தமிழ்த் திரையுலகின் கலர்புல் காதல் ஜோடியான நடிகை நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இன்னும் சில மணிநேரங்களில் திருமணம் நடைபெறவிருக்கிறது.
7 வருடங்களாகக் காதலித்து வந்த இருவரும் நாளை திருமண வாழ்வைத் தொடங்குகின்றனர். விக்னேஷ் சிவன் ஜூன் 7 -ம் தேதி அன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தித் தனது திருமணம் குறித்து அறிவித்தார். ஆரம்பத்தில் தங்கள் திருமணத்தை விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியினர் திருப்பதியில் நடத்தத் திட்டமிட்டனர். ஆனால், அதன் பின்னர் சென்னை மகாபலிபுரத்தில் திருமணத்தை நடத்துவதாக முடிவுசெய்தனர். இந்நிலையில், சமூக வலைதளங்களில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணப் பத்திரிக்கை, ரௌடி பிக்சர்ஸ் சார்பில் வாட்டர் பாட்டில்கள் என மண விழா குறித்த அப்டேட் குவியத் தொடங்கியிருக்கிறது.

அந்தத் திருமண அழைப்பிதழில் 'எத்னிக் பேஸ்டல்' திருமணத்திற்கான தீம்மாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமணத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக் கான், கமல்ஹாசன், அஜித், சிரஞ்சீவி, சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, அனிருத் ரவிச்சந்தர், நெல்சன் திலீப்குமார், சமந்தா ரூத் பிரபு உள்ளிட்ட பலர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க Nayanthara - Vignesh Shivan: தொடங்கியது திருமணக் கொண்டாட்டம்; பங்கேற்கும் பிரபலங்கள்!