ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி... நடப்புச் சூழலில் அதிமுக சட்டவிதிகள் யாருக்குச் சாதகம்?

0

``ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான அதிகாரம் வழங்கும் சட்டத் திருத்தத்துக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாததால், அந்தப் பதவிகள் தானாகவே காலாவதியாகிவிட்டன. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தற்போது அதிமுகவில் இல்லை'' என ஒரு சரவெடியை பற்றவைத்திருக்கிறார், முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். ஆனால், `` கட்சி விதிகளைப் பற்றி அவர் கவலைப்படட்டும். அதை எங்கள் சட்ட வல்லுநர் குழு பார்த்துக்கொள்ளும்'' என ஓ.பி.எஸ்.ஆதரவாளரான ஜே.சி.டி பிரபாகர் அவருக்குப் பதிலடி தர, அடுத்தடுத்து என்ன நடக்கும் என அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு கூடியிருக்கிறது.

அதிமுக பொதுக்குழு

கடந்த ஜூன் 14-ம் தேதி, அதிமுக பொதுக்குழு தொடர்பாக விவாதிக்க நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பற்றவைக்கப்பட்ட ஒற்றைத் தலைமை தீப்பொறி பற்றியெரிந்து கொண்டிருக்கிறது. கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கும் ஆதரவாகக் களமிறங்கி பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமைக்கான தீர்மானம் நிறைவேற்றத் தயாராக, ஏற்கெனவே பேசிமுடிவெடுக்கப்பட்ட 23 தீர்மானங்களைத் தவிர வேறு எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்றக் கூடாது என ஓ.பி.எஸ் தரப்பு நீதிமன்றத்தில் தடை வாங்கியது.

தொடர்ந்து, கடந்த 23-ம் தேதி, வானகரம் ஶ்ரீவாரு திருமண மண்டத்தில், ஏற்கெனவே பேசி முடிவெடுக்கப்பட்ட 23 தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரிப்பதாக அறிவித்தார் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். தொடர்ந்து, ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு இந்தத் தீர்மானங்கள் சேர்த்து நிறைவேற்றப்படும் என்றார். பொதுக்குழு வரும் ஜூலை 11-ம் தேதி நடைபெறும் எனவும் அப்போதே அறிவிக்கப்பட்டது. பொதுக்குழுக் கூட்டத்தில், ஆரம்பம் முதலாகவே ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராகக் கடுமையான முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. அவர் பேசும்போதும் கூச்சல் குழப்பங்கள் நிலவியது.

தவிர, இரட்டைத் தலைமையை ரத்து செய்யவேண்டும் என சி.வி.சண்முகம், பொதுக்குழு உறுப்பினர்களின் சார்பாக ஒரு கோரிக்கையை வைக்க, ஓ.பி.எஸ் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட நிர்வாகிகளும் வெளியேறினர். ஓ.பி.எஸ் வெளியேறும்போது சிலர் வாட்டர் பாட்டில்களை வீசும் காட்சிகளையும் தமிழ்நாடு கண்டது.

இந்தநிலையில், நேற்று முந்தினம்(23-06-2022) இரவே டெல்லி புறப்பட்டுச் சென்றார் ஓ.பி.எஸ். அவர் தேர்தல் ஆணையத்தில் பொதுக்குழுவில் நடைபெற்ற விஷயங்கள் குறித்து முறையிடப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை என மறுப்புத் தெரிவித்திருக்கிறார் ஓ.பி.எஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம். இந்தநிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி.சண்முகம், ``2017-ம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வத்துக்காக அதிமுக விதியில் திருத்தம் செய்யப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தற்போது அதிமுகவின் பொருளாளர். எடப்பாடி பழனிசாமி இந்த இயக்கத்தின் தலைமைக் கழகச் செயலாளர் அவ்வளவுதான். அதிமுக-வை பிளவுபடுத்தி, இரட்டை இலைச் சின்னத்தை முடக்கியவர் ஓ.பி.எஸ். அதிமுக சட்டவிதிகளை மாற்றவோ திருத்தவோ பொதுக்குழுவுக்கு தான் அதிகாரம் இருக்கிறது'' எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.

அதிமுக பொதுக்குழு

இந்தநிலையில், ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரில் அதிமுகவின் சட்டவிதிகள் தற்போது யாருக்குச் சாதகமாக இருக்கிறது என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாமிடம் பேசினோம்,

``2017 செப்டம்பரில் ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. சமீபத்தில் அதைத் திருத்தம் செய்து அடிப்படை உறுப்பினர்களால் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதற்கு செயற்குழு ஒப்புதல் அளித்துவிட்டது. ஆனால், பொதுக்குழு இன்னும் ஒப்புதல் தரவில்லை. அதனால், அனைத்துப் பதவிகளும் காலாவதியாகிவிட்டது என சி.வி.சண்முகம் கூறுகிறார். அது தவறான கருத்து. முதல்முறை இருவரும் தேர்தெடுக்கப்படும்போதே ஐந்தாண்டுகளுக்கு பதவிக்காலம் இருக்கும் வகையில்தான் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்தவகையில், 2022 செப்டம்பர் வரைக்கும் அவர்களுக்கான பதவிக்காலம் இருக்கிறது.

பொதுக்குழு என்றால் கொள்கை, ஒப்புதல், அவரசகாலத்தீர்வு இந்த மூன்று விஷயங்கள் இருக்கவேண்டும் என்றுதான் சட்டமே சொல்கிறது. அந்தவகையில் தற்போது நடந்து முடிந்தது பொதுக்குழுவே அல்ல. அதை இரு தரப்பும் ஏற்றுக்கொள்கிறது. அதேவேளை தமிழ்மகன் உசேனை நிரந்தர அவைத்தலைவராகத் தேர்ந்தெடுத்தது செல்லும் என சி.வி.சண்முகம் சொல்கிறார். ஆனால், பொதுக்குழுவே நிலைக்கத்தக்கது அல்ல என்கிறபோது இந்தத் தேர்வு என்பதும் செல்லாது. பழைய சட்டதிட்டங்கள்தான் தற்போது நடைமுறையில் இருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் இணையதளங்களிலும்கூட அதுதான் இருக்கிறது. இந்தநிலையில், அது காலாவதியாகிவிட்டது என்று சொன்ன சி.வி.சண்முகம் , கட்சியின் கட்டுப்பாட்டை மீறினார் என்று சொல்லி ஓ.பி.எஸ் தரப்பு அவரைக் கட்சியை விட்டு நீக்க வாய்ப்பிருக்கிறது. கட்சிக்கு எதிராக நீதிமன்றம் சென்றார், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தினார் என இ.பி.எஸ் தரப்பு ஓ.பி.எஸ்ஸை நீக்குவார்கள். இனி இந்தக் காட்சிகளைத்தான் தமிழ்நாடு பார்க்கப்போகிறது.

தராசு ஸ்யாம்

உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சில் பென்டிங்கில் இருக்கும் இந்த விவாகரங்களை தேர்தல் ஆணையத்துக்குக் கொண்டு போகமுடியாது. அதனால், ஓ.பி.எஸ் தேர்தல் ஆணையத்துக்குச் செல்வதற்கு வாய்ப்பில்லை. கட்சியின் சட்டவிதிகள் ஓ.பி.எஸ்ஸுக்குச் சாதகமாக இருக்குமா, இ.பி.எஸ்ஸுக்குச் சாதகமாக இருக்குமா என்று நாம் சொல்லமுடியாது. விதிகளின் ஒருசில பகுதிகளை எடுத்துக்கொண்டு இரு தரப்புமே தங்களுக்குச் சாதகமாக காய்களை நகர்த்தும். தேர்தல் ஆணையமும் கட்சியின் பை லாவை வைத்து எந்த முடிவுகளையும் எடுக்காது. எம்.எல்.ஏ, எம்.பிக்களின் எண்ணிக்கை, பொதுக்குழு, செயற்குழுவின் பெரும்பான்மை உள்ளிட்ட விஷயங்களை வைத்துதான் முடிவெடுக்கும். இனிவரும் காலங்களில், பொதுக்குழுவுக்கான முயற்சிகளை இ.பி.எஸ் தரப்பு எடுத்தால், ஓ.பி.எஸ் தரப்பு நீதிமன்றம் சென்று தடை வாங்குவார்கள். மாறி மாறி கட்சியைவிட்டு நீக்குவார்கள்'' என்றார்.


மேலும் படிக்க ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி... நடப்புச் சூழலில் அதிமுக சட்டவிதிகள் யாருக்குச் சாதகம்?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top