அதிமுகவின் பின்னடைவுக்கு இரட்டைத் தலைமைதான் காரணமா... உண்மை என்ன?!

0

`அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வந்தால் இன்னும் சிறப்பாக செயல்படமுடியும். இரட்டைத் தலைமை இருப்பதால்தான் முடிவுகளை துரிதமாக எடுக்கமுடியவில்லை. 2019 நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரைக்கும் கட்சியின் தோல்விக்கு இரட்டைத் தலைமைதான் காரணம்' என அ.திமுகவின் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் தொடங்கி வட்டச் செயலாளர்கள் வரை கடந்த பத்து நாள்களுக்கும் மேலாக கோரஸாக முழங்கி வருகின்றனர். கடந்த 23-ம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த பொதுக்குழுக்கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னணித் தலைவர் சி.வி.சண்முகமும்,

அதிமுக பொதுக்குழு

``ஆளும் திமுக அரசையும், திமுகவையும் பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் நாம் எதிர்த்துச் செயல்பட முடியாத நிலை உள்ளது. இதனால் கழகத் தொண்டர்கள் நிர்வாகிகளிடையே மிகுந்த ஏமாற்றமும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இரட்டைத் தலைமையின் முரண்பாடான செயல்பாட்டால் தொண்டர்களிடையே மிகுந்த சோர்வு ஏற்பட்டுள்ளது. நூறு ஆண்டு காலம் ஆனாலும் அதிமுக நிலைத்து நின்று மக்கள் பணியாற்றும் என்ற ஜெயலலிதா ஆசை நிறைவேற்றப்பட வேண்டுமென்றால், ஜெயலலிதாவைப் போன்று வலிமையான ஒற்றைத் தலைமை ஏற்படுத்தப்பட வேண்டும். எனவே இந்த பொதுக்குழுவில் இரட்டை தலைமையை ரத்து செய்துவிட்டு பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமைக்குத் தொண்டாற்றுவது சம்பந்தமாக விவாதித்துப் பதிவு செய்ய வேண்டும்'' என்கிற கோரிக்கையை கட்சியின் அவைத்தலைவருக்கு முன்வைத்திருந்தார்.

உண்மையில் அ.தி.மு.கவின் தேர்தல் தோல்விகளுக்கும் கட்சியின் பின்னடைவுகளுக்கும் இரட்டைத் தலைமைதான் காரணமா?

மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாமிடம் பேசினோம்,

``எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற வசீகரத் தலைமை இல்லாததால், இரட்டைத் தலைமை, ஒற்றைத் தலைமை என்பதில் பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது. வெறும் ஒற்றைத் தலைமை மட்டுமே அதிமுக_வுக்கு ஒரு பிரமாண்டமான பிம்பத்தை நிச்சயமாகக் கொடுத்துவிடாது. ஆனால், ஆளுக்கு ஒரு அறிக்கை விடுவது, ஆளுக்கு ஒரு நிலைப்பாடு எடுப்பது, கட்சி இரண்டு கோஷ்டியாக இருப்பது உள்ளிட்ட சிக்கல்கள் ஒற்றைத் தலைமையாக மாறும்போது தவிர்க்கப்படும். அதிமுக-வின் பின்னடைவுக்கு இரட்டைத் தலைமைதான் காரணம், அதை மாற்றினால் கட்சி வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்பதையெல்லாம் இப்போது நாம் கணிக்கமுடியாது. தேர்தல் தோல்விக்கும் பத்தாண்டு கால அதிமுக ஆட்சி மீதான அதிருப்தி, அவர்கள் எடுத்த தவறான முடிவுகள், தி.மு.க கூட்டணியின் பலம் உள்ளிட்ட பல காரணிகள் இருக்கின்றன. இரட்டைத்தலைமை மட்டுமே அதற்குக் காரணம் என்பதை ஏற்கமுடியாது.'' என்கிறார்.

தராசு ஷ்யாம்

மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லஷ்மணன் பேசும்போது,

``இரட்டைத் தலைமை மிகச் சரியாக செயல்படுகிறது என ஜூன் எட்டாம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கருத்துத் தெரிவிக்கிறார். இரு அணிகள் இணைந்த நாள்முதல் இரட்டைத் தலைமை இரட்டைக் குழல் துப்பாக்கியாகச் செயல்படுகிறது என்றார்கள். ஆனால், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி, அப்போதே நடந்த இடைத் தேர்தலில் பாதிக்குப் பாதி கூட ஜெயிக்கமுடியவில்லை. 23 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மையாக திமுக-தான் வெற்றி பெற்றது. சட்டமன்றத் தேர்தலிலும் பெரிய வெற்றி இல்லை. ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்புற உள்ளாட்சித் தேர்தல்களில் அதிமுக வரலாற்றில் சந்திக்காத ஒரு தோல்வி என இரட்டைத் தலைமையாகச் சந்தித்த ஒரு தேர்தலில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதற்கெல்லாம் இரட்டைத் தலைமை மட்டும்தான் காரணம் என்பது சொத்தையான வாதம்.

அதுமட்டுமே காரணம் என ஒரு வாதத்துக்கு வைத்துக்கொண்டாலும், இரட்டைத் தலைமையில் ஒரு தலைமையாக இருந்த எடப்பாடி பழனிசாமியும்தான் அந்தத் தோல்விகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். அப்படித் தோல்விக்குக் காரணமாக இருந்த ஒருவர் தலைமைப் பொறுப்புக்கு வந்து அவர் வெற்றிப்பாதையில் கட்சியை அழைத்துச் செல்வார் என்பதை எப்படி ஏற்கமுடியும். எல்லோரும் இரட்டைத்தலைமை வேண்டாம் என்றபோது தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள, ஆட்சி அதிகாரத்தை அனுபவிக்க இரட்டைத் தலைமையைக் கொண்டு வந்தார்கள். ஆனால், ஆட்சி அதிகாரம் இல்லை என்பதால், கட்சியில் முழு அதிகாரம் தனக்கு வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். இது முழுக்க முழுக்க சர்வாதிகாரம்.

எஸ்.பி.லட்சுமணன்

அ.தி.மு.கவின் தலைமைப் பொறுப்புக்கு எடப்பாடி பழனிசாமி வரக்கூடாது என்று சொல்ல நமக்கு எந்த அதிகாரமும் இல்லை. அது அவர்களின் கட்சி விவகாரம். ஆனால், கட்சியின் ஒற்றைத் தலைமையாக வரநினைக்கிற எடப்பாடி பழனிசாமிக்கு, எனக்கு இந்தத் திறமை இருக்கிறது எனச் சொல்லிக்கொள்ள ஒரு விஷயமும் இல்லை. இது ஒருபுறமிருந்தாலும், கட்சியில் தனக்கு இருக்கிற அதிகார பலத்தால், அவர் நினைக்கிற தீர்மானத்தைக்கொண்டு வரமுடியும். ஓ.பி.எஸ்ஸை தூக்கியெறிய முடியும். ஆனால், தொண்டர்கள் அதை ரசிக்க மாட்டார்கள், வரவேற்க மாட்டார்கள். நீடித்த ஆதரவு அவர்களிடம் இருந்து கிடைக்காது. இது எல்லாவற்றையும்தாண்டி தலைமைப் பொறுப்புக்கு எடப்பாடி பழனிசாமி வந்தபிறகு சர்வாதிகாரியாக செயல்படாமல், ஏற்கெனவே பலரும் சுட்டிக்காட்டியபடி, ஒரு உயர்மட்டக்குழுவை அமைத்து, அந்தக்குழுவுக்கு முழுஅதிகாரம் கொடுத்து, அவர்களின் அறிவுரைப்படி நடந்தால் ஒருவேளை அதிமுக வெற்றியை நோக்கிப் பயணிக்கலாம். ஆனால், தான் மட்டுமே எல்லாம் என எடப்பாடி பழனிசாமி நினைத்தால் அதிமுக-வின் அழிவு வெகுதூரத்தில் இல்லை'' என்கிறார்.

வைகைச்செல்வன்

இந்த விவகாரம் குறித்து, அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வனிடம் பேசினோம்,

``ஒரு உடம்புக்கு ஒரு தலைதான் இருக்கவேண்டும். இந்தியா முழுவதும் எந்தக் கட்சியிலும் இரட்டைத் தலைமை என்பது இல்லை. தேர்தல் தோல்விகளுக்கும் நாம் இரட்டைத் தலைமையைக் காரணம் சொல்லமுடியும். உதாரணமாக சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் தேர்தல் பல்வேறு குளறுபடிகள் நடந்திருக்கின்றன. இ.பி.எஸ் மாஸ் லீடராக வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காக ஓ.பி.எஸ் தரப்பில் சில நெருக்கடிகளைக் கொடுத்தனர். கூடுதலாக இருபது, முப்பது தொகுதிகளின் தோல்விக்கு அது காரணமாக இருந்தது. ஒற்றைத் தலைமை வந்து துணிச்சலான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். பொய்வழக்குகளை துணிந்து நின்று கேள்வி எழுப்பவேண்டும். அதைச் செய்தால் கட்சி வளர்ச்சிப் பாதையில் நிச்சயமாகப் பயணிக்கும்'' என்கிறார் நம்பிக்கையாக.


மேலும் படிக்க அதிமுகவின் பின்னடைவுக்கு இரட்டைத் தலைமைதான் காரணமா... உண்மை என்ன?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top