24 ஆண்டுகளாக, போலீஸிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்த குற்றவாளி ஒருவர், ஒடிசாவில் தனது சொந்த கிராமத்திலேயே போலீஸிடம் பிடிபட்டார்.
தற்போது 42 வயதாகும் சங்கர் பிஸ்வால் எனும் இந்த குற்றவாளி, ஒடிசாவின் கஞ்சம் மாவட்டம் கல்லிகோட் காவல் நிலையப் பகுதியில் உள்ள துளசிபூர் எனும் கிராமத்தில், கடந்த செவ்வாயன்று தனது குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்றபோது, தங்களுக்குக் கிடைத்த ரகசிய தகவலின்படி போலீஸார் அவரைப் பிடித்தனர் என காவல்துறை கண்காணிப்பாளர் பிரிஜேஷ் ராய் கூறியுள்ளார். சங்கர் பிஸ்வால் மீதுள்ள குற்றங்கள் குறித்து பேசிய பிரிஜேஷ் ராய், ``1998-ல் 2 கொலைகள், 10 கொலை முயற்சிகள் மற்றும் ஒரு திருட்டு வழக்கு உட்பட குறைந்தது 13 வழக்குகளில் அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்" எனக் கூறினார்.

மேலும் இதுகுறித்து பேசிய எஸ்.பி, ``சங்கர் பிஸ்வாலை பிடிக்கப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், ஒவ்வொருமுறையும் அவர் போலீஸிடமிருந்து தப்பிப்பதில் ஜெயித்துவிட்டார். அவரைக் கைதுசெய்யக் கேரளாவுக்கும் தனிக் குழு அனுப்பியிருந்தோம். இருப்பினும், அவர்களால் அந்த இலக்கை அடையமுடியவில்லை" எனத் தெரிவித்தார்.
பின்னர் சங்கர் பிஸ்வால் பற்றி கூறிய கல்லிகோட் காவல்நிலைய பொறுப்பு ஆய்வாளர் ஜெகநாத் மல்லிக், சங்கர் பிஸ்வால் கடந்த 24 வருடங்களில் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, சூரத் மற்றும் கேரளா ஆகிய நகரங்களில் கூலி வேலை செய்ததாகவும், அவருக்குத் திருமணமாகி 3 குழந்தைகள் இருப்பதாகவும் கூறினார்.
மேலும் படிக்க ஒடிசா: 5 மாநிலங்களில் தலைமறைவு வாழ்க்கை... 24 ஆண்டுகளுக்குப்பின் போலீஸிடம் சிக்கிய கொலை குற்றவாளி