கே.இ.சி இன்டர்நேஷனல் லிமிடெட்! (BSE CODE: 532714, NSE SYMBOL: KEC)

0

இந்த வாரம் நாம் பார்க்கப்போகும் நிறுவனம் ஆர்.பி.ஜி குழுமத்தைச் சார்ந்த நிறுவனமான கே.இ.சி இன்டர்நேஷனல் லிமிடெட்.

நிறுவனத்தின் வளர்ச்சி...

1945-ம் ஆண்டில் ஹாலோவேர்கள் (Hollowware) உற்பத்தி செய்தல், எனாமல் பூசுதல் மற்றும் வர்த்தகம் செய்வதற்காக ஆரம்பிக்கப் பட்டது இந்த நிறுவனம். இன்றைக்கு மும்பையில் தலைமையகத்தைக் கொண்டு கிட்டத்தட்ட ரூ.13,742 கோடி (2021-22 நிதி ஆண்டின் இறுதி நிலவரப்படி) என்ற அளவில் வர்த்தகம் செய்துவரும் பவர் டிரான்ஸ்மிஷன் மற்றும் டிஸ்ட்ரிப்யூஷன், ரயில்வே, சிவில், நகர்ப்புற கட்டுமானம், சூரிய ஒளியில் இருந்து மின்சார உற்பத்தி செய்வதற்கான கட்டு மானங்கள், ஸ்மார்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், எண்ணெய் மற்றும் எரிவாயு பைப்லைன் மற்றும் மின்சார டிரான்ஸ் மிஷன் கேபிள்கள் போன்ற துறைகளில் இன்ஜினீயரிங், புரொக்யூர் மென்ட் மற்றும் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனமாக வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது.

நிறுவனத்தின் தொழில் பிரிவுகள்...

இந்த நிறுவனம் இயங்கிவரும் பெரும் தொழில் பிரிவுகள் என்ற ரீதியாகப் பார்த்தால், பவர் டிரான்ஸ்மிஷன் & டிஸ்ட்ரிப்யூஷன், ரயில்வே, சிவில் & அர்பன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், சோலார், ஸ்மார்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், ஆயில் & கேஸ் பைப்லைன்கள், கேபிள்கள் என்ற பெரும் பிரிவுகளில் இயங்கிவருகிறது.

இந்த நிறுவனம் இயங்கிவரும் தொழில் பிரிவுகளில் உள்ள செயல்பாடுகளின் ரீதியாகப் பார்த்தால், டர்ன்-கீ இ.பி.சி சொல்யூஷன்ஸ், இன்ஜினீயரிங் & டிசைன், மேனுஃபேக்சரிங், டவர் டெஸ்ட்டிங் மற்றும் தரத்தை உறுதி செய்தல் போன்ற துறைகளில் நல்ல அனுபவத்தைக் கொண்டு இயங்கி வருகிறது.

டர்ன்-கி தீர்வுகளை வழங்கி வருகிற இந்த நிறுவனத்தின் டிசைன் மற்றும் இன்ஜினீயரிங் பிரிவில் 275 இன்ஜினீயர்களைக் கொண்ட எட்டு இன்ஜினீயரிங் சென்டர்களுடன் (இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில்) செயல்பட்டுவருகிறது இந்த நிறுவனம்.

டிரான்ஸ்மிஷன் லைன் டிசைன் (டவர்கள், ஹைப்ரிட் போல்ஸ் மற்றும் மனோ போல்ஸ்), துணை மின்நிலையங்களை வடிவமைத்தல், சோலார் ஸ்ட்ரக்சர்களை உருவாக்குதல் போன்ற பிரிவுகளில் சிறந்த அனுபவத்தைக் கொண்டு 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது இந்த நிறுவனம்.

நிறுவனத்தின் சிறப்புகள்...

2021-22 நிதியாண்டின் இறுதி நிலவரப்படி, ரூ.23,716 கோடி அளவிலான ஆர்டர்களைக் கைவசம் வைத்துள்ளது இந்த நிறுவனம். 70 வருடங்களுக்கும் மேலான அனுபவம் மற்றும் செயல்திறன், எட்டு உற்பத்தி மையங்கள், 35-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சார்ந்த 9,100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் என 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் (இ.பி.சி பிரிவு: 70-க்கும் மேற்பட்ட நாடுகள், டவர் சப்ளை பிரிவு: 65-க்கும் மேற்பட்ட நாடுகள், கேபிள் ஏற்றுமதி பிரிவு: 90-க்கும் மேற்பட்ட நாடுகள்) தன்னுடைய கால்தடத்தைப் பதித்துள்ளது இந்த நிறுவனம்.

புராஜெக்ட்டுகளைக் கருத்துருவாக்குதல் நிலையில் இருந்து முழுமையாக நிர்மாணித்துக் கொடுத்தல் வரையிலான பல்வேறு மதிப்புக் கூட்டுதலுக்கான படிநிலைகளில் தலைசிறந்த அனுபவத்தைக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம். தன்னுடைய சிறந்த இன்ஜினீயரிங், புரொக்யூர் மென்ட் மற்றும் புராஜெக்ட்டுகளை நிர்வகிக்கும் திறனைக் கொண்டு உலக அளவில் பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமான கடுமையான சூழல்களில் பலதரப்பட்ட புராஜெக்டுகளைக் கடந்த காலத்தில் திறம்பட நிறைவேற்றித் தந்துள்ளது. கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக இ.பி.சி துறையில் சீரிய அனுபவத்தைக்கொண்டு செயல்பட்டு வாடிக்கையாளர்களுக்குத் தேவை யான புராஜெக்டுகளை சிறப்பான முறையில் உருவாக்கித் தந்துள்ளது இந்த நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் உற்பத்தி வசதிகள் என்கிற ரீதியில் பார்த்தால், ஆண்டொன்றுக்கு 4,22,200 மெட்ரிக் டன் என்கிற அளவி லான (டிரான்ஸ்மிஷன் டவர், ஸ்டீல் போல்கள், ஹார்டுவேர், ரயில்வே, சோலார் மற்றும் சப்-ஸ்டேஷன்களுக்கான ஸ்ட்ரக்சர்கள் உற்பத்தி செய்யும் வகையிலானவை) நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி வசதியைக் கொண்டுள்ளது. இதில் ரயில்வே ஸ்ட்ரக்சர்கள் உற்பத்தி என்பது 48,000 மெட்ரிக் டன் என்ற அளவிலும், சோலார் ஸ்ட்ரக்சர் உற்பத்தி என்பது 12,000 மெட்ரிக் டன் என்ற அளவிலும் இருக் கிறது.

டவர்கள் உற்பத்திக்காக இந்தியாவில் மூன்று, துபாயில் ஒன்று மற்றும் மெக்ஸிகோவில் ஒன்று என ஐந்து உற்பத்தி வசதிகளைக் கொண்டு இயங்கி வருகிறது இந்த நிறுவனம். டவர் டெஸ்டிங் பிரிவில் உலக அளவில் நான்கு டெஸ்ட்டிங் வசதிகளைக் கொண்டு இயங்கி வருகிறது இந்த நிறுவனம். அதே போல், 1,200 கிலோவாட் வரையிலான டவர்களை (லேட்டிஸ், கைய்டு, டியுபூலார் மற்றும் மோனோ போல்ஸ்) டெஸ்ட்டிங் செய்யும் வசதியை யும் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம்.

ரயில்வே தடத்தை மின்சார மயமாக்கல் பிரிவில் இதுவரை இந்திய ரயில்வேயின் மின்மய மாக்கப்பட்ட தடங்களில் கிட்டத்தட்ட 30% அளவிலான இருப்புப் பாதை தடத்தை மின்சார மயமாக்கிய பணியை இந்த நிறுவனமே செய்து முடித்துள்ளது. தற்சமயம் 50-க்கும் மேற்பட்ட ரயில்வே புராஜெக்டுகளைக் கைவசம் வைத்து பணிகளைச் செய்துவருகிறது. கட்டுமானப் பிரிவில் ஸ்லிப் ஃபார்ம் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி செயல் படும் நிறுவனங்களின் மத்தியில் உள்ள டாப் 10 கட்டுமான நிறுவனங் களில் ஒன்றாக இருக்கிறது.

சோலார் மின் உற்பத்திக்கான கட்டுமானப் பிரிவில் 150 மெகா வாட் வரையிலான கட்டு மானங் களை செய்யுமளவுக்கான திறனைக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம். 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் கேபிள்கள் பதித்துத் தருவதில் டேர்ன்-கி புராஜெக்ட்டுகளைச் செய்துவரும் இந்த நிறுவனம், ஆண்டொன்றுக்கு 40,000 கிலோ மீட்டர் நீளத்துக்கான கேபிள்கள் உற்பத்தி செய்யும் வசதியையும், ஆண்டொன்றுக்கு 3,600 கிலோ மீட்டர் அளவிலான இன்ஸ்ட்ரூ மென்டேஷன் கருவிகள் உற்பத்தி செய்யும் வசதியையும், ஆண்டொன்றுக்கு எட்டு லட்சம் பைபர் கிலோ மீட்டர் அளவிலான பைபர் கேபிள்கள் உற்பத்தி வசதியையும், ஆறு லட்சம் கண்டக்டர் கிலோ மீட்டர் அளவிலான காப்பர் டெலிகாம் கேபிள்கள் உற்பத்தி வசதியையும், ஆண்டொன்றுக்கு 2,040 மெட்ரிக் டன் அளவிலான சென்டனரி கன்டக்டர்கள் மற்றும் ஆண்டொன்றுக்கு 3,240 மெட்ரிக் டன் அளவிலான கான்டாக்ட் வயர்கள் உற்பத்தி செய்யும் வசதியையும் நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி வசதியாக (2021-22 நிதி ஆண்டின் இறுதி நிலவரப்படி) தன்வசத்தே கொண்டுள்ளது.

ரிஸ்க்குகள் என்னென்ன?

இன்ஃப்ராஸ்ட்ரக்சர் துறையில் இ.பி.சி பிரிவில் செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கு உரித்தான அனைத்து வகை ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்குப் பொருந்தும். அரசின் கொள்கை முடிவுகள், பொருளாதார வளர்ச்சியில் ஏற்படுகிற மாறுதல்கள் (தேக்கநிலை அல்லது எதிர்பார்த்த அளவிலான வளர்ச்சி இல்லாதுபோதல்), வேகமாக மாறிவரும் தொழில்ரீதியான சூழல்கள், போட்டி நிறுவனங்கள் உருவாக்கும் கடுமையான போட்டி, தொழில்நுட்பத்தில் வருகிற மாறுதல்கள், அந்நிய செலாவணி மதிப்பு மாறுதல், மூலப்பொருள்களின் விலை உயர்வு போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளே ஆகும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவு செய்த பின்னரே முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும்!


மேலும் படிக்க கே.இ.சி இன்டர்நேஷனல் லிமிடெட்! (BSE CODE: 532714, NSE SYMBOL: KEC)
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top