மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பயோபிக் எடுத்தால் நடிப்பதற்குப் பொருத்தமானவர் யார்? டைட்டில் என்ன வைக்கலாம்?
‘ஸ்கிரிப்ட்ல இல்லாத வசனத்தைப் பேசக் கூடாது’ என்ற நிபந்தனையுடன் ராதாரவியை நடிக்க வைக்கலாம். சூப்பரா செட் ஆவார்!
படத் தலைப்பு: ‘மெல்லிசையே’
ஹெச்.உமர் பாரூக்
எம்.எஸ்.பாஸ்கர்! இனிஷியல்ஸ் பொருந்துவது போல நடிப்பும் கனகச்சிதமாகப் பொருந்தும்.
டைட்டில்: இசைப் பறவை
இரா.வசந்தராசன்
நடிகர் பிரபு பொருத்தமா இருப்பார். ‘மெல்லிசைப் பாட்டு' என டைட்டில் வைக்கலாம்!
எம்.சேவியர் பால்
நடிகர் ராஜேஷ் பொருத்தமாக இருப்பார்.
டைட்டில்: சம்போ சிவ சம்போ
ஜெ.ஜான்சி சுப்புராஜ்
நாசர் நல்ல சாய்ஸ்.
டைட்டில்: இசையின் மகன்
manipmp
தெலுங்கு காமெடி நடிகர் பிரம்மானந்தம். மெல்லிசை மன்னரே பொருத்தமான டைட்டில்.
pudukairavi
சியான் விக்ரம். டைட்டில்: இசையால் வசமாகும் இதயமே...
krishmaggi

‘ரெண்டும் ஒண்ணுக்கொண்ணு சளைச்சது இல்ல’ என சமீபத்தில் உங்களை யோசிக்க வைத்த நிகழ்வு எது?
ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவரில்லை என அ.தி.மு.க தலைமைப் பதவிக்குப் போடும் சண்டையை விடவா வேறொரு சுவாரஸ்யமான நிகழ்வு இருந்துவிடப்போகிறது!
ப.சோமசுந்தரம்
ஆமை ஓட்டைத் திருப்பிப் போட்டுப் படகாகப் பயன்படுத்தினேன் என்று சொன்ன சீமானும், வீட்டுக்கு முதலைக்குட்டியைத் தூக்கிட்டு வந்துவிட்டேன் என்று சொன்ன மோடியும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை!
A.ஆசிக் ஜாரிஃப்
மத்திய அரசின் அக்னிபத்தும், தமிழக அரசின் தற்காலிக ஆசிரியர் நியமனமும்!
வி.சி.கிருஷ்ணரத்னம்
இழுஇழுன்னு இழுத்துக்கிட்டே போறதில்... ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷனும், மெகா சீரியலும்!
LAKSHMANAN_KL
மகாராஷ்டிரா தேர்தலில் பா.ஜ.ககூட கூட்டணி வைத்து ஜெயித்து பின் காங்கிரஸ் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்த சிவசேனாவும், அதை இரண்டரை ஆண்டுகளில் கவிழ்த்த பா.ஜ.கவும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை!
umarfarook
தமிழக அரசின் கடன் அளவை அதிகமாக்குவதில் முந்தைய அ.தி.மு.க ஆட்சியும், இப்போதைய தி.மு.க ஆட்சியும்... ரெண்டும் ஒண்ணுக்கொண்ணு சளைத்தது இல்ல.
amuduarattai
தலயின் வலிமையும், தளபதியின் பீஸ்ட்டும்!
pbukrish

காங்கிரஸ் மொழிபெயர்ப்பாளர் தங்கபாலுவும் பா.ஜ.க மொழி பெயர்ப்பாளர் ஹெச்.ராஜாவும் சந்தித்தால் என்ன பேசிக்கொள்வார்கள்?
தங்கபாலு: நான் பயங்கரமா மொழிபெயர்ப்பேன்.
ஹெச்.ராஜா: என் மொழிபெயர்ப்பே பயங்கரமா இருக்கும்.
எஸ்.இராஜேந்திரன்
தங்கபாலு: Hi Raja, I'm தங்கபாலு from Tamilnadu. How Are you?
ஹெச்.ராஜா: என்னது, தமிழ்நாட்டு ராஜாக்கள் காலத்துத் தங்கம் எல்லாம் திருடு போச்சா?
மு.ஸ்ரீராம்
தங்கபாலு: நாட்டுல மொழிக்காகப் போராடுறாங்க!
ஹெச்.ராஜா: நாம போராடி மொழிபெயர்க்கிறோம்!
டி.ஜெயசிங்
ஹெச்.ராஜா: கோல்டன் பால்ஜீ, இனிமேல் இந்தமாதிரி மொழிபெயர்க்கிற வேலைக்கெல்லாம் என்னைக் கூப்பிடாதீங்கன்னு அண்ணாமலை கிட்ட ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டேன்.
தங்கபாலு: ஏன்?
ஹெச்.ராஜா: பின்ன என்ன? வர்ற எல்லா தலைவர்களும் ‘‘அடுத்து ‘கமல்’ முதல்வராய் வந்தே தீருவார்’’ன்னு பேசறாங்க. கூட்டத்தில எல்லாரும் பேசினவங்களை முறைக்காம என்னை முறைக்கிறாங்க.
பத்மநாபன்
தங்கபாலு: உங்க டிரான்ஸ்லேஷன் சூப்பர். இவ்வளவு கச்சிதமா யாரும் டிரான்ஸ்லேஷன் பண்ண முடியாது.
ராஜா: அப்படியா! எதை வைச்சி அப்படிப் பாராட்டுறீங்க?
தங்கபாலு: எலக்ஷன் ஃபண்டை ஹவுஸ் பில்டிங் ஃபண்டா டிரான்ஸ்லேஷன் பண்ணீங்களே, அதைச் சொல்றேன்!
ப.த.தங்கவேலு
ஹெச்.ராஜா: தமிழ்நாட்டுக்கு வர்றப்ப ராகுலிடம் இந்தில பேசச் சொல்லுங்க.
தங்கபாலு: ஏன்?
ஹெச்.ராஜா: ஆங்கிலத்துல பேசறதினாலதான் நீங்க பண்ற தப்பான மொழிபெயர்ப்பைக் கண்டுபிடிச்சுடறாங்க. எங்களைப் பாருங்க... மோடி என்ன பேசறார்னு மக்களுக்குப் புரியாது. நான் என்ன மொழிபெயர்க்கிறேன்னு மோடிக்குப் புரியாது.
அஜித்
தங்கபாலு: நீங்க இப்போ என்னவாக இருக்கீங்க?
ராஜா: வருங்கால கவர்னரா இருக்கேன்.
ஆ.மாடக்கண்ணு
மழை - தேநீர் - மிளகாய் பஜ்ஜி போல குளிர்காலத்துக்கு ஒரு காம்போ சொல்லுங்கள்!
பெப்பர் தூக்கலா போட்டு ஆம்லெட்- ஸ்ட்ராங் காபி.
அ.ரியாஸ்
சிக்கிம் போன்ற மலைப் பகுதிகளில் சாப்பிட்ட மோமோஸும் அந்தச் சின்ன சிவப்பு மிளகாய்ச் சட்னியும். வேண்டுமானால் நம்ம ஊட்டி மீல்மேக்கர் ஃபிரையும்.
முன்னா
மசாலா மூவி-கடலைப் பக்கோடா.
சத்தியமூர்த்தி.G
குளிர் - மீன்குழம்பு - மரவள்ளிக்கிழங்குக் கூட்டு.
கோவில்பட்டி கணேசன்
குளிரில் நல்ல கம்பளி ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு மிதமான சூட்டில் நெய்ப் பொங்கல். தொட்டுக்கொள்ள தக்காளிச் சட்னி இருந்தால் சூப்பர்.
மனோகர்
சுடச்சுட பிரியாணியும் சில்லி சிக்கனும்!
நா.இரவீந்திரன்
அவிச்ச வேர்க்கடலையும், பிடிச்சவங்களோட கடலையும்...
maha40176220
சூடான வெங்காய சமோசா, புதினா டீ.
balebalu
சிக்கன் 65+ஆட்டுக்கால் சூப்.
NatarajanAS2
என்ன காம்போவா இருந்தாலும், ஆபீஸ்ல லீவு எங்கண்ணே கிடைக்குது? அதை அனுபவிக்க...
prasannarajarao
ஆட்டுக்கால் சூப், ஆம்லெட்.
NedumaranJ
நாட்டுக்கோழிக் குழம்பு + நாட்டுக்கோழி பெப்பர் ஃபிரை + சுடச்சுட சாப்பாடு... ப்ப்ப்பா!
lollumanix
கிரிக்கெட்டில் இந்த டபுள் சைடு ஆடுபவர்களின் அட்ராசிட்டீஸ் பிளீஸ்!
பந்து போட கையை உயர்த்திய பின், பொசிஷன் மாத்துனா, டென்ஷன் ஆகி லூஸ் பால் போடுவாங்கங்குற நப்பாசை.
ஸ்வாதி சுசீ
ராதாரவி பா.ஜ.க-ல பேசற மாதிரிதான் டபுள் சைடு ஆடறவனுங்க ஆக்டிவிட்டிஸ் இருக்கும்! சிக்ஸ் அடிச்சாலும் கை தட்டுவானுங்க. விக்கெட் விழுந்தாலும் விசில் அடிப்பானுங்க. யார்றா நீங்க எல்லாம்?!
சிவம்
அரசியலில் ஓ.பி.எஸ் போல், தான் எந்த டீமுக்கு விளையாடுகிறோம் என மர்மமாக வைத்திருப்பதே டபுள் சைடு ஆடுபவர்களின் மாபெரும் அட்ராசிட்டி!
ரிஷிவந்தியா
சிங்கிள் ரன் எடுக்க ஓடமாட்டார்கள். அடித்தால் 4, 6 தான் என நின்றுகொண்டு மட்டையைப் போட்டுக்கொண்டே எல்லா பந்தையும் வீணடிப்பார்கள்.
IamUzhavan
பெளலிங் கிடைக்காது. ஆனால் பெளலரிடம் போய் ‘சொடுக்குப்பால் போட்டால் அவுட்டாகிவிடுவான்’னு ராக்கெர்ஸ் ரகு மாதிரி அட்வைஸ் பண்ணுவாங்க!
urs_venbaa
டபுள் சைடு ஆடுறவன்தான் ஓப்பனிங் ஆடணும் அப்படின்னு அடம் பிடிக்கிறது...
sasitwittz

1. அண்ணாமலையே சினிமாவில் நீச்சல் பயிற்சியாளராக நடித்துவிட்டார். மற்ற பா.ஜ.க தலைவர்கள் ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் போன்றவர்கள் சினிமாவில் நடிப்பது என்றால் என்ன கேரக்டர்களில் நடிக்கலாம்?
2. ஒரே நடிகர் முழுப்படம் நடிப்பது, சிங்கிள் ஷாட் சினிமாவுக்கு அடுத்து தமிழ் சினிமாவில் என்ன புதுமையான முயற்சி செய்யலாம்?
3. வட இந்தியர்களுக்கும் தென்னிந்தியர்களுக்கும் முக்கியமான வித்தியாசங்கள் என்ன?
4. சினிமாக்காரர்கள் பேட்டியில் உங்களுக்குப் புரியாத விஷயம் எது?
5. தனியார் பள்ளிகள் எந்த விஷயத்தை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!
உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :
வாசகர் மேடை, ஆனந்த விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை 600 002.
இ-மெயிலில் அனுப்ப: vasagarmedai@vikatan.com
மேலும் படிக்க வாசகர் மேடை: “வருங்கால கவர்னரா இருக்கேன்!”