டினீக்ரோ என்ற இந்த ஆறு நாடுகளும் இன்றுவரை வறுமையின் பிடியில் தத்தளிக்கும் ஐரோப்பாவின் சாபமாகின.

மோசமான பொருளாதார அரசியல் குழப்ப நிலைகளால் பாதிக்கப்பட்ட சில கிழக்கு ஐரோப்பிய நாடுகள் இவ்வாரம் முதல் யூரோ டூரில்...
உடைந்த யூகோஸ்லாவியா

பல்கேரியா

தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள பல்கேரியா தனது நில எல்லைகளை ருமேனியா, செர்பியா, மாசிடோனியா, கிரீஸ் மற்றும் துருக்கியுடன் பகிர்ந்து கொள்கிறது. பல்கேரியா தலைநகர் சோபியாவில் இருந்து வடக்கில் மோன்டோனா என்ற மலைகளும், பள்ளத்தாக்குகளும், நீரோடைகளும் கொண்ட அழகிய சிறு நகரம் ஒன்று உள்ளது. பல சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இங்கே பண்டைய மனிதர்கள் வாழ்ந்த குகைகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். 500 ஆண்டுகள் ஒட்டோமான் ஆட்சியின் கீழ் இருந்த பல்கேரியா, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சுதந்திரம் அடைந்து கம்யூனிசத்தை ஏற்றுக்கொண்டது. இன்று அது பாராளுமன்ற ஜனநாயக முறையோடு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக உள்ளது. கிபி 681-ல் முதலில் நிறுவப்பட்டதிலிருந்து இன்றுவரை தனது பெயரை மாற்றாத பழைமை வாய்ந்த ஒரே ஐரோப்பிய நாடு என்ற பெருமையை பல்கேரியா பெறுகிறது. இன்று கிட்டத்தட்ட முழு உலகத்தையுமே கட்டிப்போட்டிருக்கும் பிரபல ஃபேஸ்புக்கை உருவாக்கிய மார்க் சக்கர்பெர்க் பல்கேரிய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் தகவல்.

ஸ்லாவிக் மொழியான பல்கேரியன் மொழியைப் பேசும் இம்மக்களில் கிட்டத்தட்ட 94 சதவிகிதம் நாட்டின் பாரம்பரிய மதமான பல்கேரியன் இனத்தவர்கள். சிறுபான்மை மதமாக இங்கே இஸ்லாம் உள்ளது. இதில் பெரும்பாலான இஸ்லாமியர்கள் துருக்கியிலிருந்து வந்த முஸ்லிம்கள். இங்கேயும் இனப்பிரச்னை தலைவிரித்தாடுகிறது. தேசியவாத அரசியல் சமூகங்களும், அது தொடர்பான தீர்க்கப்படாத பிரச்னைகளும் பெரும்பான்மை ப‌ல்கேரிய‌ர்க‌ளுக்கும், சிறுபான்மை துருக்கிய‌ருக்கும் இடையிலான இனப்பிர‌ச்சினையாக வெடித்து இன்றுவரை அணையாமல் எரிகின்றது. துருக்கி சிறுபான்மையினர் தனிநாடு பிரித்துத் தரச் சொல்லிக் கேட்பதாகவும், அதைத் துருக்கி ஊக்குவிப்பதாகவும் பல்கேரியர்கள் கூறுகின்றனர். துருக்கிய‌ர்க‌ளோ ப‌ல்கேரிய‌ பேரின‌வாத‌ ஒடுக்குமுறை தம்மை அடிமைப்படுத்துவதாகக் கூறி வருகின்றனர்.

உலகின் மிகப்பெரிய ஒற்றைச் சந்தைப் பொருளாதாரங்களில் ஒன்றான ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து 27 நாடுகளும் பணக்கார உறுப்பு நாடுகளின் பொருளாதார செழிப்பை அடைய முடியவில்லை. பல்கேரியா அதில் ஒன்று. 1990களில் Comecon மற்றும் சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு பல்கேரியாவின் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. ஜனநாயக அரசாங்கத்தையும் சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தையும் நிறுவுவதற்கான முயற்சிகள் பல்கேரியாவின் பொருளாதாரத்தை மேலும் சீர்குலைத்தன.

பல்கேரியா

ஐரோப்பிய ஒன்றியத்தின் சராசரி வறுமை மட்டம் 23 சதவிகிதமாக இருக்கும் போது, பல்கேரியாவில் 41 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் அடங்குகின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளுள் மிக உயர்ந்த வறுமை மட்ட அபாயத்தை எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக இது உள்ளது. நாடு முழுவதும், மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 10 சதவிகிதத்தினர் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளனர்.

ஏனைய ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் ஒற்றைச் சந்தையில் செழித்து வளர்ந்தாலும், பல்கேரியா போன்ற சில ஐரோப்பிய நாடுகள் இன்னும் ஏன் ஏழ்மையில் உள்ளன?

2008ல் உருவான நிதி நெருக்கடி இன்றைய பல்கேரியாவின் வறுமைக்கு ஒரு விதத்தில் பங்களிப்பு வகித்தது. அதற்கு முந்தைய ஆண்டுகளில், பல்கேரியா ஓரளவுக்கு விரைவான வளர்ச்சியைக் கண்டாலும் 2008-ன் நிதி நெருக்கடி நிலைமையைத் தலைகீழாக மாற்றியது. 2009-ல் 5.5 சதவிகிதமாகச் சுருங்கிய பொருளாதாரம், அந்நிய நேரடி முதலீடு மற்றும் சர்வதேச வர்த்தகத்தின் சரிவுக்கு வழி வகுத்தது. இந்தப் பொருளாதார மந்தநிலை ஊதியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. பல்கேரியாவில் சராசரி ஆண்டு ஊதியம் 2,000 யூரோக்கள். சுமார் 1.5 மில்லியன் மக்கள் சராசரி ஊதியத்தில் 60 சதவிகிதத்திற்கும் குறைவாகவே வாங்குகிறார்கள். இதனால் மக்களின் அடிப்படை வாழ்க்கைத்தரம் மோசமான நிலையில் உள்ளது.

பல்கேரியா பாரம்பர்ய உடை

பல்கேரியா எதிர்கொள்ளும் மற்றுமொரு முக்கிய பிரச்னை வேலையில்லா திண்டாட்டம். பல்கேரியாவின் வேலையின்மை விகிதம் 10.8 சதவிகிதமாக உள்ளது. வேலைவாய்ப்பின் மூலம் வழங்கப்படும் குறைந்த ஊதியம் தொழிலாளர் வர்க்கம் எதிர்கொள்ளும் மற்றுமொரு முக்கிய பிரச்னை. பல்கேரியாவின் உயர்மட்ட வறுமைக்கான முதன்மைக் காரணங்களில் ஒன்றாக வேலையின்மை இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை தெரிவிக்கிறது.

மிகவும் குறைவான பிறப்பு விகிதம் பல்கேரியாவின் இன்னுமொரு பெரிய பிரச்னை. யூரோஸ்டாட்டின் புள்ளிவிபர அறிக்கையின் படி, அடுத்த 60 ஆண்டுகளில் அங்கே மக்கள் தொகை 36% குறையும் எனக் கணிக்கப்படுகிறது. நகரமயமாக்கல் என்பதும் பெரிய பிரச்னையாக உள்ளது. கலாச்சார வாழ்வு, பொருளாதார மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு எனக் கிராமத்து இளைஞர்கள் நகர்ப்புறங்களை நோக்கி நகர்வதால் பாரம்பரியம் மிக்க, இயற்கை அழகு குவிந்திருக்கும் பல்கேரியா கிராமங்கள் மனித நடமாட்டமே இல்லா பாலை பூமியாக மாறி வருகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்ததிலிருந்து பல்கேரியர்கள் மேற்கு ஐரோப்பாவை நோக்கி கூட்டம் கூட்டமாக படையெடுக்கின்றனர். Transparency International-இன் இவ்வருட The Corruption Perceptions Index (CPI) அறிக்கையின் படி உலகின் ஊழல் நிறைந்த நாடுகள் வரிசையில் பல்கேரியா 42-வது இடத்தில் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் EU நிதியிலிருந்து, 10 தேசிய திட்டங்கள் மூலம், பல்கேரியா சுமார் EUR 11.2 பில்லியன் பயனடைகிறது. இது மக்கள்தொகையில் ஒரு நபருக்குச் சராசரியாக 1,550 யூரோக்களைக் குறிக்கிறது.

பல்கேரிய நகர்ப்புற வீடுகள்
இருந்தும் முறையான அரசியல் அமைப்பு இல்லாமலும், ஊழல் நிறைந்த அரசியல் தலைவர்களாலும், இனவாத மதவாத குழுக்களின் கலகங்களினாலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏழை நாடுகளில் ஒன்றாக, மீளமுடியா வறுமையில் தத்தளித்துக்கொண்டு உள்ளது பல்கேரியா.

யூரோ டூர் போலாமா?!


மேலும் படிக்க யூரோ டூர் - 41: வேலைவாய்ப்பின்மை, ஊழல், வறுமை - ஐரோப்பாவின் இருண்ட முகம் பல்கேரியாவின் பிரச்னைகள்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top