`26/11 பாணியில் மும்பையில் மீண்டும் ஒரு தாக்குதல்’ - பாகிஸ்தானில் இருந்து வந்த மிரட்டல்

0

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக வந்து தாக்குதலில் ஈடுபட்டனர். 10 தீவிரவாதிகள் நள்ளிரவில் படகு மூலம் மும்பை வந்து நடத்திய இத்தாக்குதல் இரண்டு நாள்கள் வரை நீடித்தது. உலகம் முழுவதும் இத்தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தாக்குதலில் தீவிரவாதிகள் 9 பேர் உட்பட 175 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் மும்பை போலீஸாருக்கு புதிய மிரட்டல் ஒன்று வந்திருக்கிறது. அதில், ``26/11-ல் மும்பையில் நடத்தப்பட்டது போன்ற ஒரு தாக்குதல் மீண்டும் நடத்தப்படும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் 6 பேர் ஈடுபடுவார்கள் என்றும், நான் எங்கு இருக்கிறேன் என்பதை வேண்டுமானால் சோதித்து பார்த்துக்கொள்ளலாம் என்று அந்த மிரட்டல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மும்பை டிராபிக் போலீஸ் கட்டுப்பாட்டு அறை வாட்ஸ்ஆப் எண்ணுக்கு இந்த மிரட்டல் அனுப்பப்பட்டு இருக்கிறது. இம்மிரட்டல் குறித்து மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய உளவு ஏஜென்சியும் இது குறித்து விசாரித்து வருகிறது. இந்த மிரட்டலை உறுதிபடுத்தும் விதமாக கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மும்பை அருகே கடற்கரையில் துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் மர்ம படகு ஒன்று கரை ஒதுக்கியது. ராய்கட் அருகே இப்படகு கரை ஒதுங்கிய இடத்தில் தேசிய புலனாய்வு ஏஜென்சியும், மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படையும் விசாரணை நடத்தி வருகிறது. ஆரம்பக்கட்ட விசாரணையில் இப்படகு ஆஸ்திரேலிய பெண் ஒருவருக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. அவரும், அவரின் கணவரும் படகில் சென்று கொண்டிருந்த போது எஞ்சினில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த படகை கைவிட்டுவிட்டு சென்றது தெரிய வந்துள்ளது.

படகு அப்படியே அலைகளில் இழுத்து வரப்பட்டுள்ளது. மும்பையில் அடுத்தடுத்து விழாக்காலங்கள் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விழாக்காலங்களில் பாகிஸ்தானில் இருந்து மிரட்டல் வந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இம்மிரட்டல் குறித்து மும்பை துணை போலீஸ் கமிஷனர் ஹரிபாலாஜியிடம் கேட்டதற்கு, ``மிரட்டல் செய்தியையடுத்து முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரவு ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.


மேலும் படிக்க `26/11 பாணியில் மும்பையில் மீண்டும் ஒரு தாக்குதல்’ - பாகிஸ்தானில் இருந்து வந்த மிரட்டல்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top