உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவில் உள்ள தர்மபுரா கால்வாய் பகுதிக்கு, முபீன் அஹமது என்ற இஸ்லமைய நபர் மாடுகளுக்கு புல் எடுப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது ஒரு குழுவினர் 'ஜெய் ஸ்ரீ ராம்', 'பாரத் மாதா கி ஜெய்' கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
அவர்களைக் கடந்து போன முபீன் அஹமதை தேச விரோதி எனவும், உதய்பூர் கன்ஹையா லாலை கொலை செய்த குற்றவாளி எனவும் அழைத்து 'ஜெய் ஸ்ரீ ராம்', 'பாரத் மாதா கி ஜெய்' என கோஷமிட கட்டாயப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தை அந்த கும்பல் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர்.

இதனிடையே, முபீன் தன்னை தாக்கியவர்கள் முன்வைத்த எந்தவொரு கோரிக்கையையும் எதிர்க்கவில்லை. அவர்கள் மீது புகாரளிக்கவுமில்லை. ஆனால், அவர்கள் சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டதை அறிந்த பின்பே, மதுரா நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மதுரா நகர் உயர் அதிகாரி அபிஷேக் யாதவ், "முபீன் அஹம்து-வின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகச் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. குற்றவாளிகளில் ஒருவரான ஜிதேந்திரா கைது செய்யப்பட்டுள்ளார். மதுரா மாவட்டத்தின் அமைதியைச் சீர்குலைக்க எவரையும் காவல்துறை அனுமதிக்காது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க உ.பி: இஸ்லாமியரை 'ஜெய் ஸ்ரீ ராம்’ என கோஷமிட கட்டாயப்படுத்திய கும்பல் - ஒருவர் கைது